ரஜினிகாந்த் மாதிரி ஒரு மனிதனை உலகத்திலேயே பார்க்க முடியாது.. இயக்குனர் நந்தகுமார் ஓபன்
சென்னை: இயக்குனர் நந்தகுமார் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் மனிதன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் போது சூட்டிங் ஸ்பாட்டிற்கு போனபோது தன்னிடம் ரஜினிகாந்த் நடந்து கொண்டவிதம் குறித்து பெருமையாக நந்தகுமார் பேசி இருக்கிறார்.
பொதுவாக ஒரு திரைப்படம் உருவாகுவதற்கு பல வருடங்கள் ஆகின்றது. அதில் பல்வேறு அனுபவங்கள் அதில் திரைப்படத்தில் நடிப்பவர்கள் மற்றும் அதில் வேலை செய்பவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் அதைப்பற்றி ஒரு சிலர் வெளியே சொல்லும் போது தான் பல விஷயங்கள் தெரிய வருகிறது. இப்ப இருக்கிற மாதிரி ஆரம்ப காலகட்டத்தில் இணைய பயன்பாடு கிடையாது என்பதால் பலர் சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் செயல்கள் குறித்து வெளியே சொல்வது கிடையாது.

இப்போது சின்ன விஷயம் என்றாலும் அதை சோசியல் மீடியா மூலம் பெரிய விஷயமாக தெரிந்து விடுகிறது. ஒரு சிலர் நல்லது செய்தாலும் வெளியே தெரியாது ஒரு கெட்டது செய்தாலும் தெரியாது அந்த மாதிரி சூழ்நிலை தான் ஆரம்ப காலகட்டத்தில் சினிமா துறையில் இருந்தவர்களுக்கு இருந்திருக்கிறது. இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் குறித்து இயக்குனர் நந்தகுமார் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதுதான் இப்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
அதில் இயக்குனர் நந்தகுமார் பேசுகையில், நான் ரஜினி சாரோடு ஒரு சில திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அதற்கு பிறகு நான் ஒரு திரைப்படத்தை இயக்கி அது வெளிவராமல் சிக்கலாகி விட்டது. அந்த பிரச்சனைக்கு பிறகு மனிதன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது நான் சூட்டிங் ஸ்பாட்டிற்கு போயிருந்தேன். அங்கு என்னை பார்த்ததும் உடனே எழுந்து நின்று ரஜினிகாந்த் சார் எப்படி இருக்கீங்க? குடும்பம் எப்படி இருக்காங்க? எல்லாம் ஓகேவா என்று விசாரித்தார்.
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியாது. அவர் எவ்வளவோ பெரிய நடிகராக மாறிவிட்டார். ஆனாலும் ஆரம்பத்தில் என்னிடம் எப்படி பழகினாரோ அது போலவே இப்போதும் பழகினாரே என்று நான் வியப்பாக இருந்தேன். ரஜினி சார் எந்த இடத்திலும் எளிமையாக தான் இருப்பார். வளர்ச்சி வந்துவிட்டது என்று ஆணவமாக நடந்து கொள்ள மாட்டார். அதனால் தான் அவர் ஒவ்வொரு முறையும் வளர்ந்து கொண்டிருக்கிறார் என்று எனக்கே தோணும்.
நான் பார்த்த வரைக்கும் இந்த உலகத்தில் ரஜினிகாந்த் சாரை போல ஒரு மனிதனை பார்க்கவே முடியாது. அவ்வளவு எளிமையாக அவர் இருப்பார். சூட்டிங் ஸ்பாட்டில் எப்போதுமே அங்கிருப்பவர்களோடு கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார். அதுபோல பிகு பண்ண மாட்டார் என்று இயக்குனர் நந்தகுமார் பேசி இருக்கிறார்.
இயக்குனர் நந்தகுமார் ஆரம்ப காலகட்டத்தில் பி.வாசு, மணிவண்ணன், ராஜசேகர் போன்ற இயக்குனர்களிடம் வேலை செய்து இருக்கிறார். அதற்கு பிறகு கோடீஸ்வரன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்த நிலையில் அந்த திரைப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருக்கிறது. அதற்கு பிறகு சில வருடங்கள் கழித்து தென்னவன், ஜாம்பவான், கல்கண்டு என்ற மூன்று திரைப்படத்தையும் தமிழில் சின்னத்திரையில் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலையும் இயக்கியிருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications