குஷ்பு என் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால்! அந்த நடிகையிடம் ப்ரொபோஸ் பண்ணி இருப்பேன்! சுந்தர் சி
சென்னை: நடிகை குஷ்புவின் கணவரும் இயக்குனருமான சுந்தர் சி பேட்டி ஒன்றில் பேசும் போது குஷ்பூ தன்னுடைய வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் தான் வேறு ஒரு நடிகையிடம் தன்னுடைய காதலை சொல்லி இருப்பேன் என்று அந்த நடிகையின் பெயரை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். அது யார் என்று பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ஒன்றாக நடிப்பவர்கள், ஒரே படத்தில் நடித்தவர்கள் என்று பலர் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் பல வருடங்களுக்கு முன்பே இடம் பிடித்தவர் தான் குஷ்பூ மற்றும் சுந்தர் சி. இவர்கள் இருவரும் முறை மாமன் திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றும் போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது என்று குஷ்பூ பட பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

குஷ்பூ அந்த நேரங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் போது அறிமுகம் இயக்குனரான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்தது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. தமிழ் சினிமாவில் குஷ்புவுக்கு கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் இருக்கும் நிலையில் குஷ்பூ தன்னுடைய திரைப்படத்தை இயக்குனர் திடீர் திருமணம் செய்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
ஆனாலும் இந்த தம்பதி இப்ப வரைக்கும் மகிழ்ச்சியாக தங்களுடைய திருமண வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல சுந்தர் சி 90ஸ் காலகட்டத்தில் தொடங்கி இப்ப வரைக்கும் காமெடி திரைப்படங்களையும் கலக்கல் ஆக எடுத்துக் கொண்டிருக்கிறார்.
சுந்தர் சி இயக்கத்தில் உருவான உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு, முறைமாமன், அரண்மனை என பல வெற்றி படங்கள் இடம் பிடித்திருக்கிறது. அதில் கடந்த சில ஆண்டுகளாக இவர் இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 3 மற்றும் காபி வித் காதல் படம் தோல்வியடைந்த நிலையில் அரண்மனை 4 படம் பெரிய அளவில் இவருக்கு வெற்றியை கொடுத்தது.
அரண்மனை 4 படம் மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தது. இதனால் தமிழில் சினிமாவில் இப்போது பிஸியான இயக்குனராக மாறி இருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் சுந்தர் சி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது எனக்கு ஒரு நடிகை மீது கிரஷ் இருந்தது என்று ஓபன் ஆக பேசி இருக்கிறார். அதில் நான் ஒர்க் பண்ணுனதில் எனக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோயின் என்றால் அது சௌந்தர்யா தான்.
ஒருவேளை என்னுடைய வாழ்க்கையில் குஷ்பூவை நான் சந்திக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக சௌந்தர்யாவுக்கு ப்ரொபோஸ் பண்ணி இருப்பேன். அவங்க ரொம்ப நல்ல கேரக்டர். இப்படி ஒரு நல்ல பெண்ணை பார்ப்பது ரொம்பவும் அரிது. அதுபோல அவருடைய அண்ணன் அபர் அவங்கள விட்டு ஒரு செகண்டு கூட நகர மாட்டார்.
சூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் தன்னுடைய தங்கைக்காக துணைக்கு நிற்பார். அதனால் தான் சாகும்போது கூட இரண்டு பேரும் ஒண்ணா செத்துப் போயிட்டாங்க. அவரது இறப்பு ரொம்ப துரதிர்ஷ்டமான விஷயம் என்று அந்த பேட்டியில் சுந்தர் சி கூறியிருக்கிறார்.
முறைமாமன் ஷூட்டிங் நடைபெறும் போது சுந்தர் சி தனக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகை கொடுத்து தன்னிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே இருப்பார் என்று குஷ்பூ பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதுபோல தன்னை காதலிக்கிற விஷயத்தை கூட சுந்தர் சி தன்னிடம் முதலில் சொல்லாமல் என்னுடைய அம்மாவிடம் சொல்லி அவரிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் என்னிடம் வந்து சொன்னார், எந்த இடத்திற்கு போனாலும் சுந்தர் சி என் மீது காட்டும் அக்கறை எனக்கு பிடித்திருந்தது.
அதனால் அவர் என்னிடம் காதலை சொன்னபோது உடனே சம்மதிக்கவில்லை என்றாலும் சில மணி நேரம் கழித்து அவருக்கு சம்மதத்தை சொல்லி விட்டேன் என்று குஷ்பூ கூறியிருக்கிறார். இந்த நிலையில் சுந்தர் சி இப்போது சௌந்தர்யா பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications