மனஸ்தாபத்தை மறந்து.. மகள் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த பார்த்திபனுக்கு சேரன் கொடுத்த பதில்
சென்னை: இயக்குனரும் நடிகருமாக இருக்கும் "சேரனின்" மூத்த மகள் "நிவேதா பிரியதர்ஷினி"க்கு நேற்று முன்தினம் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று இருந்த நிலையில் இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் "பார்த்திபன்" சேரன் மகளுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு பார்த்திபன் மற்றும் சேரன் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு இருவரும் இணையத்தில் கடுமையாக விமர்சித்து இருந்தனர். ஆனால் தங்களுடைய வருத்தத்தையும் தாண்டி பார்த்திபன் சேரனின் மகளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் சேரன் அதற்கு பதில் கொடுத்து இருக்கிறார் அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

மதுரையை சார்ந்த இயக்குனர் சேரன் செல்வராணி என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினி, இரண்டாவது மகள் தாமினி இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி "சுரேஷ் ஆதித்யா" என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து சேரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். அதில், நேற்று நடந்த என்னுடைய மகள் திருமணத்தில் எனக்கு பலமாய் நின்று காலையிலிருந்து மாலை வரை அனைத்து வேலைகளையும் சந்தோஷமாக பார்த்து வருகை தந்த அனைவரையும் மகிழ்வாய் அனுப்பி வைத்த என்னுடன் பணிபுரிந்த என் தம்பிகள் (இயக்குனர் ஆனவர்களும், வருங்கால இயக்குனர்களும்) அனைவருக்கும் நன்றி.

திருமணத்தை மனப்பூர்வமாக வாழ்த்துடன் நடத்தி தந்த திரு ரவிக்குமார் சார், மரியாதைக்குரிய திருமதி ரவிக்குமார் அவர்களுக்கும் எங்கள் பெருமைக்குரிய இயக்குனர் இமயம் திரு. பாரதிராஜா, அன்பு அண்ணன் சீமான், திருமதி சீமான் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மகிழ்ச்சியும் நன்றியும் என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சேரன் மகள் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தன்னுடைய வாழ்த்துக்களை மணமக்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசிய பார்த்திபன், "சேரன் ஒரு சின்சியரான இயக்குனராக இருந்தாலும் மற்றவர்களை காயப்படுத்துவது குறித்து அவர் கவலைப்பட மாட்டார். அவருடைய பாரதி கண்ணம்மா படம் சாதிகள் ஒழிப்பை பற்றி பேசியது. ஆனால் படம் ரொம்ப சீரியஸாக இருப்பதே நாம் உணர்ந்தேன்.
அதனால் நானும் வடிவேலும் வேறு ஒரு படத்திற்காக வைத்திருந்த காமெடி ட்ராக்கை பயன்படுத்தி பாரதி கண்ணம்மா படத்தை கொஞ்சம் கலகலப்பாக மாற்றினோம். ஆனால் நான் கொடுத்த ஐடியா ஒர்க் அவுட் ஆயிடுச்சு என்றால் அவருக்கு பெயர் கிடைக்காது என்று அந்த காட்சியை அவர் படத்தில் வைக்க மறுத்துவிட்டார். பின்னர் எப்படியோ சமாதானம் செய்து அந்த காட்சியை வைத்துவிட்டோம்.

ஆனால் சேரன் நிறைய தகராறு செய்து ஊர் முழுவதும் எனக்கு கெட்ட பெயரை உண்டாக்கினார். என்னோட கதையில் பார்த்திபன் நுழைகிறார் என்று குற்றம் சாட்டி இருந்தார் என்று பேசியிருந்தார். மேலும் அவர் பேசுகையில் சேரனிடம் எனக்கே பிடிக்காத சில விஷயங்களும் இருக்கிறது. ஏதோ ஒரு குப்பையான படத்தை பார்த்துவிட்டு என்ன இது பார்த்திபன் படம் போல இருக்கிறது என்று மேடையிலே பேசினார்.
மற்றவர்களை காயப்படுத்துவதை பற்றி அவர் கவலையே படமாட்டார். அதில் தான் அவர் ஸ்பெஷல் என்று பார்த்திபன் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்த சேரன், ஏதோ ஒரு தவறான புரிதலில் பார்த்திபன் சொல்லியிருக்கிறார். அவர் மேல் எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. எந்த படத்தை பார்த்து நான் அப்படி சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை. அப்படி நான் சொல்லியிருந்தால் அது கண்டிப்பாக குப்பை படமாக இருக்காது.

சற்று டபுள் மீனிங் தூக்கலாக இருந்திருக்கும். அதனால் சொல்லி இருப்பேன் என்று தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதற்கு பதில் அளித்த பார்த்திபன், "திரு ராமகிருஷ்ணன் இயக்கிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மேடையில் நீங்கள் பேசியதை எனக்கு காண்பித்தார்கள். அதைப் பார்த்து நான் மிகவும் வருந்தினேன். அவமானங்களில் ஒன்றாக மனதில் தேங்கி தான் போனது. ஏதோ ஒரு தூண்டலில் அது வெளிப்பட்டது என்று பதில் கொடுத்திருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த சேரன், "அந்த திரைப்படம் உங்கள் பாணியில் இருப்பதாக குறிப்பிட நினைத்தேனே தவிர குப்பை படம் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க மாட்டேன். தவறி வந்திருந்தால் மன்னிக்கவும். புதிய பாதை, ஹவுஸ்புல், குடைக்குள் மழை, ஒத்த செருப்பு எல்லாம் பார்த்து என்னை மறந்து பேசி இருக்கிறேன் உங்களிடம்..." என்று விளக்கம் கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் இப்போது சேரனின் மகள் திருமணத்திற்கு பார்த்திபன் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் சேரன் அதற்கு "மகிழ்ச்சியும் நன்றியும் சார்..." என்று பதில் கொடுத்திருக்கிறார்.
-
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications