தர்மபுரி கோவிந்தசாமி.. குளியல் கோவிந்தசாமியாக மாறிய அந்த தருணம்.. அடடா சூப்பரப்பு!
சென்னை: சன் டிவியில் ஞாயிறு தோறும் இரவு நம்ம ஊரு ஹீரோன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிட்டு வருது. ஆரம்பத்துல இதை நடிகர் விஷால் நடத்திக்கிட்டு இருந்தார். இப்போ நடிகர் விஜய் சேதுபதி நடத்திக்கிட்டு இருக்கார்.
விஷால் நடத்தும்போது வேறு மாதிரி இருந்தது... அதாவது நிகழ்சசிக்கு இடையில், பங்கேற்பவர்களுக்கு நிதி திரட்டுவது என்று இருந்தது. இப்போது விழிப்புணர்வு தரும் நிகழ்ச்சிகளாக விஜய் சேதுபதி நடத்தி வர்றார்.
விஷாலுக்கு ரசிகர்கள் இருபாலாரும் என்று இருந்தாலும், இவர் கதை வேறு. ஆனால், விஜய் சேதுபதி வேற லெவல். எல்லார் மனசுலயும் எளிமையான நடிப்பின் மூலம் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துருக்கார்.எளிமையான நடிப்பு, யதார்த்தம் இதெல்லாம் நடிகை ஷோபாவுக்கு பிறகு இவர்தான் முதல் ஆண் என்றும் சினிமா ஆர்வலர்கள் சொல்றாங்க.

கோவிந்தசாமி
தருமபுரியில் இருந்து ஒரு இளைஞர் வந்திருந்தார் நிகழ்ச்சிக்கு. தருமபுரில ரொம்ப தண்ணி கஷ்டமாம்.. இவரை படிக்க வைக்காம அமமா ஆடு மேய்க்க தினமும் அனுப்பிடுவாங்க, பக்கத்துல கிராமம் கிராமமா போயி ஆடுகள் மேய்க்க வேண்டி இருக்கும்... ஒன்றரை லிட்டர் தண்ணி எடுத்துட்டு போவேன், அதுல கொஞ்சம் குடிச்சுக்குவேன், கொஞ்சம் குளிச்சுக்குவேன்னு சொல்றார் இவர்

தண்ணியிலயா?
உடனே இந்த இடத்தில் ஒன்றரை லிட்டர் தண்ணியில குளிச்சும், குடிச்சும் காமிக்கறேன்னு சொல்லி, அண்டர்வேர் தவிர அனைத்தையும் கழற்றினார் கோவிந்தசாமி. அவருக்கு அவரின் கிராமத்து ஆசிரியர் கமெண்ட்ரி கொடுக்க கோவிந்தசாமி குளிக்க ஆரம்பித்தார்.

ஷாம்பூ சோப்பு
கோவிந்தசாமியின் வாத்தியார் இவரின் இந்த செயலை அங்கங்கு, கோவிந்தசாமியை செய்து காமிக்க வைத்து, தண்ணீர் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வை 2009ம் ஆண்டிலிருந்து ஏற்படுத்தி வருகிறாராம். கோவிந்தசாமி ரெண்டு முறை ஷாம்பூ போட்டு குளித்தார். இப்போது முதலாவது முறை சோப்பு, போட்டுவிட்டு குளிக்கறார்.. அடுத்து ரெண்டாவது முறை சோப்பு போட்டு குளிக்கறார். தேவைக்கு கொஞ்சம் குடிக்கிறார்னு சொன்னார்.

குளியல் கோவிந்தசாமி
வெறும் கோவிந்தசாமி குளியல் கோவிந்தசாமியாக மாறியது இப்படித்தானாம். படிக்காத வெள்ளந்தியான கோவிந்தசாமி, தண்ணீர் சிக்கனத்தை பத்தி மக்கள் புரிஞ்சுக்கறதே இல்லை, அதுக்காக எல்லாரையும் நான் ஒன்றரை லிட்டர் தண்ணியில குளிங்கன்னு சொல்லலை. குளிக்க ஒரு பக்கெட் தண்ணி போதும். எதிர்காலத்துல ஒன்றைரை லிட்டர் தண்ணியில எல்லாரும் குளிக்கும் நிலைமை வந்திட கூடாதுன்னுதான், இந்த டெமோன்னு சொன்னார்.

காலி குடம்
தனது ஊரில் தண்ணிக்கு சண்டை போட்டிருக்கறாங்க, காலி கூட்டத்துல அடிச்சுக்கறாங்க. அது ரொம்ப வருத்தமா இருக்கு. என்னால நிம்மதியா இருக்க முடியலைன்னு சொல்லி கண்ணீர் விடறார் கோவிந்தசாமி. இன்னும் ஆடு மேய்க்கும் தொழில்தான் செய்து வருவதாக கூறும் கோவிந்தசாமிக்கு திருமணம் ஆகி இப்போது 3 பெண் குழந்தைகள் இருக்காம். அவருக்கு டூவீலர் உள்ளிட்ட பல பரிசுகளை வழங்கி சன் டிவி கவுரவித்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications