விஜய்க்கு மட்டும் தானா? கடுப்பான "தேவயானி”யின் கணவர்.. இதை கவனிச்சீங்களா? இவர்தான் பெஸ்ட் கணவர்
சென்னை: இயக்குனர் ராஜகுமாரன் தன்னுடைய மனைவிக்காக பத்திரிக்கையாளர்கள் முன்பு கோபப்பட்டு இருக்கிறார்.
நடிகை தேவயானி இடம் பத்திரிகையாளர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல சொன்ன நிலையில் அதனால் பிரச்சனை வெடித்திருக்கிறது.
இந்த பிரச்சனையிலும் தேவயானியின் மீது அவருடைய கணவருக்கு இருக்கும் காதல் மற்றும் பாசத்தை பார்த்த ரசிகர்கள் மெச்சிக் கொள்கின்றனர்.

சின்னத்திரை வெள்ளித்திரை ஆக இருந்தாலும் சரி, சாதாரண பொது மக்களாக இருந்தாலும் சரி காதல் என்பது பலருக்கும் சமமானது தான். ஒரு சிலர் மட்டும்தான் அந்த காதலில் ஜெயித்து திருமண வாழ்க்கையில் வெற்றிகரமாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஒருவராக நடிகை தேவயானி மற்றும் அவருடைய கணவர் இயக்குனர் ராஜகுமாரன் இருந்து வருகிறார்கள்.
நடிகை தேவயானி முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும்போது அவர் நடித்த திரைப்படத்தின் இயக்குனரை காதலித்து வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டிருந்தார். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை தம்பதிகளான மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் ஜோடி எவ்வளவுக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமாக பேசப்பட்டதோ அந்த அளவிற்கு அந்த நேரத்தில் சமூக வலைத்தளம் இல்லாமல் திரை வட்டாரத்தில் பலரையும் ஆச்சரியப்பட வைத்து, வியக்க வைத்தது தேவயானியின் திருமணம் தான்.
இயக்குனர் ராஜகுமாரன் பெரிய அளவில் பண வசதி, அழகு என இல்லாமல் இருந்தாலும் அதுவெல்லாம் காதலுக்கு தேவையே இல்லை என்று தேவயானி நிரூபித்து இருக்கிறார். அதுபோல ராஜகுமாரனும் என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டால் உன்னுடைய வாழ்க்கையை நீ தியாகம் செய்ய வேண்டும் என்று சொல்லாமல் தேவயானியின் முயற்சிகளுக்கும், வெற்றிகளுக்கும் உறுதுணையாக இப்ப வரைக்கும் இருந்து வருகிறார். அதுதான் நேற்று நடந்த சம்பவம் கூட பலருடைய மனதையும் வியக்க வைத்திருக்கிறது.

நேற்று நடிகை தேவயானியின் பிறந்தநாள். அதுபோல நடிகர் விஜய்யின் பிறந்த நாளும் கூட. இருவரும் ஜோடியாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று நடிகை தேவயானி தன்னுடைய கணவரோடு சேர்ந்து "அழகிய கண்ணே" என்ற திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்திருக்கிறார். அப்போது பத்திரிக்கையாளர்கள் சிலர் கூடி தேவயானி இடம் பேட்டி எடுத்து இருக்கின்றனர்.
இயக்குனர் ராஜகுமாரன் பல திரைப்படங்களை வெற்றிபடமாக கொடுத்து இருந்த நிலையிலும் இப்போது ஒரு சில வருடங்களாக அவர் எந்த திரைப்படங்களையும் இயக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தன்னுடைய மனைவியோடு வந்த நிலையில் தான் பார்த்த திரைப்படத்தை பற்றி பாராட்டி பேசி இருந்தார். ஆனாலும் அங்கிருந்து அனைத்து மைக்களும் அதிகமாக தேவயானி முன்பு போய்க்கொண்டே இருக்கிறது. அதுபோல கேமரா கூட தேவயானியை தான் போக்கஸ் பண்ணுகிறது.
ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத ராஜகுமாரன் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தேவயானியிடம் ஒரு நிருபர் ஒருவர்," இன்னைக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் நீங்க அவருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?.." என்று கேட்க, அப்போது அங்கிருந்து விலகி இருந்த ராஜகுமாரன் மீண்டும் பிரேமுக்குள் வந்து, என்ன நீங்க பேசுறீங்க? இன்னைக்கு தேவயானிக்கும் தான் பிறந்தநாள். அதை யாரும் கேட்க மாட்டீங்களா? அதை எல்லாரும் மறந்துட்டீங்களா? விஜய் பிறந்தநாள் பத்தி மட்டும் கேக்குறீங்க? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதற்கு தேவயானி சிரித்தபடியே தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை விஜய்க்கு கூறியிருக்கிறார். ஆனாலும் தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மனைவிக்கு ஆதரவாக டக்கென்று குரல் கொடுத்த அவருடைய கணவர் ராஜகுமாரனை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அதுபோல தேவயானியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களும் குவிகிறது.
-
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications