ஆர்த்தி பஞ்சாயத்தே முடியல.. இப்ப "ஹெத்தையம்மா"வை சீண்டிய பிரதர்.. தலைமை செயலாளரிடம் போன நீலகிரி ஜனம்
ஊட்டி: ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினரின் குடும்ப பிரச்சனை ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும், பிரதர் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. ஆனால், இந்த படத்தின் ஒரு பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.. அதுவும் நீலகிரியிலிருந்து.. என்ன காரணம்?
ராஜேஷ் டைரக்ஷனில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி, பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கி வரும்படம் "பிரதர்".. ஸ்கீரின் சீன் மீடியா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் எம்.எஸ்.பாஸ்கர், நட்ராஜ், பூமிகா, சரண்யா, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது..

இதையொட்டி இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது.. இதிலுள்ள பாடல்களும் இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன.
ஆனால், இந்த படத்தில் "ஹெத்தையம்மா, ஹெத்தையம்மா" என்ற குத்துப்பாடல் ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடலுக்குதான் நீலகிரியிலுள்ள படுகர் இன மக்கள், தங்களது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். படுகர் இன மக்களின் இந்த ஆவேசத்துக்கு என்ன காரணம்? ஹெத்தையம்மன் பாடலை எதிர்க்க என்ன காரணம்?
படுகர் இன மக்கள்: நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, 400- க்கும் அதிகமான கிராமங்களில் படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.. இவர்கள் அனைவருக்குமே குலதெய்வமாக உள்ளவர்தான் ஹெத்தையம்மன்.. தங்கள் மூதாதையராக இந்த பெண் தெய்வத்தைதான், காலம் காலமாக வழிபட்டு வருகிறார்கள்..
மற்ற மதங்களில் உள்ளதுபோல பண்டிகைகள், திருவிழாக்கள் படுகர் இன மக்களுக்கு கிடையாது.. வருடத்துக்கு ஒருமுறை, அதாவது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் வழிபாடு நடைபெறும். இந்த வழிபாட்டுக்காக உலகில் எந்த மூலையில் படுகர்கள் வாழ்ந்து வந்தாலும், அவர்கள் திரண்டு நீலகிரிக்கு வந்துவிடுவார்கள்.
அர்ப்பணிப்பு: மக்களுக்காகவே அர்ப்பணித்து மறைந்த, ஹெத்தையம்மனை நினைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.. இதற்காக படுகர் இனத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 48 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள். அஞ்சலி நிகழ்வு என்பதால், ஆண்கள், பெண்கள் என அனைவருமே வெண்ணிற உடையில் ஆடல் பாடலுடன் அம்மனை போற்றி வழிபடுவார்கள்.
இந்த ஹெத்தையம்மனை தரிசிக்க வரும் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து படுகர்கள் வருவார்கள் என்பதால், இந்த துக்க நிகழ்வை 7 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த 7 நாட்களும் பக்தர்கள் யாரும் பசியால் திரும்பிச் செல்லக்கூடாது என்பதற்காக அன்னதானம் நடந்து கொண்டேயிருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாருமே உணவு அருந்தாமல் சாப்பிடக்கூடாது.
வழிபாடு: ஹெத்தையம்மனுக்கு வேறு எந்த வழிபாடும் கிடையாது.. அம்மன் என்பதால், கோரிக்கை, வேண்டுதல்களை பக்தர்கள் முன்வைக்க மாட்டார்கள். ஹெத்தையை வழிபட்டால், உழைத்து சாப்பிட கை, கால்களில் பலம் கிடைக்கும் என்பது படுகர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இப்படி ஹெத்தையம்மனை புனிதமாக கருதி வழிபட்டு வரும்நிலையில், இதன் வரலாறு தெரியாமல், திரைப்பட பாடலில் பயன்படுத்தப்பட்டிருப்பது, தங்கள் மனதை புண்படுத்தியிருப்பதாக, நம்மிடம் வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள் படுகர் இன மக்கள்.
இதுகுறித்து, மாவட்ட காவல்துறைக்கும் புகார் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள்.. அந்த புகாரில் "ஜெயம் ரவி படத்தில் இடம் பெற்றுள்ள "ஹெத்தையம்மா" என்ற பாடல், ஒட்டுமொத்த சமூகத்தையும் புண்படுத்தும் விதமாக உள்ளது.. தெய்வத்தின் மீதான முழு மரியாதையற்ற பாடலாக இது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த படம் வெளிவருவதற்கு முன்பேயே, அந்த பாடலில் உள்ள வரிகளை நீக்க உதவவேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
தலைமை செயலாளர்: அதேபோல, தமிழக தலைமை செயலாளருக்கும், உருக்கமான வேண்டுதல் ஒன்றை விடுத்துள்ளனர்.. திரு. வேணுகோபால் தர்மலிங்கம் தலைமையிலான படுகர் இன மக்கள் சார்பில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதில், படுகர் இன சமுதாய பிரதிநிதிகளுடன் இணைந்து, தலைமை செயலாளர் "பிரதர்" படத்தை பார்வையிட்டு, தங்களின் மனக்குறையை தீர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். பிரதர் படம் வெளியாக இன்னும் சில நாட்கள் உள்ளதால், அதற்கு முன்பாகவே இந்த படத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுத்தால் உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications