தெய்வமகள் சீரியல் நடிகரின் மகன் விபத்தில் மரணம்.. சாப்பிட்ட சோறு கூட செரிக்கல! கலங்க வைத்த காட்சி
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சார்ந்தவர் சின்னத்திரை நடிகர் கார்த்திக். இவர் நடிகர் ஆர்யா நடித்த சார்பட்டா திரைப்படம் உட்பட ஒரு சில திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய அளவில் ஹிட்டான தெய்வமகள் சீரியலில் அந்த சீரியலின் இறுதி தருணத்தில் போலீஸ் ஆபீசராக நடித்திருந்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சார்ந்தவர் சின்னத்திரை நடிகர் கார்த்திக். இவர் நடிகர் ஆர்யா நடித்த சார்பட்டா திரைப்படம் உட்பட ஒரு சில திரைப்படங்களில் ஹெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய அளவில் ஹிட்டான தெய்வமகள் சீரியலில் அந்த சீரியலின் இறுதி தருணத்தில் போலீஸ் ஆபீசராக நடித்திருந்தார்.

அவர்தான் அந்த சீரியலில் பிரகாஷ் மற்றும் சத்யாவிற்கு பல உதவிகளை செய்து இருப்பார். இவரது மகன் லித்திஷ் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் லித்திஷ் தீபாவளி கொண்டாட்டத்தை முடித்துவிட்டு தன்னுடைய நண்பர்கள் ஜெயகிருஷ்ணன் மற்றும் வெங்கட் ஆகியோருடன் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள விளையாட்டு திடலுக்கு காரில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது தரமணி 100 அடி சாலை விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் காரை ஓட்டி சென்ற இளைஞர் லித்திஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.
அவருடைய காரில் பயணம் செய்த அவருடைய நண்பர்கள் ஜெயகிருஷ்ணன் மற்றும் வெங்கட் இருவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உயிரிழந்த லித்திஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகனின் உடலை பார்த்து அவருடைய தந்தை கார்த்திக் கண்கலங்கி பேச முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

நண்பர்கள் மூன்று பேரும் காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்ததால் பரிதாபமாக அவருடைய உயிர் போய்விட்டது என்று கார்த்திக்கின் நண்பர் கண்கலங்கி பேசியிருக்கிறார். லித்தீஷ் கடைசியாக ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு இருக்கிறார். சாப்பிட்டுவிட்டு காரை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்.
சீட் பெல்ட்டை சரியாக அணியாமல் அவர் இருந்ததால் வண்டி இடித்ததும் அவருடைய நெஞ்சு பகுதியில் பலமாக அடிபட்டு இருக்கிறது. அப்போது அவர் சாப்பிட்ட சாப்பாடு கூட அப்படியே வாயிலிருந்து கொட்டி இருக்கிறது. அந்த உடலை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. பெற்றவர்களுடைய கஷ்டத்தை புரிஞ்சிக்காம குழந்தைகள் செய்யும் அலட்சியத்தால் பெற்றோர்கள் தான் வலி வேதனையை அனுபவிக்கிறார்கள்.
அதனால் தயவு செய்து இதுபோல அலட்சியமாக யாரும் வண்டியை ஓட்டாதீர்கள். எதுவும் நமக்கு நடக்காது என்ற நம்பிக்கையில் தான் பலரும் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள். நொடியில் எல்லோருடைய வாழ்க்கையிலும் எது வேணாலும் நடக்கலாம்.
எப்போ என்ன நடக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாது ஆனால் முடித்த அளவிற்கு தான் நம்முடைய வாழ்க்கை இருக்கிறது. நாம் அதற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். அது நமக்கு மட்டுமல்ல நம்மை சார்ந்த குடும்பத்திற்கும் நாம் செய்யும் பெரிய உதவி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications