தேவரை பற்றி தப்பா பேசாதீங்க! ‘தேசிய தலைவர்’ பட மேடையில் முற்றிய வாக்குவாதம்! ஆர்கே சுரேஷ் செய்த செயல்
சென்னை: 'ஊமை விழிகள்' படத்தைக் கொடுத்த இயக்குநர் ஆர். அரவிந்த்ராஜ் இயக்கத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் 'தேசியத் தலைவர்'. ஜே.எம். பஷீர் தேவராக நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், படத்தில் இணைந்திருந்த 'தேவர்' ஆராய்ச்சியாளர் நவமணி வைத்த குற்றச்சாட்டுகள், மேடையிலேயே காரசாரமான விவாதத்தைக் கிளப்பிருச்சு!

ஆராய்ச்சியாளரின் பகீர் குற்றச்சாட்டு
'தேவர்' குறித்த பல ஆய்வுக்கட்டுரைகளை எழுத வழிகாட்டிய நவமணி, இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் இருந்து படப்பிடிப்பு வரை படக்குழுவுக்கு ரொம்பவே உதவி செஞ்சிருக்காரு. ஆனா, விழாவுக்கு வந்த அவர் பேசும்போது, தான் படக்குழுவுடன் இணைந்ததில் ஏற்பட்ட மனவருத்தங்களை வெளிப்படுத்தினார்.
"2022-ல் என்னைப் படத்துக்காகக் கூப்பிட்டபோதே, 'இந்தக் படக்குழு சரியானது இல்லை; சேராதீர்கள்'னு சிலர் சொன்னாங்க. நானே, 'அவங்க என்ன கதை வச்சிருக்காங்கன்னு பார்ப்போம்'னு வந்தேன்"னு ஆரம்பிச்சார் நவமணி.
வரலாறு அல்ல, கலவரம்
அவர் உள்ளே வருவதற்கு முன்னால் இருந்த திரைக்கதையே வேறாம்! "1957-ல் வைத்த தீ இன்னைக்கும் எரிஞ்சிட்டு இருக்கு. ஒருவேளை அவங்க வச்சிருந்த அந்தக் கதையை எடுத்திருந்தா, இன்னொரு கலவரம் வந்திருக்கும்!" என்றும், அதனால்தான் ஒவ்வொன்றாக மாற்றி வந்ததாகவும் கூறினார்.
தேவர், 1950-ல் கொரியா யுத்தத்தில் கலந்து கொண்டது, விமானம் இயக்குவதைக் கற்றது போன்ற தகவல்களைத்தான் நேதாஜி ஜெயந்தி உரையில் சொன்னார். ஆனா, படத்துல பிரிட்டிஷ் காலத்துல நேதாஜி ராணுவத்துல தேவர் பயிற்சி பெற்றது போலவும், மக்களுக்குத் துப்பாக்கியைக் கொடுத்துப் பிரிட்டிஷாரைச் சுடுவது போலவும் காண்பிச்சா, அது எப்படி வரலாறாக முடியும்?ன்னு நவமணி கேள்வி எழுப்பினார்.
சென்சார் போர்டு சர்ச்சை
இந்தப் படம் ஏ.ஆர். பெருமாளின் புத்தகத்தை அடிப்படையாக வச்சு எடுத்ததாப் பல இடத்துல படக்குழு சொல்லியிருந்தாலும், எந்த இடத்துலேயும் அந்தப் புத்தகத்தோட பெயர் இல்லைன்னு நவமணி வருத்தம் தெரிவித்தார்.
மிகவும் கோபத்தின் உச்சிக்குப் போன நவமணி, "எனக்கே இன்னும் முழுமையா படம் போட்டுக் காண்பிக்கலை. சின்னச் சின்ன காட்சிகளாதான் காண்பிச்சாங்க. டப்பிங்ல மட்டும் 50 இடத்துல திருத்தம் சொன்னேன். அதைச் சரி செஞ்சாங்களான்னு கூடத் தெரியாது"ன்னு புலம்பினார்.
அதுலேயே பெரிய ஷாக் என்னன்னா... படத்தோட சென்சார் போர்டு சர்டிஃபிகேட்டை பார்த்த பிறகுதான் அவருக்கு நெஞ்சு வெடிச்சதாம்! "அந்த சர்டிஃபிகேட்ல, 'பத்திரிகையில் வந்த செய்தியைத் தழுவி உருவாக்கப்பட்ட கற்பனை'ன்னு குறிப்பிட்டிருக்கீங்க. இதுக்கு என்ன அர்த்தம்? இது வரலாறா இல்லை கற்பனைக் கதையா? இது ஒரு பெரிய மோசடி!"ன்னு சொல்லி மேடையிலேயே கேள்வி எழுப்பினார்.
மேடையிலேயே வாக்குவாதம்
நவமணி சரமாரியான குற்றச்சாட்டுகளை வைக்கும்போதே, இயக்குநர் ஆர். அரவிந்த்ராஜ் மேடையிலிருந்து இறங்கிப் போக ஆரம்பிச்சிட்டாரு! கூடவே, 'பேசத் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்'னு முணுமுணுக்கவும் செஞ்சாரு.
இதைக் கண்ட நவமணிக்கு இன்னும் கோபம் அதிகமாயிடுச்சு! கீழிருந்த மக்களைப் பார்த்து, "தேவரைப் பற்றித் தவறாகப் படம் எடுக்கிறார்கள் என்கிறேன். இயக்குநரை திட்டுவதாகக் குமுறுகிறீர்கள். தேவரைவிட இயக்குநர் என்ன அவ்வளவு பெரியவரா?" என்று கேள்வியெழுப்பினார்.
ஆர்.கே. சுரேஷின் சமாதானம்
இந்த வாக்குவாதத்துக்கு நடுவுல வந்த ஆர்.கே. சுரேஷ், நிலைமையைச் சமாளிக்கும் விதமாப் பேசினாரு. "நான் சென்சார் போர்டின் மெம்பர். நாம் என்னதான் உண்மைக் கதையை எடுத்தாலும், கற்பனை எனக் குறிப்பிட்டால்தான் சென்சார் போர்டு ஏத்துக்கும்"னு சொல்லி, நவமணி வச்ச எல்லா குற்றச்சாட்டையும் சென்சார் போர்டு விதியாகச் சுருக்கினார்.
அதுமட்டுமில்லாம, "நம் சமூக மக்களே இந்த மாதிரிப் படம் எடுக்க முயற்சி செய்யாதபோது, வேறு சமூக இயக்குநர் படம் எடுத்திருக்கிறார் என்றால், அவரை பாராட்டணும். 2.30 மணி நேரத்துல எல்லாத்தையும் காட்ட முடியாது. நீங்க விரும்பினா, அதே பஷீரை வச்சு முக்குலத்தோர் சமூகமே சேர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கலாம்"னு சமாதானம் சொன்னார்.
கடைசியில பேசிய நவமணி, "வரலாறுன்னா, வரலாறாகத்தான் இருக்கணும். தேவர் வாழ்க்கை வரலாறு தவறு இல்லாம வரணும்னுதான் நான் ஆசைப்படுறேன். 90 புத்தகம் வந்தாலும் யாரும் படிப்பதில்லை. ஆனா, படமாக வந்தால் எல்லோருக்கும் வரலாறு சேரும் என்பதால்தான் இவர்களுடன் இணைந்தேன்"னு தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார். அவர் சொன்ன 50 திருத்தங்களும் சரி செய்யப்பட்டு, படம் வெளியாகும்னு நம்பிக்கை தெரிவிச்சு, தனது பேச்சை முடித்தார்.
'ஊமை விழிகள்' இயக்குநர் எடுத்த இந்தப் படம், வெளியான பிறகு சர்ச்சையைக் கிளப்புமான்னு தெரியலை. ஆனா, இசை வெளியீட்டு விழாவே இப்படிப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது, படத்துக்கு ஒருவித எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்குன்னுதான் சொல்லணும்!
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications