சபையில் முதல் காதலை பேசிய பெண்.... உங்களுக்கு அந்த தைரியம் இருக்கா?"
சென்னை: ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா விவாத நிகழ்ச்சி சபையில் தனது முதல் காதலை 20 வருடம் கழித்து வெளிப்படையாக பேசிய பெண். நம்மால் பலருக்கும் வராத துணிச்சல் அல்லவா இந்த பெண்ணுக்கு!
தமிழா தமிழா நிகழ்ச்சியின் இந்த வாரம் அதாவது வரும் வார விவாத தலைப்பே ஒளிவு மறைவின்றி வாழ்ந்து மகிழ்ச்சி அடைந்தது குறித்துதான்.
சில விஷயங்களை சொல்லக் கூடாது என்று பெரியவர்களே மணப்பெண்ணுக்கும் ஆணுக்கும் கூட சொல்லிக் கொடுத்து இருப்பார்கள். இதற்கு விடை சொல்வதாக இருக்கும் இந்த நிகழ்ச்சி.

கரு. பழனியப்பன்
ஜீ தமிழ் டிவியில் இயக்குநர் கரு. பழனியப்பன் ரொம்ப சக்ஸஸ் ஃ புல்லா நடத்திக்கொண்டு இருக்கும் ஒரு நிகழ்ச்சி தமிழா தமிழா விவாத நிகழ்ச்சி. ஜீ தமிழ் டிவிக்கு பார்வையாளர்களை அதிகரிக்க செய்த ஒரு நிகழ்ச்சி இது என்று கூட பெருமையாக சொல்லலாம்.

சமைக்க தெரியும்
ஒரு பெண் சொன்னார்.. நான் பிளஸ் 2 எழுதிட்டு ரிசல்ட்டுக்காக காத்து இருந்தேன் சார். அப்போ நல்ல மாப்பிள்ளை வந்தாச்சுன்னு எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க அப்பா அம்மா முடிவு செய்தாங்க. அப்போ, எங்க பொண்ணுக்கு நல்லா சமைக்க தெரியும், காபி போட தெரியும்னு பொய் சொல்லி இருந்தாங்க.

சமைக்க தெரியாது
தனியா பேசும்போது அவர்கிட்டே சொன்னேன்.. எனக்கு சமைக்க காபி போட எதுவும் தெரியாது. ரிசல்ட்டுக்காக காத்து இருக்கேன். எனக்கு மேல படிக்கணும்னு ஆசை. ஆனால், அப்பா அம்மா பார்த்து வைக்கும் மாப்பிள்ளையைத்தான் கல்யாணம் செய்துக்குவேன்.அது நீங்களா இருந்தாலும் சரி. நான் படிக்கணும்.. என்னை படிக்க வச்சால் உங்களை கல்யாணம் செய்துக்கறேன்னு சொன்னேன்னு சொன்னார்.

என் பிள்ளைகள்
அதே போல நேர்மையா இருக்க என் ரெண்டு பெண்களுக்கும் கத்து கொடுத்து இருக்கேன் சார்.நெருக்கமான தோழி காலேஜில் தப்பு செய்தாலும்..காட்டிக்கொடுத்துருவான்னு பெருமையா சொன்னார். இதனால் என் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொன்னார்.

தன் முதல் காதல்
அப்போது சபையில் பேசிய இன்னொரு நடுத்தர வயது பெண், சார் எல்லார் வாழ்க்கையிலும் முதல் காதல்னு ஒண்ணு இருக்கும் சார். எனக்கும் இருந்துச்சு. வீட்டில் ஒத்துக்க மாட்டாங்கன்னு தெரியும் அது முடிஞ்சு போச்சு. இப்போ ஒரு ஜவுளிக் கடைக்கு போயி ஒரு சட்டை எடுத்துக்கொண்டு வந்து.. ஏங்க நான் முதலில் ஒருத்தரை காதலிச்சேன். அவருக்கு இந்த கலர் சட்டை பிடிக்கும். அதனால் நீங்களும் போட்டுக்கோங்கன்னு சொன்னால், அடுத்த நாள் நான் அந்த வீட்டில் இருக்க முடியுமா சார்னு கேட்டு அரங்கத்தை அதிர அவைத்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications