அதை எதுக்கு நீங்க அப்படி பார்த்துகிட்டு....நானே அப்படி காட்டுகிறேன்...கெத்து காட்டிய டிடி..
சென்னை: தன்னுடைய போட்டோவை ஸ்வைப் பண்ணி பார்க்கும் ரசிகர்களுக்காக தானே ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இன்ப அதிர்ச்சியை டிடி என்னும் திவ்யதர்ஷினி கொடுத்திருக்கிறார்.
இவருடைய அதிரடியான இந்த வீடியோவையும் கேப்ஷனையும் பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் கதி கலங்கித்தான் போயிருக்கிறார்கள்.
அடடா அழகே பொறாமைப்படும் விதத்தில் பேரழகியாக பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவில் கலக்கும் டிடி யை பார்த்து கவிதைகளை பொழியும் ரசிகர்கள் கூட்டம் அலை மொதுகிறது.

ரசிகர்களின் மனதை புரிந்து கொண்டார்
பல நாட்களுக்குப் பிறகு சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக மாறிய டிடி தற்போது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோக்களையும் வீடியோக்களையும் அப்லோட் பண்ணி வருகிறார். இவருடைய ரசிகர்கள் இதனை ஜாலியாக கொண்டாடி வருகின்றனர். இவருடைய ஒவ்வொரு போட்டோஸ்க்குமே லைக்களும், கமெண்டுகளும் போட்டிபோட்டுக்கொண்டு உயர்ந்து வருகிறது. ரசிகர்கள் பார்த்து பார்த்து கவிதைகளையும் பறக்க விட்டு வருகின்றனர். இவர் தொகுப்பாளராக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் சமூகவலைத்தளத்தில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தோடு தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

படபடவென வார்த்தைகள் சிதறுதே
இவர் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதிகமான பல திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்திருக்கிறார். அதுவும் சரோஜா, கோவா போன்ற திரைப்படங்களில் இவர் டப்பிங் ஆர்டிஸ்டாக இருந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் முதன்முதலில் விஜய் டிவியில் உங்கள் தீர்ப்பு என்னும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதற்குப்பிறகு ரெக்கை கட்டிய மனசு என்ற நிகழ்ச்சியின் மூலமாக ராஜ் டிவியிலும், கனவுகள் ஆயிரம் என்னும் சீரியல் மூலமாக ஜெயா டிவியிலும் நடித்திருக்கிறார். அதற்குப்பிறகுதான் அதிகமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அதுவும் இவர் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் 1 சீசன் 1 முதல் 7 வரைக்கும் இவர் தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து பாய்ஸ் வெட்ஸ் கேர்ள்ஸ், ஏர்டெல் சூப்பர் சிங்கர், டிடி உடன் காஃபி, அச்சம் தவிர், அன்புடன் டிடி போன்ற பல நிகழ்ச்சிகளும் இவருக்கு மைல்கல்லாக தான் அமைந்திருந்தது.

முயற்சிகளால் முன்னேற்றம் தான்
தற்போதெல்லாம் தொகுப்பாளர்கள் என்று சொன்னாலே பலவிதமான புதுமுகங்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களில் ஒரு சிலர் தான் டக்கென்று அனைவருக்கும் தெரியும். அதில் டிடியும் ஒருவர். திவ்யதர்ஷினி என்னும் பெயரை குறுக்கி டிடி என்று இவர் மாற்றிக் கொண்டாலும் ரசிகர்களுக்கு பரிச்சயமான நபராக தான் இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தன்னுடைய திறமையினால் இன்று வரைக்கும் இந்த நிலையில் உயர்ந்து வந்திருந்தாலும் இவர் வாழ்க்கையிலும் ஒரு சில சோகங்கள் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தனக்கு ஏற்பட்ட சோகங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தைரியமாகவே பல பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தனக்கு செட்டாகவில்லை என்று தெரிந்தால் அதனை தூக்கி எறிந்து விட வேண்டும் அதனோடு உட்கார்ந்து அழுதுகொண்டு இருக்கக்கூடாது, என வாழ்க்கையில் தான் பட்ட துன்பங்களை தூக்கி எறிந்துவிட்டு இவர் தற்போது பல பேருக்கு முன்மாதிரியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இது எப்படி இருக்கு சொல்லுங்க
இவருடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றாலும் அது தனக்கு செட்டாகவில்லை என்று தெரிந்ததும் அதனை தூக்கி எறிந்துவிட்டு இவர் மீண்டும் தன்னுடைய வேலைகளில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்.இவர் மீண்டும் பழைய மாதிரி ஜாலியாக வலம் வருவதை பார்த்ததும் இவருடைய ரசிகர்களும் இவருக்கு பெரும் ஆதரவை கொடுத்து வருகின்றனர். ரசிகர்களின் ஆதரவினால் இவர் கவலைகளை மறக்க வில்லை என்றாலும் தன்னுடைய சொந்த முயற்சியாலேயே இவர் இந்த அளவிற்கு பழைய நிலைக்கு வந்துவிட்டார். ஆனாலும் இவரிடம் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி போஸ்ட் போடுங்கள் என்று கேட்டுக்கொண்டு இருந்ததற்காக இப்போது இவர் அடிக்கடி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிட்ட போஸ்டர்கள் எல்லாமே வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இவருடைய போட்டோவை அடிக்கடி ரசிகர்கள் பலர் ஸ்வைப் பண்ணி பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். அதனால் அவர்களுக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம் என்று இவரே ஒரு ரீல்ஸ் வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். வீடியோ வெளியிட்டது மட்டுமல்லாமல் அந்த வீடியோ எப்படி இருக்கு சொல்லுங்க ஜி என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரசிகர்கள் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications