நடிகர் விசுவின் நினைவு தினம்: தன்னுடைய படங்களில் தொடர்ந்த "அந்த” பெயர்.. காரணம் இதுதான்..!?

மறைந்த நடிகர் விசு தன்னுடைய திரைப்படங்களில் உமா என்ற பெயர் தொடர்ந்ததற்கான சுவாரஸ்யமான கதை இதுதானாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு திறமைகளை கொண்ட நடிகர் விசு கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதியில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.

இந்த நிலையில் அவருடைய நினைவு நாளான இன்று அவரைப் பற்றி ரசிகர்கள் வருத்தமான பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அவர் தன்னுடைய திரைப்படங்களில் நடந்த சுவாரசியங்களை பற்றி பகிர்ந்த தகவல்களும் தற்போது பலருக்கும் வியப்பை கொடுத்திருக்கிறது.

பல்வேறு திறமைகள்

பல்வேறு திறமைகள்

தமிழ் சினிமா உலகில் பிரபலமான ஒரு நடிகராக விசு பலருக்கும் பரீட்சயமாகி இருந்தாலும், அவர் ஒரு திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர். இவர் கடைசியாக தங்கமணி ரங்கமணி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இவர் சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இருந்தார். வயது முதிர்ச்சி காரணமாக தன்னுடைய கடைசி காலகட்டத்தில் சில வருடங்களாக டயாலிசிஸ் செய்து வந்து நடிப்பை நிறுத்திக் கொண்டார்.

விசுவின் குடும்பம்

விசுவின் குடும்பம்

நடிகர் விசு 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். இவருக்கு லாவண்யா, சங்கீதா, கல்பனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இறப்பதற்கு முன்பாக விசு ஒரு பேட்டி ஒன்றில் பேசியது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் நீங்கள் உங்கள் எல்லா படத்திற்கும் உமா என்று பெயர் வைத்து இருக்கிறீர்களே! உங்களுடைய மனைவி பெயர் என்பதாலா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு விசு உமா என்பது என்னுடைய மனைவி பெயர் கிடையாது என்று பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

முதல் கதை

முதல் கதை

அதில் நான் முதலில் ட்ராவல்ஸில் இருந்தேன் அப்போது முப்பது நாற்பது பெண்மணிகளோடு ஸ்ரீலங்கா பயணம் செய்தோம். அங்கு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது நான் ரூமுக்கு வெளியே உட்கார்ந்து என்னுடைய முதல் கதை எழுதினேன். அங்கிருந்த டீச்சர்களில் ஒருவர்தான் உமா. அவர் என்னை பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். நானும் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினேன். சரி சொல்லுங்கள் உங்கள் கதையை என்று கூறினார்.

ஆசிரியையின் பாராட்டு

ஆசிரியையின் பாராட்டு

நானும் அப்போது என் கதையை கேட்க யாரும் இருக்க மாட்டார்களா என்று நினைத்தது உண்டு. பின் அவரிடம் என் கதையை கூற கூற என்னுடைய கதையை கேட்டு அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. பிறகு இறுதியில் நீங்கள் இங்கு இருக்க வேண்டிய ஆளே கிடையாது. இவ்வளவு அற்புதமாக கதையை எழுதி உள்ளீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பெரிய ஆளாக வருவீர்கள் என்று கூறினார்.

கதாநாயகி ஆன பெயர்

கதாநாயகி ஆன பெயர்

அப்போதுதான் நான் முடிவெடுத்தேன். என்னுடைய எல்லா படத்திற்கும் உமா என்று பெயரை வைக்க வேண்டும் உண்மையிலே அவர்கள் மாதிரி ஒரு உன்னதமான நேர்மையான ஆசிரியரை நான் பார்த்தது கிடையாது. அது மட்டுமல்லாமல் என்னுடைய மனைவி பெயர் அது இல்லை. அவர் பெயர் சுந்தரி தான். பொய் கதாநாயகிகளுக்கு மட்டும் தான் உமா பெயர் வைக்க வேண்டுமா? என்னுடைய உண்மை கதாநாயகிக்கு ஏன் வைக்கக்கூடாது என்று தான் அவருடைய பெயரை உமா என்று வைத்தேன். இது பற்றி என்னுடைய மனைவி இடம் கூற, அவரும் மறுப்பு எதுவும் கூறாமல் சரி என்று ஒத்துக் கொண்டார் என்று அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோவிற்கு அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+