Coolie 9th day box office: கூலியின் 9வது நாள் வசூல் இவ்வளவுதானா? ரஜினி படத்திற்கே இந்த நிலைமையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படும் திரைப்படங்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுகிறது. ஆனால் தியேட்டரில் படம் வெளியான பிறகு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அடி வாங்கி விடுகிறது. ஒரு படம் வெற்றி பெறுவதே கடினம். ஆனால், ஒரு படத்தை 'இண்டஸ்ட்ரியல் ஹிட்' ஆக்குவது அதைவிட சவாலானது. அப்படியொரு எதிர்பார்ப்புடன் வெளியானதுதான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படமான 'கூலி'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், 'மாஸ்டர்' மற்றும் 'விக்ரம்' போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணைத்தொட்டது. ஆனால், வெளியாகி ஒன்பது நாட்களுக்குப் பிறகு, படத்தின் வசூல் நிலவரம், பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Coolie War 2 Box Office Rajinikanth

பிரம்மாண்ட தொடக்கம், தடுமாறும் பயணம்

'கூலி' திரைப்படம், ரஜினியின் சினிமா பயணத்தின் 50-வது ஆண்டை கொண்டாடும் விதமாக, பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியானது. இதன் பிரம்மாண்டம், முதல் நான்கு நாட்களில் வசூலில் எதிரொலித்தது. உலகமெங்கும் ரூபாய் 404 கோடிகளை வசூல் செய்து, படம் வணிக ரீதியாக லாபத்தை உறுதி செய்தது. ஓடிடி உரிமை போன்ற வியாபாரங்களையும் கணக்கில் கொண்டால், 'கூலி' தோல்வியைத் தவிர்த்துவிட்டது என்றே சொல்லலாம்.

வசூல் வேகம் குறைந்ததற்கான காரணம்

ஆனால், நான்காம் நாளுக்குப் பிறகு படத்தின் வசூல் வேகம் மந்தமானது. விமர்சன ரீதியாக 'கூலி' ஒரு தோல்விப் படம் என்பதைப் படக்குழுவும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். பல விமர்சகர்கள், படத்தின் திரைக்கதையில் லாஜிக் இல்லை, நம்பகத்தன்மை இல்லை, உயிர்ப்பு இல்லை என்று கடுமையாக விமர்சித்தனர். ஒரு நாள் முழுக்கப் பேசினாலும், அதன் குறைகளை பட்டியலிடலாம் என கூறும் அளவுக்கு லோகேஷ் கனகராஜ் ஒரு பலவீனமான திரைக்கதையை அமைத்திருந்தார். இதுவே ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி, படம் தொடர்ந்து வசூல் செய்வதைத் தடுத்தது.

9-வது நாள் வசூல்

'சாக்னிக்' வலைத்தளத்தின் தகவல்படி, 'கூலி' திரைப்படம் முதல் ஒன்பது நாட்களில் இந்தியா முழுவதும் ரூபாய் 235.15 கோடிகள் வசூலித்துள்ளது. அதன் ஒன்பதாவது நாள் வசூல், இந்தியா முழுவதும் ரூபாய் 5.5 கோடிகள் மட்டுமே என்று கூறப்பட்டிருக்கிறது. ரஜினி போன்ற ஒரு பெரிய நடிகரின் படத்திற்கு, ஒரு நாள் வசூல் வெறும் ரூபாய் 5.5 கோடிகள் என்பது மிகக் குறைவானது. 'கூலி' திரைப்படம் ரூபாய் 1000 கோடிகளை வசூலிக்கும் முதல் தமிழ் படமாக மாறும் எனப் பலர் எதிர்பார்த்த நிலையில், தற்போது 500 முதல் 550 கோடிகளை எட்டுவதே சவாலாக மாறியுள்ளது.

கூலியின் வசூல் நிலவரம்

'கேஜிஎஃப் 2', 'பதான்', 'ஜவான்' போன்ற படங்கள் வார நாட்களிலும் தொடர்ந்து நல்ல வசூலை ஈட்டி ₹1000 கோடி சாதனையை எட்டின. ஆனால் ரஜினிகாந்த், அமீர் கான், நாகார்ஜுனா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்த 'கூலி' திரைப்படம் முதல் நான்கு நாட்களில் பெரிய வசூலைக் குவித்தாலும் வார நாட்களில் சற்று திணறி வருகிறது.

'கூலி' பட வில்லி ரச்சிதா ராம் யார் தெரியுமா? 'டிம்பிள் குயின்’, அந்த படங்களில் நடிப்பு! குடும்பத்தில் வந்த பிரச்சனை
'கூலி' ஒருவேளை, 'இந்தியன் 2', 'கங்குவா', 'விடாமுயற்சி' போன்ற படங்களுக்கு ஏற்பட்டதுபோல, பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி, ரசிகர்களை ஏமாற்றிய படங்களின் பட்டியலில் இடம்பிடிக்குமா என தமிழ் திரையுலகம் கவலையில் ஆழ்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+