சேதுபதி படத்தில் நான் செய்த தவறு.. இப்படி காட்சி வைத்திருக்க கூடாது.. மன்னிப்பு கேட்ட இயக்குனர்
சென்னை: நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்த அருண்குமார் சமீபத்தில் வெளியான வீர தீர சூரன் திரைப்படத்தை இயக்கி பல போராட்டத்திற்குப் பிறகு வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தான் இயக்கிய சேதுபதி திரைப்படத்தில் தான் செய்த தவறு குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார்.
திறமையும் உழைப்பும் இருந்தால் அதற்கான அங்கீகாரம் கண்டிப்பாக ஒரு நாள் கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இயக்குனர் அருண்குமார் இருக்கிறார். நாளைய இயக்குனர் என்று நிகழ்ச்சியின் மூலமாக குறும்படங்களை இயக்கி வெற்றிகண்ட அருண்குமார் 23 வயதிலேயே பண்ணையாரும் பத்மினியும் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

முதல் திரைப்படம்
2014 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்துடன் விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறவில்லை. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பல பாடல்கள் ஹிட் அடித்தது இப்போதும் பலருடைய ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் "உனக்காக பிறந்தேனே எனதழகா" பாடல் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றது தான்.
அருண்குமார் இயக்கிய படங்கள்
பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் மூலம் தனக்கு கிடைத்த வெற்றியை வைத்து சேதுபதி என்ற திரைப்படத்தை 2016 இல் அருண் குமார் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்து விட்டது. அதற்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக சிந்து பாத் என்ற திரைப்படத்தில் இணைந்தார். அதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தை உருவாக்கியிருந்தார்.

ஹிட் திரைப்படம்
எழுத்தாளர் மற்றும் இயக்குனராக இருந்த அருண் குமார் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராகவும் மாறி இருந்தார். அடுத்ததாக சித்தா திரைப்படத்தை 2023 ஆம் ஆண்டு இயக்கி இருந்தார். இந்த படமும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. சமீபத்தில் விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் இவருக்கு மற்றொரு வெற்றியை கொடுத்திருக்கிறது.
இயக்குனர் பேட்டி
நடிகர் விக்ரம் சில வருடங்களாகவே நடிக்கும் திரைப்படங்கள் அவர் உழைப்பிற்கு ஏற்ற வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் வீர தீர சூரன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் அவருக்கு மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறது. இனி முதல் பாகம் எப்போது வரும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் அருண்குமார் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.
தவறான உதாரணம்
அப்போது சேதுபதி திரைப்படத்தில் தான் செய்த தவறு குறித்து வருத்தத்தை தெரிவித்து இருந்தார். அதாவது சேதுபதி திரைப்படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகன் கோபமாக மனைவியை அடிப்பார். அப்போது மனைவியிடம் அவருடைய அம்மா நான் இருக்கும் போது இப்படி அடிக்கிறான் என்றால் நான் இல்லன்னா என்னலாம் பண்ணுவான். பேசாம வா வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிடும் போது அதற்கு கதாநாயகி இப்போ அவன் அடிச்சிட்டு போறான்னா அவன் திரும்ப வந்து சமாதானப்படுத்துவான் அதற்கு நான் இங்கே இருக்கணும் அதனால வரமாட்டேன் என்று சொல்லுவாங்க.
யோசிக்க வைத்த காட்சி
இது எனக்கு அந்த நேரத்தில் தோன்றிய காட்சியை வைத்துவிட்டேன். ஆனால் அது தவறு என்று எனக்கு சில நாட்களில் புரிந்து விட்டது. பல பெண்கள் இந்த காட்சியை whatsapp ஸ்டேட்டஸ்களில் வைத்திருந்தார்கள். அப்போதான் நான் எவ்வளவு பெரிய தப்பு செஞ்சேன் என்று தெரிந்தது. ஒரு ஆண் பெண்ணை அடிப்பது தவறு. அதை காதலோடு கனெக்ட் பண்ணினாலும் தவறு தானே என்று எனக்கு வருத்தமாக இருந்தது.
வருத்தம்
இந்த காட்சியை நான் வைத்ததற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சில நேரங்களில் நாம் யோசிப்பது சரி என்று தோணும். ஆனால் அதை அடுத்தவர்களிடத்தில் இருந்து யோசிக்கும்போது தான் நாம செஞ்சது தவறு என்று நமக்கே புரிகிறது. நான் செய்த தப்பை அடுத்து செய்யக்கூடாது என்று ஒவ்வொரு இடத்திலும் யோசித்து செயல்பட்டு வருகிறேன் என அருண்குமார் பேசி இருக்கிறார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications