இயக்குனர் தங்கர்பச்சான் குடும்பத்தில் ஒரு ஐபிஎஸ்.. யுபிஎஸ்சி தேர்வில் டாப் ரேங்க்.. கடலூர் ஊரே கொண்டாடுது
சென்னை: திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சானின் அண்ணன் பேத்தி சரண்யா யுபிஎஸ்சி தேர்வில் 125 வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். யுபிஎஸ்சி தேர்வில் சாதிக்க வேண்டும் என்று பல கனவுகளோடு பல ஆண்டுகளாக உழைத்து வந்த சரண்யாவிற்கு பலரும் வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி)2024 ஆம் ஆண்டுக்கான குடிமை பணிகள் தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் இயக்குனர் தங்கர் பச்சானின் அண்ணன் பேத்தி சரண்யா 125 வது இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த மகிழ்ச்சி செய்தியை தங்கர்பச்சான் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிந்து இருக்கிறார்.

தங்கர் பச்சான் அண்ணன் பேத்தி
இயக்குனர் தங்கர் பச்சானின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டை பகுதியில் அவருடைய அண்ணன் செல்வராஜ் வசித்து வருகிறார். சென்னை பல்லவன் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து இப்போது ஓய்வு பெற்று இருக்கிறார். தற்போது சொந்த ஊரில் அவர் விவசாய வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருடைய மகள் சரண்யா சமீபத்தில் நடைபெற்ற யூபிஎஸ்சி தேர்வு எழுதி இருந்தார்.
நான்கு முறை முயற்சி
இந்த தேர்வை அவர் நான்காவது முறையாக எழுதியிருந்தார். இந்த நிலையில் இந்திய அளவில் 125 வது இடம் பிடித்து ஐஏஎஸ் ஆக தேர்வாகி இருக்கிறார். படிப்பதற்காக சென்னையில் வசிக்கும் இவர் இன்று சொந்த ஊருக்கு வருவதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தங்கப் பச்சான் வெளியிட்ட பதிவில் தனது சகோதரரின் பேத்திக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தங்கர் பச்சான் பதிவு
அதன்படி அவர் அதில் கூறும் போது, என்னுடைய மூத்த அண்ணன் செல்வராசு அவர்களின் பேத்தி சரண்யா இந்திய அரசு பணி தேர்வில் இந்திய அளவில் 125வது இடத்தைப் பிடித்து ஐஏஎஸ் ஆகி இருக்கிறார். எனது ஊர் பத்திரகோட்டைக்கும், கடலூர் மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று அவருடைய புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டி வருகிறார்கள்.
தகுதியானவர்கள் விபரம்
யுபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் ஐஏஎஸ் (இந்திய ஆட்சி பணி) ஐபிஎஸ் (இந்திய காவல் பணி) ஐஎஃப்எஸ் (இந்திய வெளியுறவு பணி) உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வு முதல் நிலை (பிரிலிமரி) முதன்மை மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. இதில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி நடத்தப்பட்டது. 5,83,213 பேர் இதற்காக அப்ளை செய்திருந்த நிலையில் 14627 பேர் முதன்மை தேர்வு எழுத தகுதி பெற்றனர்.
தேர்வு முடிவுகள்
அதைத்தொடர்ந்து கடந்தாண்டு செப்டம்பரில் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இதில் 2845 பேர் நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றனர். இறுதி தேர்வான நேர்முக தேர்வு கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் தான் கடந்த செவ்வாய்க்கிழமை நேற்று வெளியிடப்பட்டன. இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளின் பணியமர்த்த 752 ஆண்களும் 284 பெண்கள் உட்பட 1009 பேரை யுபிஎஸ்சி பரிந்துரை செய்திருக்கிறது.
மீண்டும் வாழ்க்கை இருக்கிறது
இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல வருடங்களாக உழைப்பை போட்டவர்கள் ஏராளம். இதில் ஒரு மார்க், அரை மார்க்கில் கூட பலர் வெற்றி வாய்ப்பை தவறவிட்டிருக்கலாம். அவர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது இதைவிட சிறப்பாக அவர்களுக்கு வெற்றியும் வாழ்க்கையில் மாற்றமும் ஏற்படும். அதே நேரத்தில் வெற்றி பெற்றவர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு இந்த நாட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்பதும் பலருடைய எதிர்பார்ப்பு.
என்னுடைய மூத்த அண்ணன் செல்வராசு அவர்களின் பெயர்த்தி (பேத்தி) சரண்யா சரவணன் இந்திய அரசுப்பணித் தேர்வில் இந்திய அளவில் 125 இடத்தைப்பிடித்து IAS தேர்வாகி உள்ளார்.
— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) April 22, 2025
எனது ஊர் பத்திரக்கோட்டைக்கும் கடலூர் மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன்… pic.twitter.com/Bw6nhkcLvv
தங்கர் பச்சான் அண்ணன் பேத்தி பேட்டி
அதே நேரத்தில் இந்த தேர்வில் 125 வது இடத்தில் வெற்றி பெற்ற இயக்குனர் தங்கப்பச்சானின் அண்ணன் பேத்தி பேசும் போது நான் இந்த தேர்வுக்காக மூன்று வருடங்களாக பயிற்சி எடுத்தேன். எனக்கு என்னுடைய குடும்பத்தினர் நண்பர்கள் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதே நேரத்தில் இந்த தேர்வில் நான் வெற்றி பெற்று இருப்பது போல இன்னும் கிராமப்புறத்தில் இருந்தும், ஏழ்மையான குடும்பத்தில் இருப்பவர்களும் நம்மால் முடியும் என்று காட்ட வேண்டும். என்னால் முடிந்த அளவிற்கு கஷ்டப்படுபவர்களுக்கு நான் உழைப்பேன் என்று பேசி இருக்கிறார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications