கிரிக்கெட் விளையாடிய பெண்ணை "முன்னணி” நடிகை ஆக்கிய பாலச்சந்தர்.. அதுவும் யாருன்னு தெரியுமா?
சென்னை: 90ஸ் காலகட்டத்தில் இயக்குனர்கள் பலர் சாதாரண நபர்களை கூட நடிகைகளாக, நடிகர்களாக மாற்றியிருக்கிறார்.
அவர் அப்படி அறிமுகப்படுத்தியதில் பலரையும் உதாரணமாக சொல்லலாம் குறிப்பாக ரேவதி, சுதாகர், பாண்டியன் என பலர் பிரபலமாக இருக்கின்றனர்.
அந்த வகையில் எதார்த்தமாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த பெண்ணை பார்த்த பாலச்சந்தர் அவரை கதாநாயகியாக ஆக்கி இருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

இப்போதைய சூழ்நிலை மாதிரி 90ஸ் காலகட்டம் கிடையாது என்று அந்த காலகட்டத்தில் நடித்த நடிகர்கள் பலர் கூறுவார்கள். அப்போதைய காலகட்டத்தில் நடிகர்களையும், நடிகைகளையும் தமிழ் சினிமாவிற்கு பல இயக்குனர்களே அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குனர் பாலச்சந்திரன், பாலு மகேந்திரா போன்ற தமிழ் சினிமாவில் பலரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
முக்கியமாக பாலச்சந்தர், கமல், ரஜினியின் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பாலச்சந்தரை பற்றி சினிமாவில் ஒரு பேச்சு உண்டு. அது என்னவென்றால் பாலச்சந்தர் ஒரு நடிகரோ அல்லது நடிகையையோ பார்த்தவுடனே அவர்களை சினிமாவிற்கு நல்ல இடத்திற்கு வர முடியுமா? முடியாதா? என்று கணித்து கூறி விடுவாராம்.
அந்த மாதிரி தான் ரஜினியை கூட அவர் பார்த்ததுமே கூறியதாக செய்திகள் உண்டு. ரஜினி ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவரை நாகேஷிடம் அழைத்து சென்று பாலச்சந்தர் இவன் சினிமாவில் பெரிய ஆளாக வருவார் என்று கூறினாராம். இந்த மாதிரி தான் தன்னுடைய நண்பர் வீட்டுக்கு போன பாலச்சந்தர் ஒரு நடிகையை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.
அவர் வேறு யாரும் இல்லை "ரோஜா" திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை பெற்ற நடிகை "மதுபாலா" தான். இவரை அழகன் திரைப்படத்திற்கு அறிமுகப்படுத்தியது பாலச்சந்தர்தான். இந்த திரைப்படத்திற்காக பாலச்சந்தர் கதாநாயகியை தேடிக் கொண்டிருந்த சமயத்தில் மதுபாலாவின் உறவினர்களுடன் பாலச்சந்தருக்கு பழக்கம் இருந்திருக்கிறது.

அப்போது மதுபாலா அவருடைய உறவினர் வீட்டில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் பாலச்சந்தர் அவரை பார்க்க வேண்டும் என்று அழைத்திருக்கிறார். ஆனால் மதுபாலாவிற்கு பாலச்சந்தர் பெரும் இயக்குனர் என்பது தெரியாதாம். அதனால் எந்த மேக்கப்பும் போடாமல் விளையாடிக் கொண்டிருந்த அதே உடையுடன் வேர்க்க விறுவிறுக்க பாலச்சந்தர் முன்பு வந்து நின்று இருக்கிறார்.
அப்போது அவரைப் பார்த்த பாலச்சந்தருக்கு தன்னுடைய கதைக்கு தகுந்த கதாநாயகி கிடைத்துவிட்டார் என்று நினைத்து விட்டார் போல, அதனாலயே உடனே அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது வந்து நடித்துக் கொடு என்று கூறினார். அது மதுபாலாவிற்கு பெரிய அளவில் இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. எப்படியோ பாலச்சந்தர் நினைத்தது போலவே மதுபாலா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு கலக்கி விட்டார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications