CWC: பாதியிலேயே கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர்! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஆறாவது சீசன், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த சீசனில், இதுவரை இல்லாத அளவிற்குப் பல உணர்ச்சிகரமான தருணங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த வார நிகழ்ச்சியில், ஜாங்கிரி மதுமிதா வெளியேறியது, போட்டியாளர்கள், கோமாளிகள் மற்றும் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுமிதாவின் வெளியேற்றம்
போட்டி முறை: இந்த சீசனில், ஸ்கோர் போர்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று வாரங்கள் நடைபெறும் போட்டியில், குறைவான மதிப்பெண்கள் எடுத்த போட்டியாளர் வெளியேற்றப்படுவார். இந்த வாரப் போட்டியின் முடிவில், ராஜூ ஜெயமோகன், நந்தகுமார், மதுமிதா மற்றும் ஷபானா ஆகியோர் டேஞ்சர் சோனில் இருந்தனர்.
எலிமினேஷன்
மூன்று வார மதிப்பெண்களின் அடிப்படையில், மதுமிதா மிகக் குறைவான மதிப்பெண்களை எடுத்திருந்தார். இதனால், அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேறுவதற்கு முன்பு, மதுமிதா, தனக்கும் சகப் போட்டியாளர்களுக்கும் இடையே இருந்த நட்பு குறித்துப் பேசி, கண்ணீர் மல்க விடைபெற்றார். அவரது வெளியேற்றம், சகப் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் என அனைவரையும் கண் கலங்க வைத்தது.
ரசிகர்களின் கருத்து
மதுமிதாவின் வெளியேற்றம், சமூக வலைதளங்களில் விவாதங்களையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள், "மதுமிதா, இந்த சீசனில் மூன்று நடுவர்களிடமிருந்தும் 10-10-10 என்ற முழு மதிப்பெண்களைப் பெற்ற முதல் போட்டியாளர். அவரது திறமை, நிகழ்ச்சியில் அவர் காட்டிய பங்களிப்பு காரணமாக, இந்த முடிவு நியாயமற்றது," என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது சமையல் திறனும், கோமாளிகளுடன் அவர் காட்டிய கெமிஸ்ட்ரியும், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்த நிலையில், இந்த வெளியேற்றம் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சி தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே வைத்துள்ளது. சூப்பர் சிங்கர், பிக் பாஸ், கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற பல ரியாலிட்டி ஷோக்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். குறிப்பாக குக் வித் கோமாளி தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான சமையல் மற்றும் நகைச்சுவை கலந்த நிகழ்ச்சி ஆகும். ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில சீசன்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் ஆறாவது சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
பிக் பாஸ் அனுபவம்
மதுமிதா, இதற்கு முன்பு 'பிக் பாஸ்' சீசன் 3-ல் கலந்து கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் மதுமிதா தற்கொலை முயற்சி வரை எடுத்திருந்தார். அதனால் அவர் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 'குக் வித் கோமாளி'யில் இருந்து அவர் வெளியேறியது, ரசிகர்களுக்கு மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications