rasaathi serial: நம்ம தேவயானியா இது.. மெருகு கூடி.. பார்க்கவே சூப்பரப்பு.. நடிப்பும் ஆஹா!
சென்னை: சன் டிவியின் ராசாத்தி சீரியல் கதை அங்க சுத்தி இங்க சுத்தி இப்போ தேவயானி... அதாவது சவுந்திரவல்லி கையில் வந்திருச்சு. தேவயானியும் மெருகு கூடி பார்க்க நல்லா இருக்காங்க.
ராசாத்தி சீரியல் ஆரம்பிச்ச புதுசில் நடிகர்கள் விஜயகுமார், செந்தில் இருவரும் மாபெரும் ஸ்டார் காஸ்ட் நட்சத்திரங்கள் என்று பார்க்கப்பட்டனர். அந்த எதிர்பார்ப்பிலேயே சீரியல் சென்றுக்கொண்டு இருந்தது.
இவர்கள் தவிர நடிகைகள் விசித்திரா, சுலக்ஷனா, நித்யா, தேவயானி என்று நட்சத்திர பட்டாளங்கள் சீரியலில் கூடி இருந்தனர். இவர்களில் இப்போது நித்யா, தேவயானி மட்டும்தான் நடித்து வருகின்றனர்

செந்தில் விஜயகுமார்
விஜகுமார் சன் டிவியின் வம்சம் போன்ற சீரியல்களில் நடிச்சு இருந்தாலும், ராசாத்தி அவரை இன்னொரு நாட்டாமை போல காண்பிக்கும் என்கிற எதிர்பார்ப்பு கெட்டப் விஜயகுமாருக்கு ராசாத்தி சீரியலில் இருந்தது. நகைச்சுவை நடிகர் செந்தில் கடந்த சில வருடங்களாக எந்த திரைப் படத்திலும் நடிக்கவில்லை.

செந்தில் பிளஸ்
எனவே, ராசாத்தி சீரியலுக்கு நகைச்சுவை நடிகர் செந்தில் ஒரு பிளஸ்ஸாக இருப்பார் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. விஜயகுமார் கதாபாத்திரம் சீரியல் ஆரம்பத்திலேயே இறந்து விட்டது. செந்தில் கதைப்படி ஒரு காரணமும் இல்லாமல் சீரியலில் இருந்து காணாமல் போய்விட்டார். ராசாத்தி சீரியல் மீது இருந்த எதிர்பார்ப்பு புஸ் ஆகிவிட்டது.

நடிகை விசித்திரா
நடிகை விசித்திரா முக்கியமான வில்லி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்து வந்தார். அவரை இழுவையே இல்லாமல் பொசுக்குன்னு ஜெயிலில் புடிச்சு போட்டு, அவரையும் சீரியலில் இப்போது பார்க்க முடியவில்லை. மீதம் இருப்பவர் தேவயானிதான். இவர் ராசாத்தி சீரியல் பல எபிஸோட்ஸ் கடந்த பின்னர் கதைக்குள் சவுந்திர வல்லியாக வந்தார்.

சந்தோஷம் குடும்பம்
சவுந்திரவல்லி தனது ஜமீன் குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும். தம்பிகள் சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும். இரு தம்பிகள் மூலமாக ஜாமீன் வாரிசு உருவாக வேண்டும் என்கிற கனவில் இருக்காங்க. ஆனால், மேனகா அந்த வீட்டுக்குள் இளைய மருமகளாக வர பிரச்சனைகளும் கிளம்பி உள்ளது. தம்பிகள் இருவரும் அடிச்சுக்கும் நிலையும் வரும்.. வாரிசுகள் கூட உருவாகாத நிலை வரும்னு ஜோதிடர் சொல்லிடறார். இந்த குடும்பத்தை கட்டிக் காத்து கொண்டு செல்லும் பொறுப்பு தேவயானி கையில் வந்து விட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications