“காதல் நாயகன் பார்வை பட்டதும்” டிடி வெளியிட்ட க்யூட் வீடியோ! குவியும் வாழ்த்து.. உருக்கமான வேண்டுகோள்
சென்னை: டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது. அந்த வீடியோவில் டிடி ரசிகர்களிடம் உருக்கமான ஒரு வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
தொகுப்பாளர்கள் பலர் இருந்தாலும் டக்கென்று ஞாபகத்திற்கு வருவது டிடியின் முகம் தான். அவருடைய மனதில் எவ்வளவு வலிகளும் வேதனைகளும் இருந்தாலும் கேமரா முன்னாடி வந்து விட்டாலும் சரி அடுத்தவர்களின் முன்னாடியும் சரி தன்னுடைய கவலைகளை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கும் ஒரு சிலருக்கு இவரை பிடிக்காமல் போனதற்கு இதுவும் ஒரு ரீசன்.

வாயை திறந்தாலே எதிரில் இருப்பவர்கள் எல்லாம் வெட வெடத்துப் போய் விடுவார்கள். அந்த அளவிற்கு ஜாலியாக குறும்பாக பேசி மனதில் இருக்கும் கவலைகளை எல்லாம் மறக்க வைப்பதில் கில்லாடி தான் டிடி என்னும் திவ்யதர்ஷினி. இவருடைய நிகழ்ச்சியை பலரும் தொடர்ந்து பார்ப்பதற்கு அது ஒரு காரணம் தான்.

பார்ப்பவர்கள் என்ன வேணா நினைச்சுட்டு போங்க என்னுடைய வேலையில் மட்டும் தான் எனக்கு கவனம் இருக்கிறது என்று தன்னுடைய வேலையில் கவனமாக இருப்பதால் தான் இவரால் இந்த அளவிற்கு முன்னேறி வர முடிந்திருக்கிறது. இவரை தொகுப்பாளர் ஆகவே பார்த்து வந்த ரசிகர்கள் ஒரு சில திரைப்படங்களில் நடிகையாகவும் பார்த்து இருக்கின்றனர். ஆனால் அதையும் தாண்டி அடிக்கடி மாடலிங் போட்டோக்களையும் எடுத்து குவிப்பார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் மறக்காமல் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருப்பது இவருக்கு மகிழ்ச்சிதான்.
வெளிநாட்டில் டிடியை தூக்கி சுற்றிய பிரபலம்.. இவர் யார் தெரியுமா? மகிழ்ச்சியாக டிடி வெளியிட்ட பதிவு!
இவர் தொகுப்பாளராக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் அணியும் ஆடைகளை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இவரை பின் தொடரும் அந்த அளவிற்கு உடைகளை தேர்ந்தெடுப்பதில் கவனமாகவும், அழகாகவும் இருந்து வருகிறார் . அடிக்கடி மாடல் உடைகளில் வலம் வந்தாலும் புடவையிலும் பேரழகு தான் என்பதை இப்போது நிரூபித்திருக்கிறார். கொஞ்ச நாட்களாக இவர் எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்காமல் இருந்து வந்தார். இப்போது மதகஜராஜா திரைப்பட பிரமோஷன் போது மீண்டும் தொகுப்பாளராக காலடி எடுத்து வைத்திருக்கிறார். இதை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் வாங்க தலைவி என்று இவருக்கு கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.

இவர் நிகழ்ச்சிகளில் மட்டும் பிசி அல்ல சமூக வலைத்தளத்திலும் பிசி தான். ஒவ்வொரு வருடமும் வயது கூடக்கூட இவருக்கு மட்டும் இளமையும் கூடிக்கொண்டே போகிறது. அதற்கான காரணம் என்ன என்று பலர் தெரிந்துகொள்ள துடிக்கின்றனர். ஆனால் இவரோ அதற்கும் தன்னுடைய புன்னகையை மட்டுமே பதிலாக உதிர்த்திருக்கிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட் தான் வேற லெவல் வைரலாகி வருகிறது.

அதாவது "காற்றில் ஒரு கீதம்" திரைப்படத்தில் எஸ்பிபி பாலசுப்ரமணியன் மற்றும் ஜானகி பாடிய "ஜெர்மனியில் செந்தேன் மலரே" என்ற பாடலில் இடம்பெற்ற "காதல் நாயகன் பார்வை பட்டதும் நான் மலர்ந்தேன்" என்ற வரிகளுக்கு ரீல்ஸ் எடுத்திருக்கிறார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "ஏன் இந்த ரீல்ஸ் என்று யாரும் கேட்காதீங்க டார்லிங். இதற்கு என்னிடம் பதில் இல்லை. பிடிச்சா இரண்டு முறை பாருங்க. இல்லன்னா ஸ்க்ரோல் பண்ணிடுங்க ஜி... என்ன என் மனசு கஷ்டப்படும்... அவ்வளவுதான்!" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதோடு இந்த பாடல் வரிகள் நல்லா இருக்கா? என்று டிடி கேட்டிருக்கிறார். இதற்கு கமெண்டுகள் குவிந்து வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications