நமக்கு புடிச்ச ஆள் டிம்மு டிப்பு அடிச்சா ஆஹா.. லவ் சிக்னலாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டியின் சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சியில் வம்சம் சீரியல் நடிகைகள் கலந்துக்கிட்டாங்க. நிகழ்ச்சி எப்போதும் போல கலகலப்பா இருந்துச்சு. நடத்தறது இமான் அண்ணாச்சியாச்சே!

நடிகை சந்தியா...இவங்கதான் வம்சம் சீரியலில் மலை ஜாதி பெண், படிக்காத பெண்,பின்னர் படித்து அலுவலகத்தையே நிர்வாகம் செய்யும் அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்த பெண் என்கிற கதாபாத்திரத்தில் நடிச்சு இருப்பார்.

Dimmu Dippu and that is the love signal

ரம்யா கிருஷ்ணனுக்கு அடுத்து கதையில் இவருக்குத்தான் முக்கியத்துவம். இதற்கு முன்னர் அத்திப்பூக்கள் சீரியலில் கிட்டத்தட்ட 6 வருஷம் நடிச்சார்.அதில் புகழ்பெற்றவர்தான் சந்தியா.

உங்களைப்பத்தி கஞ்சூஸ்னு ஒரு மொட்டை கடுதாசி வந்திருக்கும்மா...இது எந்த அளவுக்கு உண்மைன்னு அண்ணாச்சி கேட்டார். அண்ணாச்சி அதுக்கு பேர் கஞ்சம் இல்லை அண்ணாச்சி.இப்போ ஒரு சினிமாவுக்கு போறோம்னு வச்சுக்கோங்க.. அதுக்கு முன்னாடி நின்னு செலவு செய்ய ஒரு ஆள் வேணும்...

Dimmu Dippu and that is the love signal

அந்த வேலையை நான் செய்வேன்..அங்க போயி நின்னுகிட்டு, நீ உன் காசைக் குடு,நீ உன் காசைக் குடுன்னு கேட்டுகிட்டு இருக்க முடியாது இல்லையா..சோ,அதை நான் செய்வேன்.அப்புறம் கணக்கு போட்டு .அவங்கவங்க கிட்ட காசை வாங்கிருவேன்.

இப்படி இருந்தாதான் 100 நாளானாலும் பிரச்சனை இல்லாம சேர்ந்து சினிமா பார்க்க முடியும். இல்லேன்னா ஒருத்தர் செலவு பண்ணி ஒருத்தர் செலவு பண்ணாம இருந்தா மனஸ்தாபம்தானே வரும் அண்ணாச்சின்னு சந்தியா நீண்ட விளக்கம் குடுத்தார்.

Dimmu Dippu and that is the love signal

இதுல என்னம்மா தப்பு இருக்கு... பாப்பா கொள்கை நல்லாருக்கேன்னு அண்ணாச்சி சொல்ல..அதே மாதிரி 10 ரூபாய் திருப்பி குடுக்கலேன்னாலும் ,நீ எனக்கு ஒரு 10 ரூபா தரணும்ப்பான்னு சொல்லிக்கிட்டு வாங்கிருவாங்கன்னு கிருத்திகா சொன்னார்.

அது என்னோட பாலிசி அண்ணாச்சி..யார் காசையும் நான் வச்சிக்கமாட்டேன், என் காசையும் யாருக்கும் விட மாட்டேன்னு சொன்னவர் இன்னொரு அற்புதமான விஷயத்தை சொன்னார்.

எத்தனை நாளைக்கு சம்பாதிக்கறோமோ..அதே போல ஒரு நாளைக்கு சம்பாதிக்காமலிருந்து, அன்னிக்கு ஒரு ரூபாய் செலவு செய்யலேன்னாலும், அன்னிக்கும் சம்பாதிச்சதுக்கு சமம்னு சொன்னார். நல்ல விஷயத்தை யார் சொன்னா என்ன.. கேட்டுக்கலாம்.

காதல் எப்படிம்மா வரும்னு அண்ணாச்சி கேட்க..பிடிச்சவங்க யாராவது நம்மைப் பார்த்துக்கிட்டு இருப்பாங்க. நமக்கும் அவனை ரொம்ப பிடிச்சிருந்து பார்த்தோம்னா அவன் கண்ணு டிம்மு டிப்பு அடிக்கும்.பதிலுக்கு நம்மளும் டிம்மு டிப்பு குடுத்துட்டா காதல்தான்னு சொன்னார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+