கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்!
சென்னை: சோசியல் மீடியாவில் வாட்டர் மெலன் ஸ்டார் என்று பிரபலமான திவாகர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டிருக்கிறார். அந்த சூட்டிங்கில் புகழ், கானா வினோத் மற்றும் மாகாபா தன்னை அடித்து கொலை மிரட்டல் விடுப்பதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.

சோசியல் மீடியா பிரபலம்
பிசியோதெரபி டாக்டரான திவாகர் சோசியல் மீடியாவில் நடிகர் சூர்யாவை போலவே தர்பூசணி சாப்பிட்டு ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமானார். அதற்கு பிறகு தனக்கு தானே வாட்டர்மெலன் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துக்கொண்டார். இவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸுக்குள் சண்டை
இந்த நிகழ்ச்சியில் அறிமுகமான முதல் நாளிலிருந்து தற்பெருமை பேசியே பெரிதாக பிரபலமானார். ஒரு சில நேரங்களில் அவர் பேசுவது ஐயோ பாவம் என்று சொல்வது போல இருந்தாலும், சில நேரங்களில் அவர் பேசுவது கடுப்பு ஏற்றுவதாகவே பலருக்கும் இருக்கும். ஆனாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொண்டதே கிடையாது. நான்தான் நடிப்பு அரக்கன் என்று பல இடங்களில் சொல்லி இருக்கிறார். அதனாலேயே உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது.
அதுவும் கானா வினோத்துக்கும் இவருக்கும் சொல்லவே வேண்டாம் இருவருக்கும் வாய்க்கால் வரப்பு சண்டை போடத்தான் எப்போதும் முட்டிக்கொண்டு இருந்தது. ஆரம்பத்தில் அந்த சண்டையில் ரசிக்கும்படியாக இருந்தது. அப்போது ஒரு முறை விஜய் சேதுபதி உங்க ரெண்டு பேருடைய சண்டை க்யூட்டா இருக்கு மக்கள் ரொம்ப ரசிக்கிறாங்க என்று சொன்னதிலிருந்து வாட்டர் மெலன் ஸ்டாரின் ஆக்டிவிட்டியே மாறி போனது.
அதற்கு பிறகு கானா வினோத் தன்னிடம் வந்தாலே எனக்கு இருக்கிற பிரபலத்தை வைத்து இவரும் பிரபலம் அடைவதற்காக என்னிடம் வருகிறார் என்று பல இடங்களில் பேசி இருக்கிறார். இதனால் இவர்கள் இருவருக்குள் சண்டை தான் வந்தது. அதனாலயே அவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கானா வினோத் தன்னுடைய மனைவியுடன் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.
சூட்டிங் ஸ்பாட்டில் சண்டை
அதே நிகழ்ச்சிக்கு கோமாளியாக வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரும் கலந்து கொண்டிருந்தார். அதற்கான சூட்டிங் நேற்று நடைபெற்றிருக்கிறது. காலையில் சூட்டிங் முடிந்ததும் இடைவேளை நேரத்தில் புகழும் கானா வினோத்தும் என்னிடம் வந்து தரக்குறைவாக பேசினார்கள், என்னை பற்றி மட்டுமல்லாமல் என்னுடைய குடும்பத்தை பற்றியும் பேசினார்கள், நான் நடிப்பு அரக்கன் என்று அந்த நிகழ்ச்சியில் பேசினேன் அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்காக என்னிடம் சண்டைக்கு வந்தார்கள்.
அப்போது மது போதையில் இருந்த மாகாபா என்ன நடந்தது என்று கேட்காமல் இரும்பு கம்பியை வைத்து அடித்து விட்டார் என்று நேற்று போலீசில் கம்பளைண்ட் கொடுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அதைத் தொடர்ந்து போலீஸ் கானா வினோத் மற்றும் புகழை கூப்பிட்டு விசாரித்ததாகவும் ஆனால் மாகாபா அங்கே வரவே இல்லை. ஸ்டேஷனுக்கு வந்த புகழும் கானா வினோத்தும் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை.
கமிஷனர் ஆபீஸில் புகார்
கானா வினோத்துக்கு ஏற்கனவே ரவுடிங்க நிறைய பேரு தெரியும், அதனால உன்னால இனி சென்னையில் வந்து ஷூட்டிங் வர முடியாது என்று கொலை மிரட்டல் விடுப்பதாக கமிஷனர் அலுவலகத்தில் திவாகர் புகார் கொடுத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications