எஸ்.சி.யை பிராமணராக்கி.. பல விஷப்பரீட்சைகளை வென்ற பாக்யராஜ்.. 2 தவறு இங்கேதான் நடந்தது: பிரபலம் நச்
சென்னை: பல விஷப்பரீட்சைகளை வெற்றிகளாக மாற்றியவர் டைரக்டர் பாக்யராஜ் என்று மூத்த நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பாராட்டி கூறியிருக்கிறார். அத்துடன், பாக்யராஜ் செய்த 2 தவறுகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
King 24X7 யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் தந்திருந்த பேட்டியில், "பொதுவாக பிராமண பெண்கள் புத்திசாலியானவர்கள்.. பொருளாதார ரீதியிலும் தங்களுக்கு சமமானவர்களையே காதலிப்பார்கள், கல்யாணம் செய்வார்கள். ஆனால், "இது நம்ம ஆளு" என்ற துணிச்சல் படத்தை தந்தார் பாக்யராஜ்.

இப்போதெல்லாம் சாதிப்படம் எடுக்கறதா சொல்றாங்க.. ஆனால், அப்பவே இந்த படத்தில் புதுமை செய்தவர் பாக்யராஜ்.. மதுரை வீரன் படத்தில், ஒரு எஸ்சி-யை எப்படி புரட்சி தலைவர் ராஜாவாக்கினாரோ, அதுபோலவே, ஒரு எஸ்சி கேரக்டரை பிராமணராக்கி, அந்த பிராணமரை, பிராமண பெண்ணால் கல்யாணம் செய்ய வைத்து, காதலை அழுத்தம் திருத்தமாக சொன்னவர். அதுமாதிரியான படங்கள் இப்போது வருவதில்லை.
கவர்ச்சி நடனமாடி கொண்டிருந்த சில்க் ஸ்மிதாவை, குடும்ப தலைவி கேரக்டரை தந்து நடிக்க வைத்தது அப்போது மிகப்பெரிய விஷயம்.. அதையும் மக்கள் ஏத்துக்கிட்டாங்க.
பாடி டிமேண்டு: மௌன கீதங்கள் படத்தில், மனைவியின் காதல், பிறகு பாடி டிமாண்டுக்காக பாக்யராஜ் சிலிப் ஆவது, அதை சரிதா சந்தேகப்படுவது, பிறகு குழந்தைக்காக ஒன்று சேர்வது என விவாகரத்து செய்யும் தம்பதிகள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. அந்த அளவுக்கு குடும்ப பிரச்சனைகளை ஆழமாக வைத்து எடுக்கப்படும் படங்களை யாரும் இப்போது தருவதில்லை. இதையெல்லாம் அந்த காலத்திலேயே செய்ததால்தான், "திரைக்கதை அரசர்" என்ற பெயரை பெற்றார் பாக்யராஜ்.
ஆக்ஷன் கதையிலும் அழுத்தமான காதல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், டைரக்டராக இருந்த பாக்யராஜை, மறுபடியும் வசனகர்த்தாவாக்கி "ஒரு கைதியின் டைரி" படம் எடுத்தார் பாரதிராஜா.. பிறகு இந்த படத்தை பாக்யராஜ் டைரக்ட செய்து, அமிதாப் பச்சனை வைத்து எடுத்து, சூப்பர் ஹிட் ஆனது.. அதற்கு பிறகுதான், ஸ்கிரின் பிளே கிங் (திரைக்கதை மன்னர்) என்று பட்டம் தந்தார்.
ரிஸ்க் எடுப்பார்: பாக்யராஜ் சார் ஏற்றங்கள் பல கண்டவர்.. பல புரோடக்ஷன் மேனேஜர்களை தயாரிப்பாளர் ஆக்கியவர்.. இந்த கேரக்டரில் எந்த நடிகர்களை தேர்வு செய்யலாம் என்று மற்ற டைரக்டர்கள் பலரை யோசிப்பார்கள்.. ஆனால், பாக்யராஜ் மட்டும்தான் தன்னை சுற்றியிருப்பவர்களை நடிக்க வைத்து அழகு பார்ப்பார். ஜெகன், மன்னாங்கட்டி சுப்ரமணியம், செந்தில் இப்படி அனைவரையுமே திரையில் கொண்டு வந்தவர் பாக்யராஜ்தான்.
நிறைய பேருக்கு வாழ்வு தந்தவர். பாக்யராஜ், பாலச்சந்தர், போலவே அதிகமான ஹீரோயின்களை அறிமுகப்படுத்தியவர்.
மாடுலேஷனுடன் வசனம் பேச முடியாது, பாத்திரங்களுடன் பாக்யராஜால் ஒன்ற முடியாது. ஆனாலும் அவரது படங்கள் சக்ஸஸ் ஆகின..
காமெடி நடிகர்: வில்லன் நடிகராக இருந்த நம்பியாரை காமெடி நடிகராக்கியவர்.. நம்பியாருக்குள்ளும் காமெடி இருக்கு என்பதை கண்டுபிடித்தவர் பாக்யராஜ்தான். தூறல் நின்னு போச்சு பட கேரக்டரை, நம்பியார் சாமி தவிர வேறு யாராலுமே நடித்திருக்க முடியாது. நிறைய விஷப்பரீட்சையில் வெற்றி பெற்றவர் பாக்யராஜ்.
சொந்த படம் மட்டும் எடுக்காமல் இருந்திருந்தால், என்றுமே நம்பர் 1 டைரக்டராக இருந்திருப்பார். சொந்த படம் எடுத்தது அவரது முதல் தவறு,. அதேபோல, அரசியலில் ஈடுபட்டதும் மிகப்பெரிய தப்பு.. ஏனென்றால், இவர் ரஜினி, அஜித் மாதிரியான நடிகர் கிடையாது.. டெக்னிகல் ஸ்டார்.. ஒரு இயக்குனர்.. அவ்வளவுதான்..
மிகப்பெரிய தவறு: எம்ஜிஆர் கலையுலக வாரிசு என்று சொன்னதால், அரசியலில் இறங்கினாரா என்று தெரியல. ஆனால், நான் வேணாம் சார் என்று சொன்னேன். நான் சொல்வதை அவர் கேட்கணும் என்று அவசியமில்லையே. அதற்கு பிறகு திமுகவில் சேர்ந்து, அதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அரசியலுக்கு வந்தது குறித்து, இப்போது அவராகவே உணர்ந்துவிட்டார்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications