Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் ஒரு ஸ்கிரிப்ட் தான்! கமல் என்னிடம் கேரவனில் வைத்து சொன்ன வார்த்தை.. சக்தி எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் பி வாசுவின் மகனான சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு அதிகமான நெகட்டிவ் இமேஜ் உருவாகி இருந்தது. அந்த நிகழ்ச்சியால் தான்பட்ட கஷ்டங்கள் பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதோடு அந்த நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் நிகழ்ச்சி தான் என்றும் சக்தி கூறி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியே வரும்போது கமல்ஹாசன் தன்னிடம் சொன்ன விஷயங்கள் குறித்தும் பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபலங்களில் வாரிசுகள் அவர்களுடைய குடும்பத்தினரை போல ஜொலிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அதில் ஒருவர் தான் சக்தி வாசு. இவர் இயக்குனர் வாசுவின் மகனாக இருந்தாலும் தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் கைகொடுக்கவில்லை.

vijay tv bigg boss

அந்த நேரத்தில் தான் இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தன்னுடைய அப்பாவின் பேச்சையும் மீறி சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி பலருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறது. சிலருக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகளை கொடுத்திருக்கிறது. அதுபோலத்தான் சக்தியின் வாழ்க்கையிலும் அப்படியே புரட்டி போட்டது என்று சொல்லலாம். அதுவரைக்கும் ஹீரோவாக சக்தி பலருக்கும் தெரிந்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வில்லன் போல சித்தரிக்கப்பட்டுவிட்டார்.

அதிலும் ஜூலி மற்றும் காயத்ரியோடு சேர்ந்து சக்தி நடந்து கொண்ட விதம் பலராலும் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து இப்போது சக்தி அவருடைய தந்தையோடு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அப்போது பல விஷயங்கள் பகிர்ந்திருக்கும் போது பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் என்னை பொருத்தவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் என்று தான் சொல்வேன்.

vijay tv bigg boss

காரணம் என்ன நடக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ அதுதானே நடக்கிறது. வெளியே என்ன தெரிய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களோ அதுதான் அவர்கள் தெரியப்படுத்துகிறார்கள். ஒரு நபரால் எப்போதும் நல்லவராக இருக்க முடியாது. சில நேரங்களில் அவர்களுக்கு கோபம் வரும் அந்த கோபத்தை தான் அவர்கள் டிஆர்பிக்காக வெளியே காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது கமல் சார் என்னை கேரவனுக்கு வரவைத்து பேசினார். அப்போது எனக்கு வெளியிலே என்ன மாதிரி பெயர் கிடைத்தது என்று எதுவும் தெரியாது. கமல் சார் என்னிடம் வெளியே என்ன நிலைமை இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் சக்தி என்று சொன்னார். நான் என்ன ஆச்சு சார் என்று கேட்டேன். அதற்கு அவர் சினிமாவில் நம்பியாரை தெரியுமா என்று கேட்டார். நானும் தெரியும் என்று நம்பியாரை போல எந்த நடிகனும் நல்லவனும் கிடையாது. ஆனால் அவரை போல சினிமாவில் வில்லன் இருக்க முடியாது என்று சொன்னார்.

என்னையும் ஆழ்வார்பேட்டையில் ஆரம்பத்தில் அவ்வளவு திட்டினார்கள், அவ்வளவு கிண்டல் செய்தார்கள். ஆனால் இப்போ நான் உலக நாயகனாக கொண்டாடப்படுகிறேன். அதுபோல உனக்குன்னு ஒரு காலம் வரும் என்று சொன்னார். எனக்கு அப்போது பாதி தான் புரிந்தது. ஆனால் வெளியே வந்து பார்த்த பிறகு தான் எனக்கு என்ன நடந்தது என்று புரிந்தது.

அதுபோல என்னுடைய அப்பா பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை கலந்து கொள்ள வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம் அவர் ஏற்கனவே கன்னடத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு படத்திற்காக பிரமோஷனுக்கு போயிருக்கிறார். அதனால் அங்கு என்ன நடக்கும் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் நான் இந்த விஷயத்தை பற்றி எதுவும் தெரியாமல் அந்த நிகழ்ச்சிக்கு போய்விட்டேன் என்று அந்த பேட்டியில் சக்தி பேசியிருக்கிறார்.

பொதுவாக தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிவுக்கு வந்திருக்கிறது. விரைவில் எட்டாவது சீசனும் தொடங்கப் போகிறது. ஆனால் முதல் இரண்டு சீசனங்களில் போட்டியாளர்கள் தான் நிகழ்ச்சி பற்றி பெரிய அளவில் எதுவும் தெரியாமல் கலந்து கொண்டார்கள் என்று சொல்லலாம். அதற்கு பிறகு உள்ள போட்டியாளர்கள் எந்தெந்த இடங்களில் எப்படி நடக்க வேண்டும்? நாம் எப்படி நடந்து கொண்டால் ப்ரோமோவில் காட்டுவார்கள் என்று எல்லா விஷயங்களையும் பார்த்து தெரிந்து கொண்டுதான் கலந்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி பேசியது இணையத்தில் அதிகமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+