Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாவம் பிரியங்கா.. அவங்களுக்கு 10 மடங்கு கஷ்டம்! இவ்வளவு விஷயம் இருக்கு! வெளிப்படையாக பேசிய சுஜிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சுஜிதா அந்த நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த போட்டியாளர்கள் பற்றி பேசி இருக்கிறார். அப்போது பிரியங்கா குறித்து பல தகவல்களை சுஜிதா பகிர்ந்திருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

இதுவரைக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி பேசாத ரசிகர்கள் கூட கடந்த சனிக்கிழமைக்கு பிறகு அந்த நிகழ்ச்சி பற்றியே பேசி வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விருந்து விலகப் போகிறேன் என்று கடந்த சனிக்கிழமை மாலையில் அறிவித்திருந்தார்.

priyanka manimegalai

அப்போதிலிருந்து இப்போ வரைக்கும் சமூக வலைத்தளங்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மணிமேகலை தான் விலகியதற்கு காரணம் பிரியங்கா தான் என்று மறைமுகமாக தெரிவித்து இருந்தார். இதனால் மணிமேகலை தமிழ் பொண்ணு அவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். தனக்கு தன்மானம் தான் முக்கியம் என்று நிகழ்ச்சியிலிருந்து வந்து விட்டார் என்று அவருக்கு அமோகமான ஆதரவு கிடைக்கிறது.

அதே நேரத்தில் பிரியங்கா அடுத்த மாநிலத்து பொண்ணு விஜய் டிவியில் வந்து தமிழ் தொகுப்பாளர்கள் பலரை வெளியேற்றி விட்டார் என்று அவர் மீது பெரும் கோபத்தில் இருக்கிறார்கள். அதோடு பிரியங்கா அதிகமாக இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகள் பேசி தொகுத்து வழங்குகிறார். ஆரம்பத்திலிருந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் ஒரு போட்டியாளர் என்பதை மறந்துதான் தொகுப்பாளர் போல செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்றும் சில திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

priyanka manimegalai

இந்த பிரச்சனைகளுக்கு இடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த சுஜிதா பேட்டி ஒன்றில் பிரியங்கா பற்றி பேசியது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. சுஜிதாவும் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறார். அவர்தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்று ஆரம்பத்திலிருந்து கூறப்பட்டது. பல வாரங்கள் செஃப் ஆஃப் வீக் பட்டம் வழங்கி இருக்கிறார்.

ஆனால் கடைசியில் பிரியங்கா தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனைகளுக்கு இடையே பிரியங்காவை பற்றி சுஜிதா பேசுகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதிகமாக உழைப்பை போடுவது என்றால் அது பிரியங்காவை சொல்வேன்.

பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிஸியாக இருக்கிறார். ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். நான் நடித்து வந்த சீரியல் முடிந்துவிட்டது. அதற்குப் பிறகு என்னுடைய குழந்தையை பார்த்து குடும்பத்தை கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் நமக்கு என்று ஒரு வருமானம் வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

priyanka manimegalai

ஆனால் பிரியங்காவிற்கு அது போன்று எதுவும் இல்லை. ஆனாலும் அவர் உழைக்க வேண்டும் நமக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடுகிறார். நான் ஒரு வாரம் நிகழ்ச்சியில் சமைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஏழு டிஷ் சமைத்து அதை மனதில் ஏற்றி வைத்துக்கொண்டு தான் போவேன். அதுபோல பிரியங்கா அவ்வளவு பிசியாக இருந்தாலும் அவரும் மெனக்கெட்டு பல டிஷ் கத்துக் கொண்டுதான் சமைக்கிறார். அதனால் என்ன விட அவருக்கு தான் 10 மடங்கு கஷ்டம் என்று சொல்வேன்.

அது மட்டுமல்லாமல் பிரியங்கா எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தை எனர்ஜி உள்ள இடமாக மாற்றி விடுவார். அதனால் எனக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்காவை ரொம்பவே பிடிக்கும் என்று சுஜிதா பேசியிருக்கிறார். அதே நேரத்தில் பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையே பிரச்சனை நடைபெற்றதற்கு முக்கிய காரணம் சுஜிதா என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

காரணம் சில வாரங்களுக்கு முன்பு ஒளிபரப்பான எபிசோடில் சுஜிதா தொகுப்பாளர் என்றால் பிரியங்கா தான் பிரியங்கா மட்டும்தான் போட்டியாளர்களை கம்பீரமாக ஸ்பெஷலாக வரவேற்பார் என்று சொல்லி அனைவரும் முன்பும் பிரியங்காவை ஒவ்வொரு போட்டியாளர்களாக வரவேற்க சொல்ல பிரியங்காவும் அதுபடியே செய்கிறார். அப்போது இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மணிமேகலையின் முகம் வாடி போய் விடுகிறது.

பிறகு செஃப் தாமு விஜய் டிவியில் தொகுப்பாளர் என்றால் அது பிரியங்கா தான். பிரியங்காவை யாராலும் அடிச்சுக்க முடியாது என்று சொல்ல, அதற்கு மணிமேகலை நாங்க போட்டியாளர்களை வரவேற்கும் போது மட்டும் தான் டிவியில் காட்டுகிறார்கள் அதையும் கெடுத்துறாதீங்க என்று மணிமேகலை சொல்ல, அதற்கு பிரியங்கா நான் சமைக்கிறதை டிவியில் காட்ட மாட்டேங்குறாங்க. தொகுத்து வழங்கினால் தான் காட்டுறாங்க.

அதனால நான் தொகுத்து வழங்குகிறேன். நீ போய் சமை என்று சொல்லி இருக்கிறார். இது அந்த நேரத்தில் ஜாலியாக இருந்தாலும் இதுதான் மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே பிரச்சனை உருவாவதற்கு முக்கிய புள்ளியாக இருந்திருக்க வேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் சுஜிதா இப்போது பிரியங்கா பற்றி பேசியது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லையா? மணிமேகலைக்கு உங்க சப்போட்டா? அல்லது பிரியங்காவிற்கு உங்கள் சப்போட்டா? கருத்த தட்டி விடுங்க பாஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+