நடிகர் கவினை தொடர்ந்து தோழியை மனைவியாக ஆக்கிய சின்னத்திரை நடிகர்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த பூவே சீரியலில் நடிகர் அஜய் பரத் தன்னுடைய தோழியை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.
நடிகர் அஜய் பரத் திடீரென திருமணம் செய்து இருக்கும் நிலையில் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் சீரியல் நடிகருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆடி மாதம் முடிவடைந்தது ஆவணி மாதம் தொடங்கியதும், சுப நிகழ்ச்சிகள் களைகட்ட தொடங்கிவிட்டது. அதுவும் திருமண நிகழ்ச்சிகள் சொல்லவே வேண்டாம். ஆவணி மாதத்தில் முதல் முகூர்த்தத்தை பல திருமண வீட்டினர் குத்தகைக்கு எடுத்தது போன்று பத்திரிகைகளை குவித்து வருகின்றனர்.
சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் ஆவணி மாதம் தொடங்கியதும் திடீர் திருமணங்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கவின் அவருடைய நீண்ட நாள் தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டது பலருக்கும் தெரியும். ஏற்கனவே கவின் அவருடைய தோழியை காதலித்து திருமணம் செய்ய போகிறார் என்ற செய்தி சில நாட்களாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
ஆனாலும் கவின் உடைய திருமணம் பல பெண் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. இதை தொடர்ந்து தற்போது சின்னத்திரையிலும் பல நடிகர்கள் தொடர்ச்சியாக திருமணங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் சீரியல் நடிகர் அஜய் பரத் தனது நீண்ட நாள் தோழியை மனைவியாக கரம் பிடித்திருக்கிறார். சமீபத்தில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் தங்களுடைய திருமண புகைப்படங்களை அஜய் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அஜய் பரத் தெய்வம் தந்த பூவே சீரியல் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான். அது போல சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications