கடலூரில் ஜோதிடர் சந்திரசேகர்.. என்னாது பனையூர் பங்களாவில் விஜய் சந்நியாசி வாழ்க்கை? பிரபலம் சொல்வதென்ன
சென்னை: விழா ஒன்றில், விஜய்யின் போட்டோவை அங்குள்ள திரையில் காண்பித்து இவரைப்பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று திரிஷாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, விஜய்யின் அரசியல் பயணத்தை குறிப்பிட்டு, ‛‛அவரது புதிய பயணத்திற்கு குட்லக். அவருடைய கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும். அவர் அதற்கான அனைத்து தகுதியும் கொண்டவர்'' என்று வாழ்த்தியிருந்தார் திரிஷா. இந்நிலையில், பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் விஜய்யின் கொள்கை என்ன? கோட்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "மதுரை மாநாட்டில் புஸ்ஸி ஆனந்த் ஒரு கருத்தை சொன்னார்.. அதாவது, "விஜய்யை இங்கே இட்டாண்டு வந்துட்டு, அங்கே இட்டாண்டு கொண்டுபோய் விடுவோம்" என்கிறார்.. ஜெயலலிதாவுக்கு ஒரு சசி என்றால், விஜய்க்கு ஒரு புஸ்ஸி..

நயன்தாராக்கள், திரிஷாக்கள்
அரசியல் என்பது காமராஜருக்கானது.. கக்கனுக்கானது.. பெரியாருக்கானது.. இங்கே என்னடான்னா விஜய் முதலமைச்சராவது திரிஷா ஆசியால் என்றெல்லாம் செய்தி வருகிறது.. இப்ப நாட்டுல திரிஷாவின் விருப்பம்தான் ரொம்ப முக்கியமா? திரிஷாவின் விருப்பம் என்ன என்று? 8 கோடி மக்களும் காத்துக்கிடக்கிறார்களா? திரிஷாக்களும், நயன்தாராக்களும்தான் தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கக்கூடிய சக்திகளா?
விஜய் சுற்றுப்பயணம் செல்கிறாராம்.. முதல்முறை, இரண்டாவது முறை சுற்றுப்பயணத்தில் அவரை பார்க்க கூட்டம் வரும்.. 3வது சுற்றுப்பயணத்தில், அவரை பார்ப்பதற்கே ஆள் இருக்காது.. எப்போதுமே அரசியல் உள்ள சினிமாக்காரர்களுக்கும், அரசியல் இல்லாத சினிமாக்காரர்களுக்கும் வேறுபாடு உண்டு.
35 நிமிஷம் பொதுக்கூட்டம்
விஜய், தான் நடத்திய 35 நிமிஷம் பொதுக்கூட்டத்தை மாநாடு என்கிறார்.. விக்கிரவாண்டியிலும் 35 நிமிஷம்தான்.. விக்கிரவாண்டியில் எழுதி வைத்து படித்ததையே மதுரையிலும் படித்துள்ளார்..
ஒரு சினிமா நடிகரை பார்க்கவே அன்றையதினம் கூட்டம் கூடியது.. இவர்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை.. இவர்களுக்கு யாரும் அரசியல் சொல்லி தரவில்லை.. அரசியல் தெரிந்தவர்கள் யாரும் விஜய்யுடன் இல்லை.. இதுதான் தவெக அரசியல்..
திமுக, அதிமுகவின் இரு அரசியல் கட்சிகளின் மீதும் வெறுப்புள்ள இளைஞர்களே, விஜய்யின் அரசியலை ஆதரிக்கிறார்கள்.. 18, 20 வயது இளைஞர்கள்தான், சினிமா கவர்ச்சி மூலம் ஈர்க்கப்பட்டுள்ளனர்.. இவர்கள்தான் தனக்கு ஓட்டு போட்டு முதலமைச்சராக்கி விடுவார்கள் என்று விஜய்யும் நம்புகிறார்..
விஜய்யின் கொள்கை? கோட்பாடு என்ன
ஒரு தலைவன் உருவாகிறான் என்றால், அவருடன் சேர்ந்து அவரது சித்தாந்தமும் உருவாகும், கொள்கையும் உருவாகும், கோட்பாடும் உருவாகும்..
உதாரணத்துக்கு பெரியார் உருவானபோது, திராவிட இயக்க கொள்கைகள் உருவானது. காரல் மார்க்ஸ் உருவானபோது கம்யூனிசம் உருவானது.. நீதிக்கட்சி உருவானது, திராவிட இயக்கத்துக்கு முன்னோடியான அரசியல் உருவானது.. பாஜக உருவானபோது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் உருவானது.. இப்போது மக்களை காப்பாற்றுவதற்காக விஜய் உருவாகியிருக்கும்போது, அவரது சித்தாந்தம் என்ன? கோட்பாடு என்ன? கொள்கை என்ன?
தன்னுடைய கொள்கை என்னன்னு விஜய்க்கே தெரியாது.. கடலூர் சந்திரசேகர் ஜோசியர் என்ன எழுதி கொடுக்கிறாரோ, அதுதான் விஜய்யின் கொள்கை.. தன்னுடைய 75 வயசான அம்மா, அப்பாவுக்கே இப்போதுதான் விஜய் வீடு வாங்கி தந்துள்ளார்.. ஆனால், ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி கொண்டு, 25 வருஷமாக பல்லாயிரம் கோடி வைத்திருக்கிறார் விஜய்..
பனையூர் வீட்டில் சந்நியாசி வாழ்க்கை?
மனைவி சங்கீதா, பெற்றோரையும் பிரிந்து, பனையூர் வீட்டில் தனியாக இருக்க வேண்டும், அதாவது மோடியை போல், உபி யோகியை போல் சந்நியாசியை போல் தனியாக இருந்தால்தான், தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியை அடைய முடியும் என்று சொல்லியிருக்கிறார் கடலூர் சந்திரசேகர்.. இவர் என்ன சொல்லுகிறாரோ, விஜய்யின் கொள்கையாக உள்ளது.
கடலூர் சந்திரசேகர் ஜோசியர்
ஜாதகம் பார்த்து, பிற்போக்குத்தனமான மூடநம்பிக்கையை வளர்க்கிற ஜோதிடம், மந்திரம் தந்திரம் என்றே விஜய் இருக்கும்போது, கொள்கைரீதியான நபர் என்று எதை இவரிடம் சொல்வது?
அண்ணாவுக்கு எதிரான நபரா? பெரியாரின் சித்தாந்தத்துக்கு எதிராக தர்க்கம் செய்யக்கூடிய நபரா? கம்யூனிஸ சித்தாந்தத்துக்கு மாற்றாக சிந்திக்கிக்கூடிய நபரா? விஜய்க்கு இதில் என்ன தெரியும்? என்றெல்லாம் காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications