எதிர்நீச்சல் 2வின் கதையே இதுதான்! வெளிப்படையாக பேசிய இயக்குனர்.. ஜனனி கேரக்டருக்கு கிடைத்த பிளஸ்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு பிறகு சில மாதங்கள் கழித்து அந்த சீரியலின் இரண்டாவது பாகம் இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் என்ன மாதிரி கதை இருக்கப் போகிறது என்று இயக்குனர் திருச்செல்வம் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் கிட்டத்தட்ட 2000 எபிசோட்டுக்கு ஓடும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு அவசர அவசரமாக 770 எபிசோட்டில் முடிவுக்கு கொண்டு வந்தது அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனாலும் ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சீரியலில் இரண்டாவது பாகம் இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

முதல் பாகத்தில் நடித்த பல நடிகர்கள் தொடருகிறார்கள். இதுபோல இரண்டாவது பாகத்தையும் இயக்குனர் திருச்செல்வம் தான் இயக்குகிறார். இந்த சீரியல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த பாகத்தில் என்ன மாதிரி கதை இருக்கிறது என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் ரசிகர்களுக்கு சீரியலின் கதை பற்றி இயக்குனர் திருச்செல்வம் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில் வெவ்வேறு குடும்பத்தில் இருந்து வந்த பெண்கள் ஒரு வீட்டுக்கு மருமகளாக வந்த பிறகு அவர்களுடைய கனவுகள் அனைத்தும் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் தன்னுடைய கனவுகளை யாருக்காகவும் எதற்காகவும் கைவிடக்கூடாது என்று தைரியத்தை சொல்லி ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களின் கனவை நிறைவேற்ற பாடப்படும் விதமாக ஜனனி கேரக்டர் வருகிறார்.

அதன்படி இனி ஈஸ்வரி அவருக்கு தெரிந்த அனுபவங்களை புகட்டும் விதமாக அவருடைய கேரக்டர் இருக்கப் போகிறது. அதுபோல இதுவரைக்கும் ஈஸ்வரி எப்போதும் சோகமாக இருந்தது போல மட்டும் இனி இருக்க போவது கிடையாது. சந்தோஷத்தை எப்படி கொண்டாடலாம் என்று ஒரு துணிச்சலான பெண்ணாக இருக்கப் போகிறார்.
ஈஸ்வரி போலவே நந்தினி தனக்கு தெரிந்த சமையல் விஷயத்தை வைத்து எப்படி படிப்படியாக முன்னேறி காட்ட போகிறார் என்று நந்தினியின் வெற்றியும் நிகழப்போகிறது. இவர்களைத் தொடர்ந்து ரேணுகா இளம் வயதில் தன்னால் சாதிக்க முடியாமல் போயிருந்தாலும் வயதான பிறகு எப்படி நாம் சாதிக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்த நிலையில் இப்போது பரதத்தின் மூலம் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு நிச்சயம் ஒரு வழியாக காட்டியாக இருக்கப் போகிறார்.
ரேணுகா நடத்தும் பரதநாட்டியம் பள்ளிக்கூடம் மூலம் அவருடைய கனவு நிறைவேற போகிறது. இப்படி இவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படி கற்களிலும் வித்தியாசமான குணசேகரனை சந்திக்கப் போகிறார்கள். வீட்டில் மட்டுமல்லாமல் வெளியில் அந்த குணசேகரன் எப்படி ஓவர் டேக் செய்து சாதனை புரிகிறார் என்பதை தான் இந்த நாடகத்தின் கதையாக இருக்க போகிறது.

அதோடு நீங்கள் எதிர்பார்த்த பல விஷயங்கள் இருக்கலாம். சில விஷயங்கள் இல்லாமலும் இருக்கலாம். ஜனனி கதாபாத்திரம் என்னவென்றால் படித்துவிட்டு சுயமாக சம்பாதிக்க முடியாமல் அவஸ்தைப்படும் ஒவ்வொரு இல்லத்தரசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் ஜனனி ஒரு ஸ்டார் ஆக இருக்கப் போகிறார்.
இத்தனை விஷயங்கள் நான் சொல்லி இருப்பதால் இனி இந்த சீரியல் பரபரப்பு மட்டும் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். நக்கல், நையாண்டி, கலகலப்பு என அனைத்தும் தூக்கலாகவே வைக்கப்பட்டிருக்கும். முழுக்க முழுக்க நீங்கள் எதிர்பார்த்தபடி உங்களை எதிர்நீச்சல் 2 கதையுடன் சந்திக்கிறேன் என்று இயக்குனர் திருச்செல்வம் கூறியிருக்கிறார்.
அதோடு புதிய ஜனனியாக விஜே பார்வதி நடிக்கிறார். அவர் ஜனனி கேரக்டருக்கு தகுந்தது போன்ற கம்பீரமாகவும், துணிச்சலாகவும் காணப்படுகிறார். இதனால் இந்த சீசன் மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications