அன்பே அன்பே கொல்லாதே...தர்ஷனாவை பார்த்து உருகும் ரசிகர்கள்
சென்னை: வெள்ளை உடையில் கொள்ளை கொள்ளும் அழகை காட்டி கலக்கும் தர்ஷனாவை பார்த்ததும் ரசிகர்கள் கதிகலங்கி போய் விட்டார்களாம்.
சின்னத்திரையின் திரிஷாவாக வலம் வந்து கொண்டிருக்கும் நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலின் கதாநாயகியைப் பார்த்து தான் பலர் கிறங்கி போயிருக்கிறார்கள்.
சுற்றி சுற்றி இவர் ஆட்டம் போடுவதை பார்த்து ரசிகர்களின் மனது றெக்கை கட்டிப் பறந்து வருகிறது.

சிரிப்பாலே கவர்ந்துவிட்டார்
சிரிக்கும் சிரிப்பாலே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு இருக்கும் நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலின் கதாநாயகி தர்ஷனாவின் லேட்டஸ்ட் வீடியோ தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது. சீரியல் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ரசிகர்கள் பட்டாளத்தை அதிகமாக வைத்திருக்கும் தர்ஷனா இப்போது இன்ஸ்டாகிராமில் கலக்கலான ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். முதல் சீரியலில் இவருக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் கிடைத்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

இதுதான் முதல் சீரியல்
வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி ஒரு சிலருக்குத்தான் முதல் வாய்ப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆகிவிடுகிறது .அந்த மாதிரிதான் தற்போது இவருக்கும் நடந்திருக்கிறது. ஒரு பல் மருத்துவரான தர்ஷனா காலேஜ் முடித்ததும் மாடலிங்கில் காலடி எடுத்து வைத்து அதன் மூலமாக சின்னத்திரையில் தடம் பதித்திருக்கிறார். இவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பு ஜீ தமிழில் சீரியலில் என்றாலும் இவருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருப்பது வெள்ளித்திரையில் கதாநாயகனாக கலக்கி கொண்டிருக்கும் ஜெய் ஆகாஷ். சீரியலில் இவருக்கும் கதாநாயகனுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் நன்றாகவே ரீச் ஆகிவிட்டது.
Recommended Video

ரசிகர்களின் மனதில் நல்ல மதிப்பு
நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலின் கதை 40 வயது ஆணுக்கும் இருபது வயது பெண்ணிற்கும் உள்ள காதலை மையமாகக் கொண்டதாக இருந்தாலும் இவர்கள் காதல் உணர்வு பூர்வமாக மட்டுமல்லாமல் தத்ரூபமாகவும் ரசிகர்களின் கண்களுக்கு தெரிந்து கொண்டிருக்கிறது. இந்த மாதிரி அமைவது எல்லாம் எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாது. ஆனால் இவருக்கு அந்த வாய்ப்பு நன்றாகவே கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை விட்டுவிடாமல் தர்ஷனாவும் கலக்கி வருகிறார். தற்போது இந்த சீரியலில் விறுவிறுப்பாக கதைக்களம் இருந்து வருவதால் ரசிகர்களிடம் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. டிஆர்பி யிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு
திரைப்படங்களின் கதையைப் போலவே தற்போது இந்த சீரியலின் கதையும் நகர்ந்து கொண்டு வருகிறது. இவர் மீது கொண்ட காதலுக்காக ஜெய்பிரகாஷ் இவர் வீட்டில் தங்கி இவர்கள் செய்யும் அன்றாட வேலைகளை செய்து வருகிறார். இதைப் பார்க்கும்போது ஜெயம் ரவியின் "உனக்கும் எனக்கும்" திரைப்படம் தான் அனைவருக்கும் நினைவில் வருகிறது. அதில் ஜெயம்ரவியின் கஷ்டங்களை பார்க்க முடியாமல் திரிஷா தவிப்பது போல இவரும் தவித்து வருகிறார். அதனாலேயே ரசிகர்கள் மத்தியில் இவர் மேலும் நல்ல மதிப்பை பெற்று விட்டார். இந்த நிலையில் இவர் சூட்டிங் ஸ்பாட்டில் மாடர்ன் உடையில் தேவதை போல உடை அணிந்து ஒரு ரீல்ஸ் வீடியோ எடுத்திருக்கிறார். இந்த வீடியோ தான் இவருடைய ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.












Click it and Unblock the Notifications