Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடைஞ்சிட்டேன்.. மணிமேகலையின் வளர்ச்சி பிரியங்காவுக்கு வீழ்ச்சி.. இதுதான் பிளான்: போட்டுடைத்த பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேனல் வேறொருவரால் விலைக்கு வாங்கப்பட்டுள்ள நிலையில், பிரியங்கா உள்ளிட்டோர் தற்போது பணியாற்றும் டிவியிலிருந்து வெளியேறியுள்ளனர்.. இதற்கு பிறகு வேறு எந்த சேனலுக்கு செல்ல போகிறார்கள் என்று தெரியவில்லை.. இதில் பிரியங்கா கணவருடன் லண்டன் செல்லக்கூடும். ஆனால், மணிமேகலையின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகிறது என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியவர் மணிமேகலை.. ஆனால், திடீரென அந்த நிகழ்ச்சியில் பிரியங்கா உள்ளே புகுந்ததால், ஏராளமான விவகாரங்கள் வெடித்தன..

இதனால், கடந்த சீசனில் பாதி நிகழ்ச்சியிலிருந்தே வெளியேறினார் மணிமேகலை.. அத்துடன், ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் தொகுப்பாளினியாக பணியாற்றி கொண்டிருக்கிறார்.

Television Manimegalai Priyanka

சிறந்த தொகுப்பாளினி

தற்போது சின்ன திரையில் சிறந்த தொகுப்பாளினிக்கான விருது மணிமேகலைக்கு வழங்கப்பட்டுள்ளது.. சமீபத்தில் விருது விழா மேடை ஒன்றில் மணிமேகலை பேசும்போது, "எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி வேலையையே, என் வாயாலேயே வேணாம்னு சொல்ல வச்சிட்டாங்க.. ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்.. உன்னுடைய கேரியர் முடிஞ்சிடும்னு சொன்னாங்க ஆனாலும் நான் என்னுடைய சுய கௌரவத்திற்காக எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வெளியே வந்தேன்.

கேரியரே முடிஞ்சிடுச்சு

அதே மாதிரி உங்க கேரியரே முடிஞ்சிடுச்சுன்னு சொன்னாங்க. ஆனா அந்த பிரச்சனைக்கு அடுத்த நாளே எனக்கு ஜீ தமிழில் வாய்ப்பு கிடைத்தது" என்று பேசியிருந்தார்.. மணிமேகலை இவ்வாறு மறைமுகமாக பேசியது, பிரியங்காவை முன்னிறுத்தியே என்று பலரும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.. அத்துடன் மணிமேகலைக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகிறார்கள்.

இந்நிலையில், "Relect Prime என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த சபிதா ஜோசப், "ஒருவரை நோஸ்கட் செய்வது, ஒருவரை வெளியேற்றுவது என்ற மனப்பான்மையிலேயே பிரியங்கா இருப்பார்.. "எல்லாமே நான்தான்" என்ற மனப்பான்மையே அவருக்கு பெரும்பாலும் இருக்கும். ஏற்கனவே விஜய் டிவியிலிருந்த DDயையும் இப்படித்தான் அவர் செய்துள்ளார்.. டிடி-க்கு முன்பிருந்த தொகுப்பாளினியையும் இப்படித்தான் பிரியங்கா செய்தார்..

தொகுப்பாளினிகள்

அதாவது சக தொகுப்பாளினிகள் வெளியே செல்லும் அளவுக்கு, மனவருத்தத்தை உண்டுபண்ணியிருக்கிறார்.. தான் மட்டுமே காம்பியர் செய்ய வேண்டும்.. அப்படியே வேறொருவர் காம்பியரிங் செய்தாலும், அவர்கள் தன்னை மீறி போய்விடக்கூடாது., தான் சொல்வதை மட்டுமே அவர்கள் கேட்டு நடக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். எனவே, பிரியங்காவுக்கு அடிமையாக இருக்க மணிமேகலை விரும்பவில்லை. வெளியேறிவிட்டார்.

அதிலும் சீனியரான டிடி-யும் வெளியேறிவிட்டார்.. பெப்சி உமா எப்படி அனைவருக்கும் கனவு கன்னியாக இருந்தாரோ, அதுபோல டிடியும் ஒரு கனவுக்கன்னிதான்.. இன்னைக்கும் அவரது பேச்சு அனைவராலும் ரசிக்கப்படுகிறது.

குட்டி சிங்கம் - வளர்ச்சி

அதேபோல, பிரியங்காவை எதிர்த்தபோது, மணிமேகலைக்கு ஏராளமான ஆதரவுகள் கிடைத்தன.. அதனால்தான் விருது வாங்கும்போதுகூட, "வேறு சேனல்களிலிருந்தும் உடனே தனக்கு அழைப்பு வந்தது.. அதனால வெளியே வந்துவிட்டேன்.. இப்போது இந்த விருது தந்துள்ளது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது" என்று மணிமேகலை மேடையில் பேசியிருக்கிறார்.

அதேபோல, எந்த விழா, நிகழ்வுக்கு சென்றாலும், தன்னுடைய கணவரை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார் மணிமேகலை.. உசேன் இல்லாமல், நான் இல்லை என்பதையும் பதிவு செய்து கொண்டேயிருக்கிறார்...

பெரிய பெரிய சிங்கங்களுக்கு நடுவில், மணிமேகலையும் குட்டி சிங்கமாக சென்றார்.. அத்தனை பேரும் ஆதரவாய் பேசவும், அவரது பேச்சை கை தட்டி ரசிக்கவும், நாளுக்கு நாள் மணிமேகலையின் வளர்ச்சி என்பது, பிரியங்காவுக்கு மிகப்பெரிய வீழ்ச்சி தான்." என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+