இங்க வாங்க ப்ரோ! ஜனநாயகம் செட்டில் விஜய் கூப்பிட்டு சொன்ன அந்த வார்த்தை! நெகிழ்ந்த பிரபலம்
சென்னை: நடிகர் விஜய் தனது கடைசிப் படமாக நடிப்பதாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படம், எச். வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரடக்ஷன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம், விஜய்யின் அரசியல் நுழைவுக்கு முன்னதாக அவரது கடைசிப் படமாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் தெலுங்கில் பாலயாவின் 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டாலும், விஜய்க்காகக் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால், ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஜனநாயகம் படம் ஷூட்டிங் கில் நடந்த சம்பவம் குறித்து டிஜே அருணாச்சலம் பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜனநாயகன் டீஜே அருணாச்சலம்
'ஜனநாயகன்' படத்தில் விஜய்க்கு ஜோடியாகப் பூஜா ஹெக்டே நடிக்க, பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட்ட பல நடிகர்களும் இணைந்துள்ளனர். இந்த நிலையில், மமிதா பைஜூவுக்கு ஜோடியாக, 'அசுரன்' பட நடிகர் டீஜே அருணாச்சலம் நடித்திருப்பதை சமீபத்தில் உறுதிப்படுத்தினார். ஆரம்பத்தில் பாடகராக இருந்து, பின் 'அசுரன்' படத்தின் மூலம் நடிகராக மாறிய டீஜே, 'ஜனநாயகன்' படப்பிடிப்பில் விஜய்யுடன் ஏற்பட்ட ஒரு சுவாரசியமான சந்திப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
விஜய்யுடன் ஒரு சுவாரசியமான சந்திப்பு
"விஜய் படம் என்பதால் எனக்கு ஆரம்பத்தில் சின்ன பயம் இருந்தது. பெரிய நடிகர்... எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பதற்றம் இருந்தது," என்று டீஜே கூறினார். சூட்டிங்கில் அவருடைய காட்சி முடிந்ததும் அமைதியாக உட்கார்ந்து விடுவாராம். அப்படி எல்லாரும் அமர்ந்திருந்த போது, அருகில் ஒரு நாற்காலி இருந்ததாம். அதில் உட்காரலாமா, வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்த டீஜே போய் உட்கார போனாராம். உடனே ஓடி வந்த ஒருவர், 'இது செட் ப்ராபர்ட்டி. உட்காரக் கூடாது' எனச் சொல்லிவிட்டாராம்.
அவருக்குப் பின்னாடி உட்கார்ந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த விஜய், 'ப்ரோ.. கம் அண்ட் சிட் ஹியர்' எனச் சொல்ல, டீஜேவுக்கு ஒரே நடுக்கமாம். ஏனெனில் விஜய்யைச் சுற்றிப் பாதுகாவலர்கள் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் விஜய் சொன்ன பிறகு என்ன என நினைத்து அவர் அருகில் போய் உட்கார்ந்தாராம். பின் டீஜேவைப் பற்றி எல்லாவற்றையும் விசாரித்த விஜய், அதன் பிறகு விஜய்யுடன் நன்றாகப் பேச ஆரம்பித்துவிட்டாராம் டீஜே. "இப்போது ஒரு மணி நேரம் ஆனாலும் விஜயுடன் தான் பேசிக் கொண்டிருக்கிறேன்," என டீஜே நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்தச் சம்பவம் விஜய்யின் எளிமையையும், சக கலைஞர்களிடம் அவர் காட்டும் அன்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
டீஜே அருணாச்சலம் - ஒரு பன்முகக் கலைஞர்
டீஜே அருணாச்சலம் ஒரு பாடகராகவும், இசையமைப்பாளராகவும் தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். இவரது தனித்துவமான குரல் வளமும், இசையமைக்கும் திறமையும் இவருக்கு ஒரு தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்தன. ஹிட்டான பாடல்கள்: டீஜே பாடிய பல பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. அவற்றில் சில, 'கண்ட கனவு' (அவரது யூடியூப் சேனலில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்),'எந்தன் இதயத்தில்' (அசுரன்) இன்னும் பல சுயாதீனப் பாடல்கள்.

அசுரன் மூலம் நடிகராக மாற்றம்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' திரைப்படம், டீஜேவின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில் தனுஷின் மகனாக அவர் நடித்திருந்தது, அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதுடன், பரவலான பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது.'ஜனநாயகன்' தவிர, டீஜே தற்போது சில படங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரது நடிப்பு மற்றும் இசையமைப்பாளர் என இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
விஜய்யின் அரசியல் பிரவேசம்
'ஜனநாயகன்' படத்திற்குப் பிறகு விஜய் முழு நேர அரசியல்வாதியாகச் செயல்படப் போகிறார். இப்போதே அது சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இன்று பனையூரில் கட்சி சேர்க்கை சம்பந்தமான வேலையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 'ஜனநாயகன்' திரைப்படம், விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கான ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன?












Click it and Unblock the Notifications