அடுத்தவன் பெயரை கெடுக்க உழைக்கிறாங்க.. இவரு செய்த வேலை இருக்கே! நேரடியாக அட்டாக் செய்த தனுஷ்
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் "குபேரா" திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் வரும் ஜூன் 20ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை தெலுங்கு பிரபல இயக்குனரான சேகர் கம்முலா என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் குபேரா திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணியில் பேசும்போது சிலர் அடுத்தவர்களின் புகழை தடுப்பதற்காகவே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பேசி இருந்தார். அதோடு குபேரா பட இயக்குனர் பற்றியும் பல விஷயங்களை பேசி இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல திறமைகளை வைத்திருக்கிறார். இப்போது பிஸியாக படங்களில் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர் நடிப்பில் உருவான குபேரா திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார்.

குபேரா பட நடிகர்கள்
அதுபோல தனுஷ் உடன் நாகர்ஜுனா, ராஸ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் தொடர்பான பிரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டிருக்கிறது. அதற்காக தனுஷும் பல ஊர்களுக்கு சென்று படத்தைப் பற்றி பல விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த குபேரா பட விழாவில் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலா பற்றி பேசி இருந்தார். அதில் அவர் பேசும்போது, இந்த உலகத்தில் சேகர் கம்முலா மாதிரி யாரையும் நான் பார்த்ததே கிடையாது.
வியந்த தனுஷ்
நானும் இதுவரைக்கும் எத்தனையோ இயக்குனர்களிடம் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் அவர்களை எல்லாம் விட சேகர் கம்முலா வித்தியாசமானவர். எனக்கு கோவிட் காலத்தில் வீடியோ காலில் 20 நிமிடம் கதை சொன்னார். கதை எனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டேன். அதற்குப் பிறகு ரெண்டு வருஷம் எங்க போனார் என்று தெரியவில்லை. கதை எழுதினார் எழுதினார் எழுதிக் கொண்டே இருந்தார்.
குபேரா பட ப்ரமோஷன்
பிறகு முழுவதுமாக முடித்துவிட்டு என்னிடம் வந்து சொன்னார், கதை நன்றாக இருந்தாலும் இவரால் இந்த படத்தை இயக்க முடியுமா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அதற்கு பிறகு தான் அவரை பற்றி விசாரித்தேன் அப்போது எல்லோரும் அவர் பெரிய இயக்குனர் சிறந்த இயக்குனர் என்றெல்லாம் பில்டப் செய்தார்கள். நான் தமிழ் ,இந்தி, ஆங்கிலம் என பவமொழிகளிலும் வேலை செய்திருக்கிறேன் ஆனால் இவரை போல ஒரு இயக்குனரை பார்ப்பதற்கு எனக்கு வியப்பாக இருக்கிறார்கள்.
தனுஷ் பேச்சு
இப்படி ஒருவரை இந்த பூமியில் இவங்க பெற்றோர் பெற்று விட்டு இருக்காங்களே இவரெல்லாம் எப்படி இந்த உலகத்தில் வாழ போறாருன்னு எனக்கு ஒரு பயமும் வந்தது. இவரை நம்பி நான் இந்த படத்தில் நடிக்க போனதற்கு திருப்பதி மலை அடிவாரத்தில் என்னை பிச்சை எடுக்க வைத்தார். ஆனால் அப்போதுதான் வாழ்க்கை என்னவென்று புரிந்தது. இதற்கு முன்பு ஒரு படத்தில் நான் நடித்துக் கொண்டு இருந்தபோது சுடுகாட்டில் பிணம் எரிக்கும் இடத்தில் என்னை விட்டுவிட்டு போய்விட்டார்கள். அந்த இடம் எனக்கு அப்படி ஒரு அமைதியை தந்தது. அதே அமைதியை திருப்பதி அடிவாரத்தில் நான் பெற்றேன்.

விமர்சனங்களுக்கு பதிலடி
அதற்கு சேகருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். பலர் அடுத்தவர்களை கெடுப்பதற்காகவும், அடுத்தவர்களின் புகழை கெடுப்பதற்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோன்ற ஒருவர் இப்படி கை ஏந்தி பிச்சை எடுத்து பாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். அடுத்தவர்களை பற்றி நீங்கள் யோசிக்க மாட்டீர்கள். உங்களுடைய வேலையை நீங்க பார்த்துக் கொண்டிருப்பீங்க என்று தன்னைப்பற்றி வதந்திகள் பரப்புபவர்களுக்கு தனுஷ் பதிலடி கொடுத்திருக்கிறார். தனுஷ் ஒவ்வொரு மேடையிலும் இதுபோன்று ஹீரோயிசமான வசனங்கள் பேசி வந்தாலும் சினிமா உலகில் யாரு விவாகரத்து செய்தாலும் அதில் தனுஷ் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. போதாத குறைக்கு நயன்தாரா கூட கடந்த வருடத்தில் தனுஷ் மீது பெரிய குற்றச்சாட்டு வைத்திருந்தார்.












Click it and Unblock the Notifications