வதந்திகள் வேண்டாம்..இதுதான் உண்மை.. உருக்கமாக பதிவு வெளியிட்ட தமிழும் சரஸ்வதியும் நடிகை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசு கேரக்டரில் தர்ஷனா நடிக்க வருகிறார்.
சீரியலில் இருந்து தர்ஷனா விலகப்போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
அதன் உண்மை காரணம் என்னவென்று தர்ஷனா உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கதாநாயகியை விடவும் அவருக்கு துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் வசுந்தரா கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. காரணம் புகுந்த வீட்டிற்காக தன் தாயை கூட எதிர்த்து நிற்கும் கேரக்டராகவும் அதே நேரத்தில் தப்பு என்று தெரிந்தால் கணவராக இருந்தாலும் சரி, யார் என்றாலும் சரி துணிந்து கேள்வி கேட்கும் நபராகவும் வசுந்தரா கேரக்டர் இருக்கிறார்.
அந்த கேரக்டரில் நடிக்கும் நடிகை தர்ஷனாவும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் இந்த சீரியலை விட்டு விலக இருக்கிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது. அது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், விடை பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. வசுந்தரா என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர். எப்போதும் என் இதயத்தில் இருப்பார்.
வசுந்தராவாக நான் செலவழித்த நேரத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் என் மீது இவ்வளவு அன்பை கொட்டியதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த கேரக்டரால் நிறைய கற்றுக் கொண்டேன். தனிப்பட்ட முறையில் நான் வளர்ந்து விட்டேன் என்று நினைக்கிறேன். அதற்கு நன்றி இந்த முழு பயணத்தையும், வண்ணமயமாகவும், வேடிக்கையாகவும் மாற்றிய அத்தகைய அற்புதமான நடிகர்களுடன் பணி புரிந்ததை நான் பெருமையாகவும் ஆசீர்வாதமும் உணர்கிறேன்.
நான் சம்பாதித்த நிபந்தனையற்ற அன்பு, ஆதரவு மற்றும் நட்சத்திர அந்தஸ்துக்கு தமிழும் சரஸ்வதியும், வசுந்தராவும் மட்டுமே காரணம். அது என்றும் மறக்கப்படாது. தினமும் என்னை ராணியாக உணர வைத்த ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி, எனக்கு அற்புதமான நினைவுகளை வழங்கிய எனது தமிழும் சரஸ்வதி குழுவினருக்கு நன்றி. இவ்வளவு திறமையான குழுவுடன் பணிபுரிந்து ஒரு சிறந்த அனுபவம் என் உணர்ச்சிகளை சொல்ல வார்த்தைகள் போதுமானதாக இருக்காது. ஆனால் நான் உங்கள் அனைவரையும் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
இந்த சீரியலை விட்டு விலக இருக்கும் செய்தி வெளியானதில் இருந்து நிறைய அன்பு காட்டிக்கொண்டிருக்கிறீர்கள். இதனால் நான் மிகுந்த அன்பை உணர்கிறேன். இந்த விஷயத்தில் நீங்கள் அனைவரும் நல்லதை காண்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி என்று தர்ஷனா பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் சீரியலை விட்டு போக வேண்டாம் என்று கருத்து தெரிவித்து வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களுடைய வருத்தத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
சிறகடிக்க ஆசையில் அதிரடி ட்விஸ்ட்... வீட்டையே அதிர வைத்த விஜயாவின் முடிவு... புது சிக்கலில் சிக்கிய முத்து! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications