Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவக்குமாருடன் சூர்யா.. "வணங்கான்" டிரெயிலரால் டக்னு மாறிய முகம்? பாலா கிட்ட வந்தது ஏன்? பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வணங்கான் ஆடியோ லான்ச்சுக்கு நடிகர் சூர்யா வந்திருந்ததுதான், இன்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சூர்யா ஏன் பங்கேற்றார் ? பாலாவை புகழ்ந்து பேச என்ன காரணம்? என்றெல்லாம் இணையத்தில் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. அந்தவகையில் மூத்த பத்திரிகையாளர் சேகுவேராவும், தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

பாலா இயக்கத்தில், "வணங்கான்" படத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா அந்த படத்திலிருந்து விலகினார். இப்போது அவருக்கு அருண் விஜய் வணங்கான் படத்தில் நடித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் இந்த விழாவில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சூர்யா தன்னுடைய அப்பா சிவகுமாருடன், இந்த ஆடியோ லான்ச்சில் கலந்து கொண்டார்.

television surya sivakumar

அப்போது வணங்கான் படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. டிரைலர் மிகவும் நன்றாக இருப்பதாக அனைவரும் கூறி வருகிறார்கள். டிரைலர் திரையிடப்பட்ட போது அதை பார்த்த சூர்யாவின் முக பாவனைகளை ஸ்கிரீனில் அடிக்கடி காட்டப்பட்டது. சூர்யாவின் முகம் கொஞ்சம் இறுக்கமாக இருந்ததையும் பார்க்க முடிந்ததாம். டிரைலரை பார்க்கும்போதே படமும் நன்றாக வந்திருக்கும் என்பது போல சூர்யா உணர்ந்ததால் தான் அவரது முகம் மாறியது என்கிறார்கள் சிலர்.

ஏன் கலந்துகொண்டார்:

இப்படியொரு தகவல்கள் இணையத்தில் வலம்வரும்நிலையில், இந்த ஆடியோ லான்ச்சில் சூர்யா ஏன் கலந்து கொண்டார் என்பது குறித்து, மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா King 24X7 யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார்..

அந்த பேட்டியில் அவர் சொல்லும்போது, "சூர்யாவுக்கு தன்னடக்கம், எளிமை இயல்பிலேயே இருப்பது நல்லவிஷயம்தான்.. ஆனால், வணங்கான் படத்தை சூர்யா தவிர்க்க என்ன காரணம்? பாலாவின் அடிப்படை இயல்பு என்ன என்று அனைவருக்குமே தெரியும். அடுத்து புறநானூறு படங்களிலிருந்து சூர்யா விலக என்ன காரணம்?

என்ன காரணம்:

இருக்கிறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டதுதான்.. பான் இந்தியா படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த படங்களை அவர் தவிர்த்திருக்கலாம். அந்தவகையில், கங்குவா படத்துக்காக 2 வருடங்களை சூர்யா வீணடித்துவிட்டார் என்றே சொல்லலாம். மனைவி பேச்சுக்கு கட்டுப்பட்ட கணவராக கங்குவாவில் நடந்து கொண்டார்.

தற்போது கங்குவாவில் ஏற்பட்ட தோல்வி, அவரை பக்குவப்படுத்தியிருக்கலாம். இதை சூர்யா சுயஆய்வு செய்திருக்கலாம். இந்த சுய ஆய்வுக்கு சிவக்குமாரும் உதவியிருக்கலாம். "வணங்கான் படத்தில் நடித்திருக்க வேண்டும், பாலா படத்தை தவிர்த்திருக்க கூடாது" என்று சிவக்குமாரும் சூர்யாவிடம் சொல்லியிருக்கலாம்.

கங்குவான் படிப்பினை:

அதனால், கங்குவா பட தோல்வி தந்த படிப்பினைதான், இப்படி சூர்யா இறங்கி வந்திருக்க காரணமாக இருக்க முடியும். இந்த ஆடியோ லான்ச்சுக்கு சிவக்குமார் மூலமாகவே சூர்யா வரவழைக்கப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

வணங்கான் படம் ஏதோ மெசேஜ் சொல்லும் படமாக உள்ளது. ஏனென்றால், அருண் விஜய்யின் கையில் பிள்ளையாரும், இன்னொரு கையில் பெரியார் படமும் இருக்கு. அருண் விஜய்க்கு சொல்லிக் கொள்ளும்படியான படம் இல்லை என்பதால், வணங்கான் படம் அவருக்கு திருப்புமுனையாக இருக்கலாம். இந்த படத்தின் வெற்றி பற்றியும் சூர்யாவும் கேள்விப்பட்டிருக்கலாம். இனியாவது இணக்கமாக செல்ல வேண்டும் என்பதற்காக விழாவில் பங்கேற்றிருக்கலாம்.

படம் தோல்வி:

ஆனால், ஆர்.ஜே. பாலாஜியுடன் "சூர்யா 45" படத்தை அவசரமாக ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.. ஒரு படத்தில் நடிக்க 2 வருடம் உழைத்து, அது தோல்வியடைந்தபிறகு, 2 மாதமாவது யோசித்து முடிவு எடுத்திருக்கலாம். கங்குவா பட தோல்விக்கு பிறகு சூர்யாவுக்கு படங்கள் இல்லையேன்னு சொல்லிவிடுவார்களோ? என்பதற்காகவே அவசரமாக இந்த படத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகவே நினைக்கிறேன்.

எல்லா நடிகர்களுக்குமே இங்கு போட்டி பொறாமைகள் இருக்கத்தான் செய்யுது. இதுல சிவக்குமார் சற்று கூடுதலாகவே இருக்கு.. கடந்த காலங்களில் பல வார்த்தைகள் பேசியிருக்காங்க. இங்கு மனதில் வன்மம் வைத்துள்ள நடிகர்கள் நிறைய பேர் உண்டு.. "அந்த நடிகர் துணை முதல்வர் ஆயிட்டாரு", "அந்த நடிகர் தனியாக கட்சி துவங்கிட்டாரு" இப்படித்தான் சொல்றாங்க..

சக நடிகர்கள்:

ஏன் உதயநிதி, விஜய்ன்னு பேர் சொல்றதுக்கு என்ன? இதுக்கு பேர்தான் வன்மம்.. ஆனால், இவங்களை வெளியில் எங்காவது பார்த்தால் நல்லா பேசிக்குவாங்க. உள்ளுக்குள்ள சக நடிகர்களிடம் போட்டி, பொறாமைகளை வைத்திருக்கிறாங்க.

நம்பர் 1 இடத்தில் ரஜினி, 2வது இடத்தில் விஜய் இருக்கிறார். 3,4,5வது இடத்தில் யார் இருப்பது என்பதுதான் இங்கு போட்டியாக உள்ளது. அஜித்தை இந்த லிஸ்ட்டில் சேர்க்க முடியாது. அவர் திடீரென 1-ல்கூட இருப்பார்.. 3ம் இடத்திலும் இருப்பார்.. அவர் இந்த போட்டியிலேயே இல்லை. பொங்கலுக்கு விடாமுயற்சி வந்தால், வேற லெவலுக்கு போயிடுவார். அதனால் அஜித்தை பொறுத்தவரை, 1, 2ஐ கடந்தவர்.

நம்பர் 2 யார்:

ரஜினி மட்டும் நம்பர் 1 இடத்தில், இருக்கிறார்.. விஜய்யை பொறுத்தவரை, அரசியலுக்கு முழுமையாக இறங்கிவிட்டார். அதனால் 2வது இடத்துக்கே இப்போது போட்டி துவங்குகிறது.. இந்த 2வது இடம் சிவகார்த்திகேயனுக்கா? தனுஷூக்கா? விஜய் சேதுபதிக்கா? சூர்யாவுக்கா? சிம்புவுக்கா? இப்படி கடும் போட்டி இவர்களுக்குள் இருக்கிறது" என்றார் சேகுவேரா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+