CWC : குக் வித் கோமாளி சீசன் 6 பிரபலம் கைது.. இதுதான் காரணமா? பிரபலத்தால் வந்த பிரச்சனை!
சென்னை: மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, நகைச்சுவைக்காகப் பாராட்டப்பட்டாலும், சமீபகாலமாகத் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கொரோனா காலத்தில் தொடங்கிப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்த ஷோவின் ஆறாவது சீசன், சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று ராஜு அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதிச் சுற்றில் அவர் பகிர்ந்த ஒரு தகவல், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சர்ச்சை மேல் சர்ச்சை
லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஷபானா, அமரன், உமைர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட ஆறாவது சீசனின் இறுதிப் போட்டி, சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ராஜு வின்னர் என்று அறிவிக்கப்பட்டு, அவருக்குப் பரிசாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.
ஆனால், இந்த சீசன் தொடங்கியதிலிருந்தே பல விஷயங்கள் ரசிகர்களுக்கு நெருடலைத் தந்தன.
1. முந்தைய சீசன் சர்ச்சை ஐந்தாவது சீசனில் நடுவே நடந்த பிரியங்கா - மணிமேகலை இடையேயான தனிப்பட்ட பிரச்சனை, ஷோவின் கலகலப்பான சூழலை மாற்றி, 'வன்மம் ஷோ'வாக மாறியதாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.
2. மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம் இந்த சீசனில், மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான சில விஷயங்களும் சர்ச்சையைக் கிளப்பின.அதுபோல கோமாளியான புகழ், அடிக்கடி பெண்களைக் கட்டிப்பிடிப்பது குறித்து இணையத்தில் பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.
ராஜுவின் உருவ கேலி
தற்போது, இந்தச் சர்ச்சைகளின் வரிசையில் புதிதாக ஒரு பெரிய அதிர்ச்சித் தகவல் சேர்ந்துள்ளது. இந்தத் தகவலை டைட்டில் வின்னர் ராஜுவே இறுதி எபிசோடில் வெளியிட்டிருக்கிறார். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில், வழக்கமாகப் புதுமையான டாஸ்குகள் அமைக்கப்படுவதுண்டு. அதில் ஒரு எபிசோடில், தமிழ் மொழி தெரியாத வெளிநாட்டினரைக் கொண்டு வந்து, அவர்கள் குக் ஆக இருக்க, கோமாளிகள் அவர்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துச் சமைக்க வைக்கப்படுவர். அதில், சில வெளிநாட்டினரும் கலந்துகொண்டனர்.
அந்த எபிசோடிற்கு வந்திருந்த வெளிநாட்டவர் ஒருவரை, போட்டியாளர் ராஜு வாய்க்கு வந்தபடி கலாய்த்து விட்டார். அவருடைய உடல் தோற்றம் குறித்துச் செய்யப்பட்ட இந்தக் கேலி, இணையத்தில் கடுமையான எதிர்ப்பைக் கிளப்பியது. "நீங்கள் ஒருவரை உருவக் கேலி செய்கிறீர்கள், இது தவறு" என்று ரசிகர்கள் பலர் ராஜுவுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
ராஜு சொன்ன அதிர்ச்சித் தகவல்
இந்த விமர்சனங்கள் குறித்து, ராஜு இறுதி எபிசோடில் விளக்கம் அளித்தார். ராஜு இது குறித்துப் பேசுகையில், "நான் ஒரு ஃபாரினரைக் கலாய்த்து விட்டேன் என்று என்னை நிறைய பேர் திட்டினர். அதனால், அவரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவரைப் பார்க்கவே முடியவில்லை. காரணம், நான் அவரைக் கலாய்த்த வீடியோவும், எனக்குக் கண்டனம் தெரிவித்து வெளியான வீடியோக்களும் வைரலானது."

அதற்குப் பிறகு நடந்த விபரீதத்தைக் குறித்துப் பேசிய ராஜு, "இதையடுத்து, அவரை ஜெயில்ல போட்டு இருக்காங்களாம். காரணம், அவர் வொர்க் பர்மிட் இல்லாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம்" என்று கூறி, குக் வித் கோமாளி ரசிகர்களை அதிர வைத்தார்.
ஒரு நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்ட விஷயம், இணையத்தில் வைரலாகி, அதன் விளைவாக அந்த வெளிநாட்டு விருந்தினர் விசா விதிகளை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல், நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடர்ந்து பல சர்ச்சைகளைக் கிளப்பி வந்தாலும், இந்தச் சம்பவம், தனி மனித உரிமைகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த விவாதத்தை வலுவாக எழுப்பியுள்ளது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications