சுத்தியல் படம் போட்டு என்னன்னு கேட்க போயி... என்னய்யா இப்படி பண்ணிட்டீங்களேய்யா...!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    #PrayForNesamani | டிவிட்டரில் டிரெண்டாகும் 'காண்டிராக்டர் நேசமணி' ஹேஷ்டேக்- வீடியோ

    சென்னை: ட்வீட்டர் சமூக வலைத் தளத்தில் சுத்தியல் படம் போட்டு இது என்னனு ஒருத்தர் கேட்டாலும் கேட்டார்.... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மான்னு ஆகிப் போச்சு.

    அதுக்கு பதில் ட்வீட் கொடுத்த இன்னொருத்தர் விஜய் சூர்யா நடித்த ஃபிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு சுத்தியலால் அடிவாங்கும் சீனை அப்படியே போட்டு, இதுதான் சுத்தியல்.

    இந்த சுத்தியலில் மண்டையில் அடிச்சா டொங்கு டொங்குன்னு சத்தம் கேட்கும்ன்னு பதில்சொல்லி இருக்கார். அதுக்கு இன்னொரு ஃபாலோயர்..அடடா நேசமணிக்கு என்னாச்சுன்னு கேட்க..அவருக்கு அடிபட்டு ஆஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கார்னு பதில் ட்வீட் போட்டு இருக்கார்.

    நிற்காமல் போய்ட்டிருக்கே

    நிற்காமல் போய்ட்டிருக்கே

    இது இப்படியே நிக்கலை..தொடர்ந்து குறும்பு குசலம் விசாரிச்சு நிக்காம போயிகிட்டு இருக்கு. இதுல ஒரு ரகசியம் என்ன தெரியுமா... வடிவேலுவின் பேர்தான் நேசமணி. நெட்டிசன்கள் கலாய்த்து வருவதும் இவரைத்தான்.

    தன்ஷிகா வேற

    தன்ஷிகா வேற

    இப்படியே நெட்டிசன்கள் கலாய்ப்பிலிருக்க நம்ம நடிகை சாய் தன்ஷிகா டிக்டாக் செய்து தனது ட்வீட்டர் வலை தளத்தில் பதிவிட்டுள்ளதும் நல்லாத்தான் இருக்கு.

    வடிவேலு பேசிய வசனம்

    வடிவேலு பேசிய வசனம்

    வடிவேலு பேசும் வசனமான என்னது ஒங்கப்பா வருவாரா... இல்லை அப்ரன்டீஸுங்கன்னு பதில் சொல்ல.. அப்ரன்டீஸுங்களா.. அப்டீன்னான்னு கேட்கறார் வடிவேலு.

    அப்ரண்டீஸ்களா

    அப்ரண்டீஸ்களா

    அதான் சித்தப்பா.. சம்பளம் இல்லாம வேலை செய்யறவங்க... அப்படியா.. அப்டீன்னா நம்மகிட்ட இருக்கற ஆளுங்களை பத்திட்டு அப்ரன்டீஸுங்களா சேர்த்துக்கலாமான்னு வடிவேலு கேட்பதை டிக் டாக் செய்துள்ளார் .

    முதலிடத்தில்

    முதலிடத்தில்

    இப்படி வரிசையாக நெட்டிசன்கள் வலை பின்னல் தொடர தொடர இன்று நேஷனல் அளவில் நேசமணி ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கார்.எதையோ எதிர்பார்த்து காத்திருந்த நேசமணிக்கு இதிலாவது முதலிடம் கிடைத்ததே..நெட்டிசன்களை பாராட்டலாம்.

    இதுதான் குடும்பம்

    நேசமணியின் உடல் நிலை ரொம்ப மோசமாக இருப்பதால் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனராம். நேசமணியோட அம்மா, மகள், அப்பா, மாமா நாய் சேகர், எல்லோரும் விரைந்துள்ளனராம். ஹய்யோ ஹய்யோ முடியலை சாமி.

    மக்கள் போராட்டமாம்

    நேசமணிக்காக மக்கள் போராட்டமெல்லாம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்களாம். இன்னும் என்னென்ன அக்கப் போர் எல்லாம் பண்ணப் போறாங்கன்னு தெரியலையே.

    அடேய் கோவாலு

    எல்லாரும் நேசமணியைப் பத்தியே பேசறீங்களே.. அந்த அப்பாவி கோவாலுவை யாரும் கண்டுக்கவே இல்லையே என்று இவர் சப்போர்ட் செய்கிறார் இப்படியே போய்ட்டிருந்தா எப்படிப்பா.. யாராச்சும் நிறுத்தி அடுத்த மேட்டருக்கு வாங்களேன்பா.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+