ஹாஸ்பிடல் போறதுக்கு முன்னாடி சேஷு எனக்கு மெசேஜ் செய்து சொன்ன வார்த்தை!- கார்த்திக் யோகி எமோஷனல்
சென்னை: நடிகர் "சேஷு" மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 10 நாட்கள் கழித்து நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் காலமாகி இருந்தார். இது அவருடைய ரசிகர்களையும், நண்பர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதைத் தொடர்ந்து பலரும் அவர் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.
லொள்ளு சபா நிகழ்ச்சியில் "மண்வாசனை" திரைப்படத்தை ரீ கிரியேட் செய்திருந்தபோது அதில் வெற்றிலையை இடித்தபடியே பாட்டி கெட்டப்பில் நடிகர் சேஷு பஞ்ச் வசனம் பேசி பலருடைய மனதை கவர்ந்திருந்தார். லொள்ளு சபா நிகழ்ச்சி வெற்றி பெற்றதற்கு சேரும் ஒரு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும் அந்த வகையிலேயே சின்ன திரையில் இருந்து வெள்ளி திரையில் வாய்ப்பு கிடைத்தது.

சேஷு திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் வசனங்கள் மட்டுமல்லாமல் உடல் மொழியாலும் பலரையும் சிரிக்க வைத்து விடுவார். நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான சேஷு அவரோடு பல திரைப்படங்களில் நடித்திருந்தார். கடைசியாக அவர் "சந்தானம்" நடித்த "வடக்குப்பட்டி ராமசாமி" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தாலும் அது மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. இந்த நிலையில் சேஷு மறைவு குறித்து வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை இயக்கிய "இயக்குனர் கார்த்திக் யோகி" எமோஷனலாக சில நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் சேஷு ரொம்ப நல்ல மனிதர். வடக்குப்பட்டி ராமசாமியில் பரதநாட்டியம் சூட் பண்ணும் போது நான் அவருக்கு 45 வயசு தான் இருக்கும் என்று நினைத்தேன். அதனால் அவரிடம் நீங்க பரதநாட்டியம் ஆடுறீங்களா? என்று கேட்டேன் அதற்கு அவர் உடனே ஆடிட்டா போச்சு என்று சொல்லிவிட்டார். பிறகு அந்த காட்சியிலும் நான் நினைத்த மாதிரியே அற்புதமாக ஆடி இருந்தார்.
ஆனால் அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆன பிறகுதான் அவருக்கு 60 வயசு என்ற விஷயமே எனக்கு தெரியும். சேஷு தனக்காக மட்டும் அல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் சின்ன சின்ன ஆர்டிஸ்ட்களுக்காகவும் பேசுவார். என்னிடம் கூட சின்ன ஆர்டிஸ்ட்கள் நிறைய பேரை நடிக்க சொல்லி கேட்பார். "கார்த்தி அவங்களுக்கும் ஒரு ரெண்டு நாள் ஒர்க் கொடு... ஏதாவது நடிக்க வைப்பா, அவங்க வீட்டிலும் அடுப்பு எரியட்டும் அவங்களும் வயிறார சாப்பிடட்டும் என்று இவர் வாய்ப்பு கேட்டு அவங்கள நடிக்க வச்சு அவங்க நடிக்கிறதை பார்த்து பாராட்டுவார்".
அதுபோல என்னுடைய முதல் படமான "டிக்கிலோனா"வில் அவருக்கு பில்டப் மெண்டலாக ஒரு சின்ன கேரக்டர் தான் கொடுத்திருந்தேன். அதற்கு அவர் எனக்கு பெரிய கேரக்டர் கொடு கார்த்தினு சொல்லுவார். ஒருநாள் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எங்க அம்மா வந்திருந்த போது அவங்க கிட்ட கூட உங்க பையனை எனக்கு பெரிய கேரக்டர் கொடுக்க சொல்லுங்கம்மான்னு சொன்னார்.
அதை மனதில் வைத்து தான் நான் அவர்கிட்ட என்னோட அடுத்த படத்துல 60 நாளும் நீங்க நடிக்கிறீங்க என்று சொல்லி நடிக்க வச்சேன். எல்லா படத்திலும் அவருக்கு அய்யர் ஆகவோ, பூசாரிகவோ நடிக்க வாய்ப்பு கிடைப்பதால் எனக்கு போலீஸ் கேரக்டர் மாதிரி வித்தியாசமான ரோலா கொடு கார்த்தி என்று சொன்னார். அதேபோல ஆடியோ பங்க்ஷனில் அடுத்த படத்திலும் எனக்கு வாய்ப்பு கொடு கார்த்தி என்று அவர் கேட்டிருந்தார்.
அதை மனசுல வச்சு என் அடுத்த படத்துல அவருக்கு ஒரு ரோல் வைத்திருந்தேன். அந்த ரோல்ல இனி யாரை நடிக்க வைக்க முடியும்னு எனக்கு தெரியல என்று சோகமாக பேசிய கார்த்தி, ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு முன்னாடி சேஷு எனக்கு மெசேஜ் பண்ணி இருந்தார். அதில் "பரதநாட்டியம் வீடியோ ஒரு மில்லியன் போயிடுச்சு... செம வைரல் ஆகிவிட்டது... என்று சந்தோஷமா சொன்னார்". உடனே நான் அதை ரிப்போர்ட் பண்ணி டெலிட் பண்ண சொல்லிடுறேன்னு அவரை கலாய்ச்சேன்.
அதற்கு சேஷு அண்ணா அதெல்லாம் பண்ணிடாத கார்த்தி நமக்கு ரிச் ஆனால் சரிதான் என்று பேசி இருந்தார். அந்த மெசேஜ் என்னுடைய மொபைலில் இன்னும் அப்படியே இருக்கு. தமிழ் சினிமா ஒரு இயல்பான காமெடி நடிகரை இழந்து இருக்கு.... என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications