வைரமுத்து திமிராக முதல் நாளே அந்த வார்த்தை சொன்னார்.. இளையராஜா மிரண்டுட்டார்.. பாரதிராஜா ஓபன்
சென்னை: இயக்குனராகவும், நடிகராகவும் தன்னுடைய திறமையால் மின்னிக் கொண்டிருக்கும் பாரதிராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில் வைரமுத்து பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அப்போது முதல் முறையாக வைரமுத்துவை தான் பார்க்கும்போது நடந்த நிகழ்வுகள் குறித்து அதில் பேசியிருக்கிறார்.
கிராமப்புற படங்கள் செண்டிமெண்ட் காட்சிகள் உள்ள படங்கள் என்றாலே அது பாரதிராஜா படமாக தான் இருக்கும் என்று ஒரு காலத்தில் கண்ணை மூடி சொல்லும் அளவிற்கு பாரதிராஜா அதிகமான ஹிட் திரைப்படங்களை கொடுத்து பலரையும் தன்னுடைய ரசனையால் திக்கு முக்காட செய்து இருக்கிறார். சினிமா மட்டுமல்லாமல் சீரியலிலும் பல சீரியல்களை இயக்கி இப்போதுள்ள பல இயக்குனர்களின் ரோல் மாடலாகவும் இருக்கிறார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கவிஞர் வைரமுத்து பற்றி பேசி இருக்கிறார். அதில் பாரதிராஜா பேசுகையில் எனக்கு வைரமுத்துவை பார்த்த முதல் நாளை மறக்க முடியாது. நிழல்கள் படத்திற்கான லொகேஷன் பார்ப்பதற்காக நான் சிலோனுக்கு போயிருந்தேன். முதலில் அந்த படம் அங்கே தான் எடுப்பதாக இருந்தது. அப்போது ஒரு ஓவியர் வைரமுத்துவை அங்கே கூட்டிட்டு வந்திருந்தார். அப்போது ஒல்லியான தேகத்தோடு கையில் ஒரு புத்தகத்தை கொண்டு வந்து இருந்தார்.
அப்போது ஓவியர் இவர் ஒரு கவிஞர் இவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த கூட்டிட்டு வந்திருக்கிறேன் என்று சொன்னார். நானும் அப்போது வைரமுத்து கையில் இருந்த புத்தகத்தை வாங்கி பார்த்தேன். அந்த புத்தகத்தின் பெயர் "திருத்தி எழுதிய தீர்ப்புகள்" என்று இருந்தது. அந்த புத்தகத்தை நான் வாங்கி அப்படி மேலோட்டமாக பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது வைரமுத்து என்னிடம் "முடிந்தால் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று சொன்னார்.
எனக்கு டக்கென்று ஒரு மாதிரி இருந்தது. என்னடா இவன் இப்படி சொல்றானே இவ்வளவு திமிரா பேசுறானே என்று நினைத்துக் கொண்டேன். பிறகு அதை அப்படியே மறந்து விட்டேன். அதற்குப் பிறகு நான் பிளேனில் வரும்போது அந்த புத்தகத்தை எடுத்து படித்தேன். அந்த புத்தகத்தை பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு அழகாக அந்த புத்தகத்தில் ஒவ்வொரு இடத்தையும் பற்றி அதில் குறிப்பிட்டு இருந்தார்.
பிறகு நிழல்கள் படத்தில் புது கவிஞரை அறிமுகப்படுத்த வேண்டும் என்று இளையராஜா சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது இளையராஜாவிடம் நான் நமக்கு தெரிந்த ஒரு பையன் இருக்கிறார் என்று சொன்னேன். அதற்கு இளையராஜா நீங்க யாரையாவது கூட்டிட்டு வந்து தொல்லையாகிறாம என்று சொன்னார். சரி நீங்க டெஸ்ட் பண்ணி பாருங்க என்று சொன்னேன். அந்த நேரத்தில் வைரமுத்து அரசு பணியில் இருந்தார்.
அவரிடம் நாங்கள் தகவல் சொன்னதும், உடனே அவர் வந்து விட்டார். அவரிடம் இளையராஜா சில வார்த்தைகளை சொல்லி இதற்கு தகுந்த வரிகள் வேண்டும் என்று கேட்டார். வைரமுத்து எதுவும் பேசாமல் அங்கிருந்த ஒரு பேப்பர் மற்றும் பேனாவை எடுத்துக் கொண்டு தனியாக வெளியே போய்விட்டார். அப்போது இளையராஜா என்ன இவன் இவ்வளவு திமிரா நடந்துக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரம் கழித்து வைரமுத்து அந்த பேப்பரை கொண்டு வந்து இளையராஜாவிடம் கொடுத்தார். அதில் இது ஒரு "பொன்மாலை பொழுது" பாடலுக்கான வரிகள் இருந்தது. அதை பார்த்து இளையராஜா நீங்க கொஞ்சம் வெளியே இருப்பா என்று சொன்னார். வைரமுத்துவும் வெளியே போய்விட்டார். நான் அதைப் பார்த்து இளையராஜா வைரமுத்துவை தூக்கிவிட்டார் என்று தான் நினைத்தேன்.
ஆனால் அவர் போன பிறகு என்னிடம் இவரை எங்க புடிச்சீங்க.. வரிகள் அவ்வளவு அழகாக இருக்கிறது.. இவன் யானையை கவுக்க போறான் என்று சொன்னான். அப்படி தான் ஒரு பொன்மாலைப் பொழுது பாடல் உருவானது என பாரதிராஜா வைரமுத்து மற்றும் இளையராஜா பற்றி அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications