தயவுசெய்து சித்ராவை பற்றி அப்படிச் சொல்லாதீங்க.. கதறி அழும் தியா மேனன்
சென்னை: தனது தோழி சித்ராவின் மரணம் தொடர்பாக கதறி அழுது தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் தியா மேனன்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை செய்து இறந்து விட்டார். அவருடைய ரசிகர்களும் உறவினர்களும் அதிர்ச்சியாக உள்ளனர்.
இந்த நிலையில் சித்ராவை பற்றி ஒவ்வொருவரும் நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். அவரது நெருங்கிய தோழியான தியா மேனன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

கதறும் தியா
அந்த வீடியோவில் தியா கூறுகையில், சித்துவின் ரசிகர்களுக்கும் உறவினர்களுக்கும் தான் இந்த வீடியோ சித்துவை பற்றி அனைவரும் என்னிடம் போன்பண்ணி மெசேஜ் பண்ணியும் கேட்டு வருகின்றனர் .அவரைப் பற்றி ஏதாவது கூறுங்கள் என்று கூறி வருகிறார்கள். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று அனைவரும் என்னிடம் கேட்டு வருகின்றனர்.

கேட்கவே கஷ்டமா இருக்கு
அந்த மாதிரி ஒரு வார்த்தையை தயவுசெய்து சொல்லாதீர்கள் அதைக் கேட்கும்போதே கஷ்டமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனால் பிரேதப் பரிசோதனையிலும் கூட தற்போது சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்று முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் அந்த அதனை அவருடைய ரசிகர்களும் உறவினர்களும் ஏற்க மறுக்கின்றனர் .

சித்ரா கோழை அல்ல
அவர் அந்த அளவிற்கு ஒரு கோழை கிடையாது என்றுதான் இப்ப வரைக்கும் கூறி வருகின்றனர் .ஆனாலும் தற்கொலைக்கான காரணத்தை காவல்துறை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கேட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வைரலாக தற்போது சித்ராவின் மரணம் பற்றி பல்வேறு காரணங்களையும் கருத்துக்களையும் பரப்பி வந்தாலும் உண்மையான காரணம் என்ன என்று போலீஸ் அறிக்கையில் தான் தெரியும்.

போலீஸ் விசாரிக்கட்டும்
அது வரைக்கும் இந்த மாதிரி ஒவ்வொன்றாக கேட்டு எங்களை டார்ச்சர் செய்யாதீர்கள் என்று வேதனையோடு தியா மேனன் பேசியிருக்கிறார். தியா மேனனும் சித்ராவும் நெருங்கிய தோழிகள் என்பது பலருக்கு தெரியும். சித்ரா இறந்த செய்தியை அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் கஷ்டத்தோடு இருந்து கொண்டிருக்கிறார்கள்.

என்ன காரணத்தால் தற்கொலை
இந்த நிலையில் அவருடைய ரசிகர்கள் அனைவரும் இவருக்கு என்ன காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டார் என்று கேட்கும் போது தான் இவருக்கு கூடுதலாக மன கஷ்டத்தோடு இருக்கிறதாம். அதனால்தான் தற்கொலை எனும் ஒரு வார்த்தையை தயவு செய்து சொல்லாதீர்கள் என்று வேதனையோடு கண்ணீரோடும் தெரிவித்திருக்கிறார். அதுவும் ரசிகர்களாகிய உங்களுக்கு அவரை தெரிந்ததை விடவும் எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

மன வலிமை மிக்கவராச்சே
நாங்கள் ஒன்றாகவே பல நேரங்களில் இருந்திருக்கிறோம். அதனால் எங்களுக்கு அவரைப் பற்றியும் அவருடைய கேரக்டர் பற்றியும் தெரியும் அவரது மன வலிமையை நான் நன்றாக உணர்ந்து இருக்கிறேன் .அதனால் அவர் இந்த கோழையான செயலை செய்யவே மாட்டார் என்று உறுதியாக கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சித்ரா அடிமட்டத்திலிருந்து பல்வேறு அவமானங்களையும் கஷ்டங்களையும் கடந்து தான் இந்த சூழ்நிலைக்கு வந்து இருக்கிறார்.

வாழ்க்கையை வென்றவர்
யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் தனியாக இந்தத் துறையில் ஜெயிப்பது என்பது சுலபமான ஒன்றல்ல இருந்தாலும் அவர் இந்த அளவிற்கு வெற்றி அடைந்து இருப்பதே பெரிய விஷயம் தான் அவரை பல பெண்களும் இன்ஸ்பிரேஷனாக நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது அவர் தற்கொலை செய்து கொண்டார் என்னும் சொல்லை மட்டும் சொல்லாதீர்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கண்ணீரோடு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications