தனுஷ் செய்வதை அப்படியே செய்கிறார் சிவகார்த்திகேயன்! பிரிவுக்கு காரணம் அந்த சம்பவம்! தயாரிப்பாளர் ஓபன்
சென்னை: தமிழ் சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையேயான திரை உறவு, தற்போது சர்ச்சைப் பொருளாக மாறியுள்ளது. சிவகார்த்திகேயன் தன் கேரியரில் கவனம் செலுத்தாமல், தனுஷைப் போலவே எல்லா விஷயங்களையும் செய்ய முயற்சிப்பதாகவும், இது அவரது வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பகிரங்கமாகப் பேட்டி அளித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஆரம்ப பயணம்
சிவகார்த்திகேயன், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அட்லீ, அட்லீயின் மனைவி பிரியா, நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோருடன் நல்ல நண்பராக இருந்தார். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிப் பிரபலமானப் பிறகு, பாண்டிராஜ் இயக்கிய 'மெரீனா' படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதற்குப் பிறகுடி. இமானின் பரிந்துரையின் பேரில், 'மனம் கொத்திப் பறவை' என்றப் படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
தனுஷின் ஆதரவு
சிவகார்த்திகேயனின் திரை வாழ்வில் மிகப்பெரியத் திருப்புமுனையை ஏற்படுத்தியது நடிகர் தனுஷ்தான். 3 திரைப்படத்தில் தனுஷின் நண்பராகக் காமெடி வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்தார். அப்போது, சிவகார்த்திகேயன், அனிருத், தனுஷ் மூவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். அப்போதுதான் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுக்கலாம் எனத் தனுஷுக்கு யோசனை வந்தது. அதன்படி, பெரிய அளவில் செலவு செய்து 'எதிர்நீச்சல்' திரைப்படத்தைத் தயாரித்தார். அந்தத் திரைப்படத்தில் நயன்தாராவை ஒரே ஒரு பாட்டுக்கு நடனமாடவும் வைத்திருந்தார் தனுஷ்.
பாலாஜி பிரபுவின் கருத்து
சமீபத்தில் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் அப்போது சிவகார்த்திகேயன் குறித்து அவர் பேசும் போது, அந்த நேரத்தில் தனுஷ் மட்டும் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து 'எதிர்நீச்சல்' படத்தை எடுக்கவில்லை என்றால், சிவகார்த்திகேயன் பத்தில் ஒரு நடிகராகத்தான் இருந்திருப்பார் என்று பாலாஜி பிரபு கூறியிருக்கிறார்.
துரோகமும், விரிசலும்
தனுஷ் கொடுத்த வாய்ப்புகள் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு வித்திட்ட நிலையில், இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்ட சம்பவம் குறித்தத் தகவலும் வெளியானது. தனுஷ், சிவகார்த்திகேயனை வைத்து இரண்டாவதாக 'காக்கி சட்டை' என்றப் படத்தைத் தயாரித்தார். அந்தத் திரைப்படமும் நல்ல லாபத்தைக் கொடுத்தது.
மூன்றாவதாக ஒரு திரைப்படத்தை எடுப்பதற்காகச் சிவகார்த்திகேயனை அணுகியபோது, அவர் வேறு ஒரு படத்தில் கமிட்டாகி விட்டதாகவும், அந்தப் படத்தில் நல்ல சம்பளம் தருகிறார்கள் எனச் சொல்லி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், "உங்கள் படத்தில் நடிக்க சம்பளம் தருவீர்களா?" எனக் கேட்டதால் தனுஷ் அதிர்ச்சியடைந்து எதுவுமே சொல்லாமல் வெளியே வந்திருக்கிறார். இதனால், தனுஷ் சிவகார்த்திகேயனுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.
தற்போது சிவகார்த்திகேயன் வேண்டுமென்றே தனுஷுடன் போட்டி போடுவதாகப் பாலாஜி பிரபு குற்றம் சாட்டியுள்ளார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'டாக்டர்', 'ரெமோ' என அடுத்தடுத்துத் திரைப்படங்கள் வெற்றி பெற ஆரம்பித்தவுடன், தான் ஒரு ஸ்டார் நடிகர் என்ற எண்ணம் சிவகார்த்திகேயனுக்கு வந்திருக்கிறது. தனுஷ் என்னவெல்லாம் செய்கிறாரோ, அதையெல்லாம் வேண்டுமென்றே சிவகார்த்திகேயன் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
தனுஷின் அலுவலகத்துக்கு எதிரே வேண்டுமென்றே சிவகார்த்திகேயனும் ஒரு அலுவலகத்தைப் போட்டு, ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். தனுஷ் கார் வாங்கினால், அதேபோலச் சிவகார்த்திகேயனும் வேண்டுமென்றே கார் வாங்கி அவருடன் போட்டி போட ஆரம்பித்து விட்டார். இதுமட்டுமல்லாமல், படத்தின் கதையில் சிவகார்த்திகேயன் அதிகம் தலையிடுவதாகவும், இதனால்தான் 'பிரின்ஸ்', 'மாவீரன்', போன்ற படங்கள் தோல்வி அடைந்தன என்றும் பாலாஜி பிரபு அந்தப் பேட்டியில் பேசியிருக்கிறார்.
தற்போது சிவகார்த்திகேயன் 'பராசக்தி' படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நிலையில், அவரது 24வது படத்தின் வேலைகளும் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டு இருக்கின்றது. தனுஷைப் பின்பற்றும் இந்த மனப்போக்கு, சிவகார்த்திகேயனின் தனிப்பட்ட வளர்ச்சிக்குத் தடையாக அமையுமோ என்றக் கவலை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications