குக் வித் கோமாளியில் தொடரும் புதிய சர்ச்சை...என்ன இந்த சீசன் இப்படி இருக்கு??
சென்னை: தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்றாவது சீசன் தொடங்கி இருக்கும் நிலையில் ஆரம்பமே சர்ச்சையோடு தொடங்கியிருக்கிறது.
இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் அதிகமான சர்ச்சைகள் தொடர்ந்து வருவதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

மூன்றாவது சீசன் தொடக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்ற ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று பல ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இதற்கு முன்பு இரண்டு சீசன்களில் ஒளிபரப்பாகி இருந்தாலும், இரண்டுமே அதிக அளவில் வெற்றி பெற்று ரசிகர்களை என்டர்டைமண்ட் கொடுத்து இருந்தது. அதனால்தான் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது.

தொடரும் நெகட்டிவ் கருத்துக்கள்
ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த மூன்றாவது சீசன் தொடங்கி இருக்கும் நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் இந்த சீசனில் அதிகமான சர்ச்சைகளும் தொடங்கியிருக்கின்றது. எப்போதுமே ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது
ஆரம்பம் முதல் புதுப்புது சர்ச்சைகள் தொடங்கி வருகிறது. அதற்கான விளக்கங்களும் சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்து வந்து கொண்டிருந்தாலும் சமூகவலைத்தளத்தில் இதைப்பற்றி நெகட்டிவ் கமெண்ட் வந்த வண்ணமாகவே இருக்கிறது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

நடுவர் கொடுத்த பதில்
இந்த சீசனில் அதிகமான புதுமுகங்கள் அறிமுகமாகி இருக்கும்போது பரத் ஆரம்பத்தில் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் இருட்டேட் ஆக இருக்கிறது என்றும் இவர் புகழை காப்பி அடித்து கொண்டு செயல்படுகிறார் என்றும் பலவிதமான கருத்துக்கள் பரவி வந்தது. அதைத்தொடர்ந்து நடுவர்களாக இருக்கும் செப் போட்டியாளர்களை கம்பால் அடிப்பது பார்ப்பதற்கு நன்றாக இல்லை என ஒரு சில ரசிகர்கள் குறை கூறி வந்தனர். இதற்கு நடுவர்களான செஃப் வெங்கடேஷ் பட் விளக்கம் கொடுத்திருந்தார். நிகழ்ச்சியை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடப்பது எல்லாம் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டும் தான் என்றும் இதை வெறும் நிகழ்ச்சியாக பாருங்கள் என்று விளக்கம் கொடுத்திருந்தனர்.

மீண்டும் தொடங்கிய புது பிரச்சனை
தற்போது அதிர்ச்சி அருணை செஃப் தாமு மிரட்டுவது போல் ப்ரோமோ வந்தது.நிஜத்தில் அதிர்ச்சி அருணை ஜாலியாக பயமுறுத்துவதாக எபிசோடில் காட்டியிருந்தனர். இதைப்பார்த்த ஒருசில நெட்டிசன்கள் நெகட்டிவ் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடந்த பட், நிஜமான அக்கறையோடு பேசுபவர்களுக்கும் மட்டும் பதில் அளித்தால் போதும். சும்மா நெகட்டிவ் கருத்துக்களை பரப்புபவர்களுக்கு தான் இனி எந்த பதிலும் அளிக்க போவதில்லை என்று சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதிகமாக ரசிகர்களால் விரும்பப்படும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது தொடர்ந்து நெகட்டிவ் கருத்துக்கள் வந்து கொண்டிருப்பது அந்த நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications