1000 டான்சர்.. தினேஷை துரத்தும் ரூ.35 லட்சம், துபாய் பெண், பாலியல் பரபர! மாஸ்டர் மவுனம் ஏன்: பிரபலம்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விஜய் படம் 'லியோ.' இதில் ஒரு பாட்டுக்கு 1000 பேரை ஆட வைப்பதாக கூறி ரூ.35 லட்சத்தை வாங்கி அதை முறையீடு செய்ததாக நடன இயக்குனர் சங்கத்தின் தலைவராக இருக்கும் தினேஷ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் நடன இயக்குனர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என நடன இயக்குனர்கள் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கருத்து கூறியிருக்கிறார்.
King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக தினேஷ் உள்ளார்... சிறப்பான முறையில்தான் சங்கம் நடந்து கொண்டிருந்தது.. லியோ படத்தின்போது, நடனக்குழு உறுப்பினர்களுக்கு சம்பளம் தரப்படவில்லை என்று பிரச்சனை கிளம்பியது.. அதாவது 35 லட்சம் ரூபாய் வரவேண்டியிருந்தது என்று சொன்னார்கள்..

மோசடி புகார்
இப்போது அந்த பணம் கைக்கு வந்தும், தங்களுக்கு தராமல் மோசடி செய்துவிட்டார்கள் என்று தினேஷ் மீது குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றன. இதனிடையே, கனடாவை தன்னுடைய நாடாக தேர்ந்தெடுத்த டான்ஸ் மாஸ்டர் கௌரி சங்கர்.. தமிழரான இவர், சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார்..
சங்கத்தில் நிலவும் புகார்கள் குறித்து பலமுறை தினேஷ் மாஸ்டரிடம் புகார்கள் கொண்டுசென்றுள்ளார்.. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால், சங்கத்தலைவர் unfit என்று சொல்லிவிட்டார்.. இந்த பிரச்சனைக்கெல்லாம் மூலகாரணம் இதுதான்.
ஸாரி கேட்டிருக்கலாம்
Unfit என்பது கனமான வார்த்தைதான்.. இதற்கு ஸாரி கேட்டு விட்டிருக்க்லாம். ஆனால், கடைசிவரை தினேஷிடம் மன்னிப்பு கேட்கவில்லை.. எனவே, கௌரிசங்கரை தினேஷ் தரப்பினர் தாக்கியதாக தெரிகிறது. ஆனால், இது நடிகர் சங்க கட்டிடத்தில் உள்ள சிசிடிவியில் பதிவாகவில்லை..
அருகிலிருந்த கட்டிட பகுதிக்கு அழைத்து சென்று தாக்கியிருக்கிறார்கள்.. இது எதிர்பகுதியிலிருந்த கேமராவில் பதிவாகிவிட்டது. இங்கு unfit என்று பேசியதும் தவறு, அதற்காக அவரை தாக்கியதும் தவறு..
செல்வமணி சங்கம்
சங்கம் என்பதே ஒற்றுமைக்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இயக்குனர்கள் சங்கத்திலும் ஆர்.கே. செல்வமணிக்கு எதிராக சிலர் குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. தயாரிப்பாளர் சங்கத்திலும் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக பிரிந்துள்ளது.. இதில் நடப்பு தயாரிப்பாளர் சங்கம்தான் அறிக்கைகளை வெளியிட்டும், அரசிடம் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள்.. அந்த வகையில் சங்கங்கள் பிரிந்தே உள்ளன.. அதனால்தான் சினிமா இன்னும் பின்னுக்கு சென்று கொண்டிருக்கிறதா தெரியவில்லை.
நடன இயக்குனர் சங்கத்தில் கார்டு வாங்குவோர், துபாயில் சென்று டான்ஸ் ஆடக்கூடாது என்று ஏற்கனவே உத்தரவு உள்ளது. அப்படியிருந்தும் சில பெண்கள் துபாயில் சென்று நடனமாடியதாகவும், அது தொடர்பாகவும் தினேஷ் மாஸ்டர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மற்றொரு புகார் உள்ளது..
சில கட்டுப்பாடுகள்
இதற்கு காரணம் துபாயில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.. அந்த கட்டுப்பாடுகளை மீறி நடக்கும்போதுதான், அங்கு டான்சர்களை ஜெயிலில் அடைத்துவிடுகிறார்கள்.. வெறும் நடனமாட சென்றால் பரவாயில்லை, அதையும் தாண்டி வேறுசில தகாத செயலில் இறங்கும்போது தான் கைது வரை செல்கிறது..
ஆனால், உண்மையிலேயே துபாய் சென்று நடனமாட கூடாது என்று ரூல்ஸ் இங்கே இருக்கிறதா? அப்படி ரூல்ஸ் இருந்தும் நடனமாட சென்றது குறித்து எழுத்துப்பூர்வமாக தினேஷிடம் புகார் தரப்பட்டிருக்கிறதா? என்பதெல்லாம் உறுதியாக தெரியவில்லை..
அதேபோல, சங்க உறுப்பினர் ஒருவர்மீது பாலியல் புகார் தரப்பட்டது.. அதுகுறித்தும் தினேஷ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இன்னொரு குற்றச்சாட்டு உள்ளது. "பாலியல் புகார் சுமத்தப்பட்டவர் வீட்டில் கை நினைச்சு இருக்கேன், அவருக்கு எதிராக செயல்பட மாட்டேன்" என்று தினேஷ் சொன்னதாக கூறுகிறார்கள்..
தினேஷ் மாஸ்டர்
உணர்ச்சிபூர்வமாக, மனசாட்சியுடன் இவ்வாறு தினேஷ் மாஸ்டர் கூறியிருக்கிறார்.. "மெஜாரிட்டியாக நீங்கள் அனைவரும் என்ன முடிவெடுக்கிறீர்களோ, அதற்கு கட்டுப்படுகிறேன்" என்றும் கூறியிருக்கிறார்..
"நான் பதவியிலிருந்து விலகுகிறேன், அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்" என்றும் தினேஷ் மாஸ்டர் அறிவித்துவிட்டார்.. ஒருவேளை 35 லட்சம் பணத்தை தினேஷ் தரப்பினர் வாங்கியிருந்தால், தலைவர் பதவியிலிருந்து விலகினாலும், சம்பள பணத்தை பணிபுரிந்தோர்களுக்கு திருப்பி தந்துதான் ஆக வேண்டும்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications