விஜய் மகள் போட்ட ஒரே ஸ்டோரி.. மொத்த பிரச்சனைக்கும் முடிவு.. இது எதிர்பார்க்காத விஷயமா இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயை சுற்றி புதிய பரபரப்பு ஒன்று உருவாகியுள்ளது. காரணம் அவரது மகள் பகிர்ந்ததாக கூறப்படும் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தான். ஏற்கனவே விஜய் குடும்ப பிரச்சனை பற்றி பல சர்ச்சைகள் பரவி வரும் நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Vijay Vijay Daughter Trisha Tamil Cinema

விஜய் மகள் பதிவு

விஜய் நடித்த "ஜனநாயகன்" படத்தில் இடம்பெற்ற "கண்ணே மணியே கன்னிமையே" பாடலை ஸ்டோரியாக விஜயின் மகள் பகிர்ந்ததாக வெளியான தகவல், ரசிகர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. சாதாரணமாக ஒரு பாடல் பகிர்வு என்றாலும், இதை பலர் வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

"இது அப்பாவுக்கு சப்போர்ட் காட்டுற மாதிரி இல்லையா?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கெல்லாம் பின்னணி இருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்ததிலிருந்து, அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய பேச்சுகள் சமூக வலைதளங்களில் அதிகரித்துவிட்டது. மனைவியுடன் பிரிவு, விவாகரத்து போன்ற விஷயங்கள் உறுதி செய்யப்படாத தகவல்களாக இருந்தாலும், அடிக்கடி ட்ரெண்டாகி வருகிறது.

அதற்கு முன்னதாகவே, விஜயின் மகன் தனது பெயருக்கு பின்னாடி அம்மாவின் பெயரை இணைத்த சம்பவமும் பெரிய விவாதமாக மாறியது. இதனால் விஜய் மகன் அவருடைய அப்பாவை விட்டு பிரிந்து விட்டாரா? அதனால் தான் அப்பாவின் இன்ஷியலை கூட வேண்டாம் என்று அம்மாவின் பெயரை தனது பெயருடன் இணைத்திருக்கிறாரா?" என்ற கேள்வி அப்போது எழுந்தது. ஆனால் அதற்கும் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.

Vijay Vijay Daughter Trisha Tamil Cinema

இந்த நிலையில், மகளின் இந்த ஸ்டோரி வெளியாகியிருப்பதால், "குடும்பம் யாரின் பக்கம்?" என்ற விவாதமே இப்போது சமூக வலைதளங்களில் நடக்கிறது. ஏற்கனவே விஜய்யின் மகள் பட்டமளிப்பு விழா போன்ற எந்த நிகழ்ச்சியிலுமே விஜய் கலந்து கொள்ளவில்லை. தந்தை ஸ்தானத்தில் விஜயின் மகன் தான் தன்னுடைய தங்கைக்காக போய் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், நடிகை த்ரிஷாவுடன் விஜயை இணைத்து பேசப்பட்ட வதந்திகளும் மீண்டும் சில இடங்களில் கிளம்பியுள்ளன. விஜய்யும் த்ரிஷாவும் ஒரு திருமண பங்க்ஷனில் ஜோடியாக கலந்து கொண்டது பெரிய அளவில் பேசப்பட்டதை தொடர்ந்து அதற்குப் பிறகு திரிஷா விஜய் உடன் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் நேற்று திரிஷா வாக்கு செலுத்தி விட்டு அந்த புகைப்படத்திற்கு விஜய் உடைய பாடலை பயன்படுத்தி இருந்தார்.

அரசியலில் அடியெடுத்து வைத்த பிறகு, விஜயை சுற்றியுள்ள ஒவ்வொரு சிறிய விஷயமும் கூட பெரிய விவாதமாக மாறி வருகிறது. இந்த ஸ்டோரி விஷயமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. "சாதாரண பதிவா? இல்ல சைகையா?" - அதுதான் இப்போது ரசிகர்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கும் பெரிய கேள்வி. அதே நேரத்தில் இது உண்மையில் விஜய்யின் மகள் ஐடி தானா? என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. காரணம் அந்த ஐடி லாக்கில் இருக்கிறது. அதிகமானோர் அந்த ஐடியை ஃபாலோ பண்ணினாலும் உள்ளே இருக்கும் தகவலை புதியதாக யாரும் பார்க்க முடியாத வகையில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+