நெல்லையப்பர் கோவிலில் கைகூப்பி நின்ற தனுஷ்.. பணியாளர்களை வியக்க வைத்துட்டாரே! லீக்கான போட்டோஸ்
திருநெல்வேலி: நடிகர் தனுஷ் இன்று நெல்லையில் இருக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். பிறகு வெளியே வரும்போது அங்கிருந்த பணியாளர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ் கடைசியாக தமிழில் நடித்த இட்லி கடை திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை. ஆனால் அந்த படத்தின் கதை குடும்ப ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குலதெய்வ வழிபாடு மற்றும் குடும்பத்தின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த "தேரே இஷ்க் மே "என்ற படம் வெளியாகி சூப்பர் டூப்பராக வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த படத்தை இயக்குனர் எல் ராய் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் பலமொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வெளிவந்த 11 நாட்களில் உலகம் முழுவதும் 145 கோடி வசூல் செய்திருக்கிறது. இது தனுஷுக்கு ஒரு பெரிய வெற்றியை கொடுத்து இருக்கிறது. இதனால் பலரும் தனுஷ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். தனுஷ் இனி இதேபோல படத்தில் நடிப்பாரா? அல்லது என்ன மாதிரி படத்தில் நடிப்பார்? என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். தன்னுடைய வெற்றியை மனமார கொண்டாடும் விதமாகவே தனுஷ் இப்போது நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் என்றும் சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். தனுஷ் சாமி தரிசனம் செய்யும்போது அவருடன் இயக்குனரும் வந்திருக்கின்றனர் இதனால் புது படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு சாமி தரிசனம் செய்திருக்கிறாரா? அல்லது தனக்கு கிடைத்த வெற்றிக்கு நன்றி செலுத்துகிறாரா என்ற கேள்விகளும் இருந்திருக்கிறது.
இதில் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பதால் திரைப்பட சார்பாக தான் தனுஷ் வந்திருப்பார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்து தனுஷ் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட அப்போது அங்கிருந்த பணியாளர்களும் தனுஷுடன் புகைப்படம் எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
ஆனாலும் தயக்கத்தோடு தயங்கி நிற்க அதற்கு தனுஷ் ஒதுங்கி நின்றவர்களை கூப்பிட்டு அவர்களோடு புகைப்படம் எடுத்து இருக்கிறார். இந்த வீடியோக்கள் வெளியாகி தனுஷை பலரும் பாராட்டி வருகின்றனர். சினிமாவில் அறிமுகமான சமயத்தில் தனுஷ் அதிகமாக விமர்சிக்கப்பட்டாலும் இப்போது தன்னுடைய திறமையால் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
தான் மட்டுமல்லாமல் சினிமாவில் இளம் தலைமுறை ஒரு சிலருக்கும் வாய்ப்பு கொடுத்து அவர்களுடைய வெற்றிக்கும் அடித்தளம் போட்டு இருக்கிறார். என்ன தான் சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்தாலும் நான் பக்தி என்று வந்துவிட்டால் எப்போதும் கடவுளுக்கு அடிமை என்று கைகூப்பி இவர் வழிபட்ட விதத்தை பலரும் பாராட்டியும் வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications