For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"பாங்கு".. ஸாரி ஸாரி.. நான் தெரியாம பேசிட்டேன்.. மன்னிப்பு கேட்ட தர்ஷா

Google Oneindia Tamil News

சென்னை: அஞ்சு மாசத்துக்கு முன்னாடி லைவில் பேசும் போது இஸ்லாம் மதத்தை பற்றி நான் சத்தியமாக தவறாக பேசவில்லை என தர்ஷா குப்தா கூறியுள்ளார்.

தற்போது சினிமாக்களில் நடிக்கும் நடிகை நடிகர்களை விடவும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

மச்சான் அம்மா திட்டிட்டாங்கடா.. கொஞ்சிய ஷிவானி.. அலட்டிக்காத பாலா.. ரொம்பத்தான்! மச்சான் அம்மா திட்டிட்டாங்கடா.. கொஞ்சிய ஷிவானி.. அலட்டிக்காத பாலா.. ரொம்பத்தான்!

காரணம் இவர்கள் தினமும் ரசிகர்கள் பார்க்கும் ஒன்றாக இருந்தாலும் இவர்கள் சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

ஸ்டார்கள்

ஸ்டார்கள்

சினிமாக்களில் நடிக்கும் நடிகைகள் நடிக்கும் திரைப்படங்கள் எப்பவாவது தான் ரிலீஸாகும் ஆனால் சீரியலில் இவர்கள் தினமும் வந்து கொண்டிருப்பதால் இவர்களின் முகத்தை நன்றாக மனதில் பதிந்துவிடுகின்றன .இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருபவர் அந்த மாதிரி தான் தற்போது சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் தர்ஷா குப்தாவும் ஒரு சர்ச்சையில் மாட்டி இருக்கிறார் .

தப்பான பேச்சு

தப்பான பேச்சு

இவருக்கு சீரியலில் இருக்கும் ரசிகர்களை விடவும் சமூக வலைத்தளங்களில் இவருக்கு ரசிகர்கள் அதிகம் ஆனாலும் ரசிகர்களின் மத்தியில் இவர் லைவில் பேசும் போது பேசிய வார்த்தை சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது .இவர் இப்படி எல்லாம் பேசக்கூடாது என்னதான் பாப்புலர் ஆக இருந்தாலும் சபையில் பேசும்போது கவனிச்சி நாவடக்கத்தோடு பேச வேண்டும் என ஒரு சமூகத்தினர் இவர் மீது குற்றம் சாட்டி வருகின்றனர் .

தெரியாம பேசிட்டேன்

தெரியாம பேசிட்டேன்

ஆனால் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தர்ஷா குப்தா விளக்கமளித்து இருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நான் சீரியலில் மட்டும்தான் வில்லத்தனத்தை செய்யும் வில்லியாக நடித்திருக்கிறேன் தவிர என்னுடைய மனது எப்போதுமே குழந்தைத்தனமாக தான் இருந்து வருகிறது .நான் யாரையும் பிரித்துப் பார்ப்பது இல்லை.

மன்னிச்சிருங்க

மன்னிச்சிருங்க


அதுவும் இல்லாமல் என்னை பொருத்த வரையில் அனைத்து சமூகமும் ஒன்றுதான். இந்து ,கிறிஸ்டியன் ,முஸ்லிம் என யாரையும் பாகுபாடு பார்ப்பது கிடையாது .அந்த எண்ணம் எனது மனதில் துளி கூட இருந்ததில்லை .ஆனால் ஒரு ஐந்து ஆறு மாதத்திற்கு முன்னர் நான் லைவில் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு சத்தம் எனக்கு கேட்டுக்கொண்டே இருந்தது அது என்னவென்று கூட தெரியாமல் நான் கொஞ்சம் டிஸ்டர்பன்ஸ்ஸ் ஆக இருக்கிறது என கூறி இருந்தேன் .

சத்தியமாக எனக்கு தெரியாது

சத்தியமாக எனக்கு தெரியாது

ஆனால் அது மசூதியில் தொழுகை சத்தமாக இருந்திருக்கிறது அது எனக்கு சத்தியமாக தெரியாது .தெரிந்திருந்தால் நான் அப்படி கூறியிருக்க மாட்டேன் ஆனால் அதைப் பற்றியே பலர் என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அது தெரியாமல் நான் பேசியது தான் நான் பேசியது தவறு தான் எனக்கு நன்றாகவே தெரிகிறது. அதனால் நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இனிமேல் பேச மாட்டேன்

இனிமேல் பேச மாட்டேன்

இனி அந்த மாதிரி நான் எப்போதுமே பேச மாட்டேன் என கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார் .நான் மனதிலிருந்து செஞ்சிருந்தா அது ஒரு குற்றம் ஆனால் இது என்னை அறியாமல் நிகழ்ந்துவிட்ட செயல்தான் அதனால் என்னை மன்னித்து விடுங்கள் எனவும் கூறியிருக்கிறார் .இவர் இப்படிப் பேசியதை கேட்டதும் பலர் இவருக்கு ஆதரவாக கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.

மன்னிச்சு விட்ருங்கப்பா

மன்னிச்சு விட்ருங்கப்பா

தெரியாமல் தானே பேசியிருக்கிறார் அதை எல்லோரும் புரிஞ்சிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். இவர் பேசியதைக் கேட்டு கொஞ்சம் மனது திருப்தி அடைந்திருந்தாலும் இனியாவது இப்படி பல பேர் முன்னாடி பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள் இது எல்லா சூழ்நிலையிலும் நன்றாக இருக்காது என அறிவுரை கூறி வருகின்றனர்.

English summary
Dharsha Gupta says sorry for her speech on Paangu sound.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X