“காதோரம் லோலாக்கு” பாட்டு பாடிய தேவயானி மகள் இனியா.. திடீரென தாய்மாமன் நகுல் செய்த செயல்! வியந்த அரங்கம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகை தேவயானி மகள் இனியா இந்த வாரத்தில் "காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி" என்ற பாடலை பாடி அசத்தியிருக்கிறார். அதுபோல இந்த வாரம் சிறப்பு விருந்தினராக வந்த நடிகர் நகுல் தன்னுடைய அக்கா மகள் இனியாவின் பாடலை கேட்டு வியந்து அவரை பாராட்டி இருந்தார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் தான் ஜூனியர்களுக்கான லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி திவினேஷ் வெற்றியாளராக தேர்வு ஆனார். அவரைத் தொடர்ந்து ஹேமித்ரா ரன்னராக தேர்வானார்.

தேவயானி மகள் பாடிய பாடல்
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் 21 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் இந்த வாரம் டூயட் ரவுண்டு நடைபெறுகிறது. அதுபோல இந்த வாரம் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் அதர்வா முரளி, நடிகர் நகுல் வந்திருக்கின்றனர். அதுபோல இந்த வாரத்தில் முதல் ப்ரோமோவில் தேவயானியின் மகள் இனியா "காதோரம் லோலாக்கு" என்ற பாடலை பாடி இருக்கிறார்.
நெகிழ்ந்த தாய்மாமன்
அந்த பாடலை கேட்டு வியந்த தேவயானியின் தம்பியான நகுல் சந்தோஷத்தில் ஓடி சென்று இனியாவை கட்டி அனைத்து பாராட்டி இருக்கிறார். "இவ்வளவு எனர்ஜிடிக்கா ஒரு பாட்டு பாடுவா என்று நான் நினைக்கவே இல்ல, இனியாவின் குரல் அவ்வளவு அருமையாக இருக்கிறது" என்று பாராட்டி இருந்தார். நடிகை தேவயானியின் மகள் முறைப்படி இசைப் பயிற்சி பெற்றிருக்கிறார். அது குறித்து ஏற்கனவே பல பேட்டிகளில் தேவயானி பேசி இருக்கிறார்.
குறையாத தன்னம்பிக்கை
ஆனால் சரிகமப நிகழ்ச்சியில் சாதாரண ஒரு போட்டியாளராக தன்னுடைய மகள் கலந்து கொண்டது குறித்து முதல் வாரத்திலேயே தேவயானி பெருமையாக பேசி இருந்தார். அப்போது என்னுடைய மகள் யாருடைய தயவும் இல்லாமல் மக்கள் முன்பு ஆதரவை பெற வேண்டும் என்று நினைத்துதான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தன்னுடைய சொந்த திறமையால் தான் முன்னுக்கு வரவேண்டும் என்று என்னுடைய மகள் நினைத்த இடத்தில் நான் வெற்றி பெற்று விட்டேன் என்று நினைக்கிறேன்.
மகளின் முயற்சி
என்னுடைய மகளுடைய உழைப்புக்கும், அவளுடைய முயற்சிக்கும் ஒரு தாயாக நான் துணை நிற்கிறேன் என்று பேசியிருந்தார். தேவயானி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் யாரிடமும் தன்னுடைய மகளுக்காக வாய்ப்பு கேட்டு அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தாமல் அவருடைய முயற்சியால் முன்னுக்கு வரவேண்டும் என்று தேவயானி எடுத்த முடிவை எல்லோரும் பாராட்டி வந்தனர்.

மாறாத பாரம்பரியம்
அதேபோல தேவயானியின் மகள் தன்னுடைய அம்மாவை போல இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பாவாடை தாவணியிலே வந்து கொண்டிருக்கிறார். அதை குறித்தும் பலரும் பாராட்டி வருகிறார்கள். அதுபோல இந்த வாரத்தில் ஸ்ரீஹரி மற்றும் சுஸ்ஹாந்திகா இருவரும் இணைந்து "உப்பு கருவாடு ஊற வச்ச சோறு" என்ற பாடலை பாடி இருக்கின்றனர். அப்போது இந்த பாடலுக்கு மொத்த போட்டியாளர்களும் சேர்ந்து டான்ஸ் ஆடி இருந்தனர். இந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications