• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இ பாஸ் இல்லாமல் இதயத்தில் நுழைந்தவளே.. என் 95 போட்டும் மூச்சில் கலந்தவளே.. தர்ஷா குப்தா!

|

சென்னை: தர்ஷா குப்தாவுக்கு இருப்பது போன்ற ரசிகர் கூட்டம் யாருக்குமே இருக்காது போல.. அப்படி கவிதைகளால் போட்டுத் தாக்குகிறார்கள்.

அவரது லேட்டஸ்ட படத்துக்கு இப்போ இருக்கிற சுற்றி சிச்சுவேஷனுக்கு ஏற்ற மாதிரி ஒரு ரசிகர் கமெண்ட் போட்டிருக்கிறார் "E pass இல்லாமல் என் இதயத்தில் நுழைந்தவளே N-95 மாஸ்க் போட்டும் என் மூச்சில் கலந்தவளே" என்றெல்லாம் இவரை ரசித்து கமெண்ட் மழையை பொழிந்துள்ளார்.

இணையதளத்தில் தன்னுடைய செல்ல சிரிப்பாலும், கலக்கலான கவர்ச்சியாலும் கலக்கிக் கொண்டிருந்த தர்ஷா அவ்வப்போது மாடர்ன் உடையில் வந்தாலும் சேலையிலும் சிலிர்க்க வைக்கத் தவறுவதில்லை.

சும்மாவே இருக்க மாட்டேங்குறாரே சாக்ஷி.. கிறங்கடிக்கும் போஸ்.. தூக்கம் கலைத்த ரசிகர்கள்!

பாந்தமான அழகு

பாந்தமான அழகு

பொதுவாக இவர் சீரியல்களில் காலடி எடுத்து வைக்கும் போது பாவாடை தாவணியில் நடித்து அனைத்து குடும்ப தலைவிகள் மனதில் இடம் பிடித்து விட்டார். அதன் பிறகு டப்ஸ்மாஷ் வீடியோக்களாளும் இணையதளத்திலும் காலடி எடுத்து வைக்கும்போது சேலைகளிலும் சாவட தாவணிகளிலும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த இவர் போகப்போக மாடர்ன் உடையிலும் பாத்ரூம் டவலோடும் இணையதளத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருந்தார்.

சேலை கட்டும் பெண்ணின் வாசம்

சேலை கட்டும் பெண்ணின் வாசம்

தற்போது மீண்டும் அதே பழைய சேலைகளில் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார். விநாயகர் சதுர்த்தி அன்று அவர் சேலை கட்டிக்கொண்டு குடும்ப பெண்ணாக குத்துவிளக்கு ஏற்றி கொண்டு செமையாக போஸ் கொடுத்து அதை இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருந்தார். இது அவருடைய ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் போஸ்ட் ஆக இருந்தது. அதனை தொடர்ந்து அடுத்த நாளும் சிவப்பு கலர் சேலையில் எடுப்பாக இடுப்பை காட்டி ரசிகர்களை கவுத்து விட்டார்.

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்

சிவப்பு நிற புடவையில் இவரை பார்த்த ரசிகர்கள் மெய்மறந்து பக்கம் பக்கமாக காதல் வசனங்களை கவிதைகளாக பொழிந்து வருகிறார்கள். இந்த போட்டோ வைரலாக பரவி வருகிறது என்று சொல்வதை விட பல ரசிகர்களை கனவில் மிதக்க வைத்து விட்டது. அந்த அளவுக்கு சொப்பன சுந்தரி யாகவும் ஜொலித்து வருகிறார் தர்ஷா. இதைப் பார்த்து ரசிகர்கள் கவிதையாக தீட்டிக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட புலவர்களாக மாறி புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

இந்தக் கவிதையைப் பாருங்க

இந்தக் கவிதையைப் பாருங்க

ஒரு ரசிகர் எழுதின கவிதை... பெண்ணே ....கண்ணைக் கவர்ந்து இழுத்துவிடும் உன் பேரழகை வர்ணிக்க வார்த்தைகள் கோடி ஆயினும் வசப்படாதே மலர் மேனியில் ஆபரணம் பூட்டி அருவி கூந்தலில் மல்லிகை பூச்சூடி கரு விழியோரம் கண்ணையும் கட்டி முழுமதி முகத்தில் புன்னகை காட்டி என் மனதில் கொள்ளாமல் கொள்ளாதே கடற்கரை மணலில் உன் பாதம் அதுவே புனித திருக்கோலம் மணம் வீசுமே அம்மன் நெடுங்காலம் தொட்டால் சினுங்கி போல் பக்கம் கொள்கிறேன் உன் கால் கொலுசின் ஓசை கேட்கையில் உன் பார்வையில் பித்து பிடிக்க வைக்கும் உன் சிரிப்போ சிந்தனையை சிதறடிக்கும் உன் உதடு உளறி தெரிய வைக்கும் உன் குரலுக்கு குயிலும் தோற்றமே உன் கூந்தலும் தொகை ஆகிடுமே அற்புத படைப்பு தான் நீயோ உன் முகம் கண்டதும் பக்கம் கொண்ட கதிரவனே மேற்கில் சென்று தன்னை மறைத்துக் கொண்டான் வென்மதியே அன்று உன் முகம் கண்டு பொறாமையில் இன்று அமாவாசை என்று சொல்லி மறைந்தது.

அனு அனுவாக ரசிக்கும் ரசிகர்கள்

அனு அனுவாக ரசிக்கும் ரசிகர்கள்

இப்படி ரசிகர்கள் இவரை அணு அணுவாக ரசித்து கவிதைகளை போடுவதால் நாளுக்கு நாள் இவர் வைரலாக பரவி வருகிறார். ஏற்கனவே இவருக்கு சீரியல்களில் நடிப்பதை விடவும் இணையதளத்தில் போஸ்ட் போடுவதுதான் மிகவும் எளிமையானதும் மற்றும் பிடித்தமானதும் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் இந்த மாதிரி ரசிகர்கள் இவரை வழிபடுவதால் இவருக்கு ஏக மகிழ்ச்சியாக இருக்கிறது மட்டும் தான் இவர் இந்த அளவிற்கு முன்னேறி வருகிறாராம்.

 இ பாஸ் இல்லாமல் நுழைந்தவளே

இ பாஸ் இல்லாமல் நுழைந்தவளே

அதை விட நமக்கு ஹைலைட்டாக தெரிந்த கவிதை இதுதான்.. என்னா மாதிரியான சிந்தனை பாருங்களேன்.. இப்போ இருக்கிற சுற்றி சிச்சுவேஷன்க்கு தகுந்த மாதிரியும் ஒரு ரசிகர் கமெண்ட் போட்டிருக்கிறார் "E pass இல்லாமல் என் இதயத்தில் நுழைந்தவளே N-95 மாஸ்க் போட்டும் என் மூச்சில் கலந்தவளே" என்றெல்லாம் இவரை ரசித்து கமெண்ட் மழையை பொழிந்து வருகிறார்கள். கொடுத்து வச்ச மகராசிதான் தர்ஷா குப்தா.. இல்லாவிட்டால் இப்படிப்பட்ட புலவர்கள் இவருக்குக் கிடைப்பார்களா.

 
 
 
English summary
Dharsha Gupta has come out with new photos and her fans write poems on her.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X