பூவே உனக்காக படத்தை ஆரம்பத்தில் பெண்கள் பார்க்க விரும்பல.. காரணம் விஜய்! இயக்குனர் ராஜகுமாரன் ஓபன்
சென்னை: நடிகர் மற்றும் இயக்குனர் ராஜகுமாரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் உதவி இயக்குனராக இருந்த பூவே உனக்காக திரைப்படத்தை ஆரம்பத்தில் பெண்கள் பார்க்க விரும்பவில்லை என்று அப்போது நடந்த சில விஷயங்களை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
பொதுவாக இப்போது உள்ள சூழ்நிலையில் ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு அதிகமான விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அந்த அளவிற்கு பெரிய அளவில் விளம்பரம் செய்ய முடியாது. இப்போது திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே பல ரிவியூவர்ஸ் தங்களுடைய ரிவ்யூ கொடுத்து விடுகிறார்கள். ரிவ்யூ கொடுத்தே ஒரு சிலர் பெரிய அளவில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.

திரைப்படமாக இருந்தாலும் சரி சாப்பாடாக இருந்தாலும் சரி அதை நாம் முயற்சித்துப் பார்ப்பதற்கு முன்பு அடுத்தவர்களின் ரிவ்யூ கேட்டு விட்டு அதற்கு பிறகு அந்தப் படத்தை பார்க்கலாமா? அல்லது சாப்பாட்டை சாப்பிடலாமா? என்று பல பேர் யோசிக்கிறார்கள். அதனாலேயே நாளுக்கு நாள் ரிவ்யூவர்ஸ் கூடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இந்த மாதிரி சூழ்நிலை கிடையாது.
அது பற்றி இயக்குனர் ராஜகுமாரன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். பொதுவாக விஜய் ஆரம்ப காலகட்டத்தில் நடிக்கும் போது அவருடைய திரைப்படம் கவர்ச்சி நிறைந்ததாக தான் இருக்கும். அதிலும் விஷ்ணு, ரசிகன், தேவா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்று பல திரைப்படங்களில் கதாநாயகியோடு இவருடைய ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அதனாலேயே விஜயின் திரைப்படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகமாக சினிமா தியேட்டருக்கு வர மாட்டார்கள். அந்த குறையை நீக்கிய திரைப்படம் என்றால் அது பூ உனக்காக திரைப்படம் தான்.
அந்த திரைப்படத்தை இயக்குனர் விக்ரமன் தான் இயக்கி இருந்தார். விக்ரமன் இயக்கிய அந்த திரைப்படத்தில் இயக்குனர் ராஜகுமாரன் உதவி இயக்குனராக இருந்தார். இந்த நிலையில் அவர் பூவே உனக்காக திரைப்பட அனுபவம் பற்றி பேசுகையில் விக்ரம் சார் அமைச்ச பாதை வழியாகத்தான் விஜய் நடந்து போய் இவ்ளோ பெரிய ஆளா இருக்காருங்கறது தான் உண்மை. பூவே உனக்காக படம் வெளியாவதற்கு முன்பே விஜய்க்கு 100 நாட்கள் ஓடிய படங்கள் நிறைய இருக்கிறது.
அவரது முதல் படம் 100 நாள் ஓடிய படம் தான். ஆனால் அந்தப் படங்களுக்கு பேமிலி ஆடியன்ஸ் வர மாட்டாங்க. உதாரணத்துக்காக சொல்லணும்னா பூவே உனக்காக படம் சென்னை கமலா தியேட்டர்ல ஓடுச்சு. ரெண்டு மூணு வாரமா ஃபேமிலி ஆடியன்ஸ் வரல முழுக்க ஆண்கள் மட்டும் தான் வந்து பாத்துட்டு போறாங்க. அது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. படம் ஹவுஸ் ஃபுல்லா போனாலும் பேமிலி ஆடியன்ஸ் அவ்வளவா வரலையே என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.
அந்த நேரத்தில் ஒரு நாளிதழில் வர விமர்சனம் பெரிதாக பேசப்படும். அதில் தான் காதலுக்கு இன்னொரு தேசிய கீதம்ன்னு இந்த படத்தை பற்றி போட்டிருந்தாங்க. அதற்குப் பிறகு அந்த படம் 275 நாட்கள் ஓடிச்சி. தேவயானி கூட இது பற்றி ஒரு இன்டர்வியூல சொல்லி இருப்பாங்க அப்போ விக்ரம் சாரோட அசிஸ்டன்ட் ரவிசங்கர் தேவயானி இடம் கதை சொல்வதற்காக போயிருக்கிறார். அப்ப இந்த பக்கத்து தியேட்டர்ல ஓடிகிட்டு இருக்குதே பூவே உனக்காக படம் அந்த படத்தோட டைரக்டர் விக்ரமன் சார் என்னை கதை சொல்ல உங்களிடம் அனுப்புனாரு என்று தேவையானி இடம் சொன்னாராம்.
உடனே பூவே உனக்காக படம் ஹிட்டானதை வைத்து தேவயானி கதையே கேட்காமல் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம். அது என்ன படம்னா சூர்யவம்சம் தான் என்று ராஜகுமாரன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதுபோல பூவே உனக்காக திரைப்படம் 90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் திரைப்படங்களில் ஒன்று. விக்ரமன் இயக்கிய பலா திரைப்படங்கள் ரசிகர்கள் இப்போதும் கொண்டாடும் திரைப்படங்களாக இருக்கும். ஆனாலும் பூவே உனக்காக திரைப்படத்தில் அழகான சொல்லப்படாத காதல்.. அதன் வலி பார்க்கும் ரசிகர்களையும் உணர வைத்திருக்கும்.












Click it and Unblock the Notifications