சரிகமபவில் "தனிமையிலே இனிமை" பாடலை பாடிய இனியா! தேவயானி கொடுத்த கியூட் ரியாக்ஷன்
சென்னை: ஜீ தமிழில் சரிகமபவில் தேவயானி மகள் இனியா, பிளாக் அன்ட் ஒயிட் ரவுண்டில் தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற பாடலை பாடி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். இதற்கு தேவயானி கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
ஜீ தமிழில் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த சினேகா, தேவயானி மகள் இனியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடி வருகிறார்கள்.

கடந்த வாரம் வித்யாசாகர் ரவுண்டு நடந்த நிலையில் இந்த வாரம் பிளாக் அன்ட் ஒயிட் ரவுண்டு நடந்தது. இதில் போட்டியாளர்கள் பழைய பாடல்களை பாடினர். அந்த வகையில் தேவயானியின் மகள் இனியாவும் ஹரிஷ் ராகவ் என்பவரும் சேர்ந்து "ஆடிப்பெருக்கு" என்ற திரைப்படத்தில் "தனிமையிலே இனிமை காண முடியுமா" என்ற பாடலை பாடினர்.
இந்த பாடல் ஜெமினி கணேசன்- சரோஜா தேவி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பாடலுக்கு இசை ஏ.எம்.ராஜா, இதை பி.சுசீலாவுடன் பாடியவர் ஏ.எம்.ராஜாதான். இந்த பாடல் நல்லதொரு காதல் பாட்டு. இதை இனியாவும் ஹரிஷும் நன்றாகவே பாடினர். மகள் பாடுவதை ஒவ்வொரு வாரமும் தேவயானி கேட்டு வருகிறார்.
கடந்த முறை "வா வா தேவதை" பாடல் பாடிய போது தேவயானி கண்ணீர் விட்டார். இந்த முறை மகள் சரியாக ஹை பிச்சில் பாடி முடித்த போது சரியாக பாடிவிட்டார் என்ற திருப்தியுடன் தலையசைத்து ரசித்து வந்தார்.
நடிகை தேவயானி மற்றும் இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியரின் மூத்த மகள் தான் இனியா. இனியா சமீப காலமாக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறார். அதற்குக் காரணம், அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 என்ற பாடல் போட்டியில் போட்டியாளராகக் கலந்துகொண்டதுதான்.
இனியா சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற விருப்பத்துடன் அதற்கான படிப்புகளையும் முடித்துள்ளார். மேலும், பாடல் பாடுவதிலும் அவருக்கு அதிக ஆர்வம் உள்ளதால் அதற்கான பயிற்சிகளையும் எடுத்து வருகிறார். சரிகமப மேடையில் அவர் பாடிய பாடல்கள் பலரையும் கவர்ந்துள்ளன.
"மயில் போல பொண்ணு ஒன்னு", "பல்லாங்குழியில் வட்டம்", "காதோரம் லோலாக்கு" உள்ளிட்ட பாடல்களையும் பாடியுள்ளார். குறிப்பாக, "அபியும் நானும்" திரைப்படத்தில் இடம்பெற்ற "வா வா என் தேவதையே" மற்றும் "மயில் போல பொண்ணு ஒன்னு" போன்ற பாடல்களைப் பாடி நடுவர்களிடமும் ரசிகர்களிடமும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
இந்த பாடலை இனியா பாடும் போது தேவயானி கண்ணீர் விட்டது குறித்து கேட்டபோது, "இந்தக் பாடலில் பெண் குரல் இல்லை, ஆண் பாடுவதுதான். இதை இனியா எப்படிப் பாடப் போகிறார் எனப் பயந்துகொண்டிருந்தேன். அவளும் பயந்தாள். நான் சொன்னேன், 'நீ தைரியமாகப் பாடு, ஒரு female versionஐ நீ உருவாக்குகிறாய்' எனச் சொன்னேன். சங்கதிகள், சரணம் எல்லாம் எப்படி கொண்டு வருவார் எனக் கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருந்தேன். பல்லவி எல்லாம் முடிந்ததும் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது," என தேவயானி விளக்கினார்.
மேலும், இனியா விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.












Click it and Unblock the Notifications