சொத்துக்கள் சுருண்டன.. ஸ்டுடியோ ரூமில் ஒடுங்கிய பானுப்ரியா.. கோடிகளில் குளிக்கும் நடிகைகள்: பிரபலம்
சென்னை: "இப்போதுள்ள நடிகைகள் தங்களது எதிர்காலத்தை சரியான முறையில் திட்டமிடுகிறார்கள்.. கல்வியறிவு, சமூகப்பார்வை போன்றவை இன்றைய நடிகைகளுக்கு இருப்பதால், பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தி கொள்கிறார்கள். இதனால், பெரிய சிக்கல்களில் சிக்கி கொள்ளாமல் தப்பிக்க முடிகிறது. குஷ்புக்கு பல கோடி ரூபாய்க்கு சொத்து இருக்கிறது. நயன்தாராவுக்கு 50 தலைமுறை சொத்து உள்ளது" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் பாண்டியன், "பானுப்பிரியாவின் தம்பி அவரது முழு சொத்தையும் அனுபவித்து கொண்டார்.. கடைசியில் அனைத்து சொத்தையும் இழந்து, ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு அறையில் பானுப்பிரியா தங்கியிருந்ததாக கேள்விப்பட்டேன்.

அப்படியானால் பானுப்பிரியாவுக்கு அந்த நேரத்தில், எந்த அளவுக்கு மன உளைச்சல் இருந்திருக்கும்? இத்தனைக்கும் ஒருகாலத்தில் தமிழகத்தின் கனவுக்கன்னியாக திகழந்தவர்.
சாவித்ரியை கைவிட்ட ஜெமினி
இதே நிலைமைதான் அன்று சாவித்ரிக்கும் வந்தது.. கடைசி காலத்தில், ஜெமினி கணேசன் சாவித்திரிக்கு எந்த உதவியும் செய்யவில்லை.. சாவித்திரியை மொத்தமாக ஜெமினி கைவிட்டுவிட்டார்.. இதனால், வறுமையில் விழுந்து, சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி, வேதனையிலேயே இறந்துவிட்டார் சாவித்ரி.
இப்படி பலர் நடிகைகள் பட்டியலில் இருக்கிறார்கள்.. காரணம், இந்த நடிகைகளுக்கு உலகமே தெரியாது.. பிஸியாக நடித்து கொண்டிருக்கும் நேரத்தில் தங்களுக்கு எவ்வளவு பணம் வருகிறது? எவ்வளவு செலவாகிறது? என்பதை தெரிந்து வைத்து கொள்ளவில்லை.
அரசியலுக்கு வராவிட்டால், ஜெயலலிதாவுக்கும் இதே நிலைமைதான்.. எவ்வளவு பணம் வருகிறது? எவ்வளவு செலவாகிறது? என்று தெரியாமல் ஜெயலலிதா நிலைமையும் அன்று அப்படித்தான் இருந்தது.. அரசியலுக்கு மட்டும் வராமல் போயிருந்தால், பானுப்பிரியா, சாவித்திரி போலதான் ஜெயலலிதாவுக்கும் துயரம் வந்திருக்கும்.
பொருளாதார கட்டமைப்பு
பானுப்பிரியா போல பல உச்சபட்ச நடிகைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.. பொருளாதாரத்தை கட்டமைக்கக்கூடிய எந்த வழியும் அவர்களுக்கு தெரியவில்லை.. அதன்விளைவு, அவர்களுக்கு வறுமை தான் பெரிய நோயாகிறது.. இந்த வறுமையை வெற்றி பெற அதிகமாக சிந்திக்கிறார்கள்.. தங்களை காப்பாற்றி கொள்ளவும், மரணம் அடையும் வரை வருமானத்தை தேட பாடுபடுகிறார்கள்.
பட வாய்ப்பு இல்லாமல், வயதும் கடந்துவிட்ட நிலையில், வருமானத்துக்கு தவிக்கிறார்கள்.. வீடு இல்லாமல், உணவுக்கு வழியின்றி, உதவியாளர்களுக்கு சம்பளம் இல்லாமல், வேலைக்காரர்களுக்கு சம்பளம் தரமுடியாமல், வாடகை காருக்குகூட காசு இல்லாமல், பல நடிகைகள் இருக்கிறார்கள்.. இதுவே அவர்களுக்கு நோயாக மாறிவிடுகிறது.
மனோரமா பட்ட துயரம்
எல்லாரையும் சிரிக்க வைத்த மனோரமா, தன்னுடைய மகனை வைத்து, படம் எடுத்தும் சோபிக்கவில்லை.. ஏற்கனவே இளம்வயதில் கணவரை பிரிந்து, அந்த சோகத்தை மறைத்துதான் வாழ்நாளெல்லாம் வாழ்ந்தார்.. கடைசியில் துயரற்று வேதனையிலேயே இறந்துவிட்டார்.. இதே நிலைமைதான் பானுப்பிரியாவுக்கும்.. வாழும்போதே பொருளாதார கட்டமைப்புகளை நடிகைகள் சீர்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்கள் எல்லாம் எதார்த்த உலகம் தெரியாமல் வாழ்ந்துவிட்டதுதான் இதற்கெல்லாம்.
50 தலைமுறைக்கு சொத்து
ஆனால், இப்போதுள்ள நடிகைகள் தங்களது எதிர்காலத்தை சரியான முறையில் திட்டமிடுகிறார்கள்.. கல்வியறிவு, சமூகப்பார்வை போன்றவை இன்றைய நடிகைகளுக்கு இருப்பதால், பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தி கொள்கிறார்கள்.
குஷ்புவுக்கு பல கோடிக்கு சொத்து உள்ளது.. நயன்தாராவுக்கு 50 தலைமுறைக்கு சொத்து உள்ளது.. அம்பிதா, ராதா, எங்கே போனாலும் ஸ்டார் ஓட்டர்களை வைத்திருக்கிறார்கள்.. மீனாவுக்கும் சொத்து உள்ளது.. இவர்களில் தப்பிப் பிறந்தது பானுப்பிரியாதான் என்று தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications