போட்டுடைத்த பிரியங்கா.. ஒரே குஷி.. உடனே பண்ணை வீட்டில் போய் நின்ற மணிமேகலை.. தரமான பதிலடி இதுதானோ?
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியாளராக பிரியங்கா அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மணிமேகலை ஒரு பதிவு போட்டுள்ளார்.. இந்த இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த பதிவுக்கான விளக்கத்தையும் இணையவாசிகளே பதிவிட்டும் வருகிறார்கள்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியாளர்களை, நடிகர்கள் அரவிந்த்சாமி, கார்த்தி இருவருமே அறிவித்திருந்தனர்.. அதன்படி, பிரியங்கா - ராமர் ஜோடி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டுள்ளனர். பிரியங்காவுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.. கோமாளியாக ராமருக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

2வது பரிசை, சுஜிதா- புகழ் ஜோடி வெற்றி பெற்றுள்ளது.. இந்த ஜோடி 1 லட்சம் ரூபாய் பரிசாக பெற்றுள்ளார்கள்.. அதேபோல, குரேஷி - 1 லட்சம் சிறப்பு பரிசாக பெற்றுள்ளார்.
சுஜிதா: பிரியங்கா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், மணிமேகலை வெளிப்படுத்திவிட்டு போன அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மைதானோ என்று சந்தேகத்தை உறுதிப்படுத்தி வந்து கொண்டிருக்கிறது. சுஜிதாதான் முதல் பரிசு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்? அவருக்கு 2வது இடமா? என்றும் பொருமல்கள் எழுந்து வருகின்றன.
இதுஒருபுறமிருந்தாலும், முதல் பரிசை பெற்ற பிரியங்காவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.. தன்மீதான விமர்சனங்களுக்கு எந்த பதிலையும் சொல்லாமல், டைட்டில் வின்னர் பரிசு கிடைத்ததற்கும், தன்னை, மோட்டிவேட் செய்த அனைவருக்கும் நன்றி சொல்லி இருக்கிறார் பிரியங்கா.
வறுத்தெடுப்பேன்: "நாக்கு மேல் பல்லை போட்டு பலர் பேசும் இந்த காலத்தில், இந்த குக் வித் கோமாளி சீசன் முழுவதும் தனக்காக பேசிய அனைவருக்கும் நன்றி... எனக்கு போட்டி நான் மட்டும்தான். என்னிடம் சிக்கன் கொடுத்தால் அதை வறுத்தெடுப்பேன், ஆட்டை கொடுத்தால் ஆட்டுக்கால் பாயா செய்வேன், ஆழ்கடலை காட்டுங்கள் அந்த மீன்களுடன் ஜாலியாக இருந்து விடுவேன்" என்று கூறியிருந்தார். பிரியங்கா இப்படி சொல்வது, ஒருவேளை மணிமேகலையைதானோ? என்றும் பலர் கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், மணிமேகலையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.. அதில், தான் கட்டிவரும் பண்ணை வீட்டின் புகைப்படத்தை வெளியிட்டு, "இந்த இடம் தான் தனக்கு மகிழ்ச்சியும், சந்தோஷமும் தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மணிமேகலையின் இந்த பதிவுக்கு பின்னணியில் ஏதாவது மறைமுக காரணம் உள்ளதா? என்று தெரியவில்லை.
நச் பதில்: அதேபோல, பிரியங்கா நேற்றைய தினம் டைட்டில் வின்னர் பரிசை பெற்றதற்கும் எந்த கருத்தையும் சொல்லவில்லை.. இன்றைய தினம் இதற்கான பதிலடியை மணிமேகலை தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், இதற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல், தன்னுடைய பண்ணை வீட்டு போட்டோவை பதிவிட்டுள்ளார்.. இதன்மூலம் பிரியங்காவை பற்றி எதுவுமே பேசாமல், நச் பதிலடியை பிரியங்காவுக்கு மணிமேகலை தந்திருப்பதாக கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.. இந்த பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications