விவாகரத்திற்கு முன்பு கடைசியாக தனியாக பேசிய தனுஷ்- ஐஸ்வர்யா.. பிள்ளைகள் இனி யார் பொறுப்பில்?
சென்னை: நடிகர் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவிற்கும் சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து ஆனது. ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் யாருடன் வாழ்வார்கள் என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் அது பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சில மாதங்களாகவே தனுஷ் பற்றிய செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. அது போல இந்த வருடத்தில் அதிகமான திறை பிரபலங்கள் திடீர் விவாகரத்து செய்தியை அறிவித்து வருகிறார்கள். அதில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தான் டாப்.

ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக பிரிவது அறிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இவர்களை போலவே ஒன்றாக விவாகரத்தை அறிவித்திருந்தார்கள். அடுத்ததாக பல பிரபலங்கள் விவாகரத்து செய்திகளை அறிவித்து கொண்டிருக்கின்றனர்.
இயக்குனரும் ரஜினிகாந்தின் மகளும் ஐஸ்வர்யாவிற்கும் தனுஷுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்களுடைய வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது. இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
ஆனால் திடீரென்று அவர்களுடைய வாழ்க்கையில் புயல்வீச தொடங்க, இருவரும் 2022 ஆம் ஆண்டு பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தனர். இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. தங்களின் பிரிவை அறிவித்த பிறகு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் நிகழ்ச்சியில் ஒன்றாக வரவில்லை.
இருவரும் தனித்தனியாக தான் வந்து கொண்டு இருந்தனர். தங்களுடைய விவாகரத்தை அறிவித்த பிறகு எந்த இடத்திலும் அது பற்றி பேசவில்லை. ஆனால் ரஜினிகாந்தின் குடும்பத்தினரும் தனுஷ் குடும்பத்தினரும் இவர்களை சேர்த்து வைக்க பல முயற்சிகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி இருக்கிறது.
இவர்கள் இருவரும் பிரிவதில் உறுதியாக இருந்திருக்கின்றனர். ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது தனுஷ் வந்தால் ஐஸ்வர்யா வராமல் இருப்பார், ஐஸ்வர்யா வந்தால் தனுஷ் வராமல் இருப்பார். இதனால் இவர்கள் இருவருக்கும் பிரிவதற்கு மனமில்லை என்றெல்லாம் செய்திகள் பரவி வந்தன.
ஆனால் இந்த வழக்கின் கடைசி ஹியரிங் நவம்பர் 27ஆம் நடைபெற்றது. அப்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே நேரில் ஆஜராகி இருந்தனர். அப்போதும் தாங்கள் பிரிவதில் உறுதியாக இருந்ததால் இவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி இருக்கிறது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்து இருப்பதை தொடர்ந்து அவர்களுடைய குழந்தைகள் யாத்ரா மற்றும் லிங்கா யாரிடம் வளர்வார்கள் என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்படி கோ பேரண்டிங் முறையில் தங்களின் குழந்தைகளை இருவரும் வளர்த்தார்களோ அதுபோலவே இப்போதும் தனுஷும் ஐஸ்வர்யாவும் வளர்ப்பார்கள் என்று கூறப்படுகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications